இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இன, மத மோதல் களுக்கு இனி இட மில்லை.! – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் எந்தவொரு இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார். நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் நடைபெற்ற 42ஆவது தேசிய மீலாதுன் விழாவில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக இடம்பெற்ற இன மோதல்களால் இலங்கை பாரிய அழிவுகளைச் சந்தித்துள்ளதாகவும், அந்தக் கொடூரமான அனுபவங்களின் பாதிப்பை இன்றைய தலைமுறையினரும் எதிர்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, நாட்டில் மீண்டும் எந்தவொரு இன மோதலும் உருவாகுவதற்கு இடமளிக்கப்படாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலைப்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டின் நீதித்துறை தொடர்பிலும் கருத்து தெரிவித்த அவர், நீண்டகாலமாக வழக்குகள் முடிவுக்கு வராமல் இருப்பதால் மக்கள் நீதியின் மீதான நம்பிக்கையை இழக்கும் நிலை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளிநொச்சியில் ரயில் கடவையில் கோர விபத்து – சிறுமி பலி

கிளிநொச்சி – யாழ் பல்கலைக்கழக வீதியில் உள்ள ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய சிறுமி  உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில், கடவையை கடக்க முற்பட்ட காரை மோதியுள்ளது.விபத்துக்குள்ளான காரில் பயணித்த 17 வயதுடைய சிறுமி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்.புங்குடுதீவு கடற்கரையில் அடையாளம் காண முடியாத நிலையில் சடலம்

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு கடற்கரையில் இன்று (26) காலை அடையாளம் காண முடியாத நிலையில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கடற்றொழிலுக்காக கடலுக்குச் சென்ற சிலர் குறித்த சடலத்தை அவதானித்ததைத் தொடர்ந்து, சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். கடற்கரையில் கரையொதுங்கியுள்ள சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுவதால், இதுவரை உயிரிழந்தவர் யார் என்பது தொடர்பில் அடையாளம் காணப்படவில்லை. சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில் குடிநீர் விநியோகம் – நீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், உள்ளூராட்சி மன்றங்களின் ஊடாக சுமார் 9,500 குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட அரச அதிபர் ஜே. எஸ். அருள்ராஜ் தெரிவித்துள்ளார். அத்துடன், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு பொதுமக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகவும் கவனமாகவும் பயன்படுத்துமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில், மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ். அருள்ராஜின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதன்போது, எல் நினோ தாக்கம் காரணமாக மாவட்டத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் அவற்றை குறைப்பதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது. மேலும், பிரஜாசக்தி வேலைத்திட்டங்கள், மாவட்டத்தில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு

இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் 1ஆவது சேவைக்கு BIA இல் உற்சாக வரவேற்பு – வாரத்திற்கு 3 சேவைகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் இருந்து இலங்கையின் கொழும்பு நோக்கிய ஜெட்ஸ்டார் ஏர்வேஸ் (Jetstar Airways) நிறுவனத்தின் முதலாவது விமானம் நேற்று (25) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA) வந்தடைந்தது. இலங்கைக்கான ஜெட்ஸ்டாரின் புதிய விமான சேவையின் ஆரம்பத்தை முன்னிட்டு, விமான நிலையத்தில் விசேட நீர் பீச்சி வரவேற்பு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து, இலங்கையின் பாரம்பரிய கலை மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் வகையில் கண்டிய நடனக் கலைஞர்களின் சிறப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன திடீர் கள விஜயம்!

யாழ். சிறைச்சாலைக்கு நீதி அமைச்சர் ஹர்ஷன திடீர் கள விஜயம்! யாழ்ப்பாணத்திற்கு நேற்று (25) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் செயற்பாடுகள் மற்றும் நிலைமைகளை நேரில் கண்காணிப்பதற்காக கள விஜயமொன்றை மேற்கொண்டார். இதன்போது சிறைச்சாலை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய அமைச்சர், கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளை கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் சம்பந்தப்பட்ட படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள், துறைசார் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரையும் ஒன்றிணைத்து, குறைந்தது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கலந்துரையாடல்களை நடத்தி, அவசர நிலைமைகளுக்கு ஒருங்கிணைந்து முகங்கொடுக்கும் வகையில் செயற்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அத்துடன், சிறைச்சாலைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் அமைச்சர் வலியுறுத்தினார். தொடர்ந்து சிறைச்சாலையின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று அங்குள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகbத்திற்கு. தொடர்ந்தும் QR

மத்திய கிழக்கு மோதல் இன்னமும் முடிவுக்கு வராததால் எரிபொருள் விநியோகத்திற்கான QR குறியீட்டு முறையை அரசாங்கம் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். “மேற்கு ஆசியாவில் தொடரும் நெருக்கடிகள் மற்றும் ஹோர்முஸ் நீரிணை தொடர்பான நிச்சயமற்ற தன்மை என்பன உலகளாவிய எரிபொருள் விலைகள் மற்றும் விநியோகத்தில் தொடர்ந்தும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில், எரிபொருள் விநியோகத்தை முறையாக நிர்வகிப்பதற்கு QR முறை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும். QR முறைமை மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் நடைமுறையில் இருந்த போதிலும், எரிபொருள் நுகர்வானது சிறிய அளவிலேயே வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்கமைய, டீசல் பாவனை சுமார் 10 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காணாமல் ஆக்கப்பட் டோர் தின நிகழ்வுக்காக யாழ்ப்பாண த்திற்கு 400 பேரை அழைத்து வர ஏற்பாடு

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (25) நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தின நிகழ்வில் பங்கேற்பதற்காக, பிற மாவட்டங்களிலிருந்து சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவுள்ள இந்நிகழ்வு, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில் இடம்பெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து இடைக்கால நிவாரணமாக 2 இலட்சம் ரூபாய் பெற்றவர்களில் தெரிவுசெய்யப்பட்ட சுமார் 400 பேர் பஸ்கள் மூலம் அழைத்துவரப்படவுள்ளனர். இவர்களுடன் இணைந்து நிகழ்வில் 450க்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என மண்டப ஏற்பாட்டுத் தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம் மேற்கொள்ளும் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

டுபாயில் சிக்கிய ‘பஸ் லலித்’ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்!

துபாயில் கைது செய்யப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினரான “பஸ் லலித்” எனப்படும் லலித் கன்னங்கர என்பவர், மேலதிக விசாரணைகளுக்காக மத்திய குற்ற விசாரணைப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். ‘பஸ் லலித்’ இன்று (25) அதிகாலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார். குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் குழுவினால் அவர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார். டுபாய் பாதுகாப்புப் படையினரால் கடந்த நாட்களில் கைது செய்யப்பட்ட ‘பஸ் லலித்’ மீது மனிதக்கொலை, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் கப்பம் கோருதல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சந்தேகநபருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கையும் (Red Notice) பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவிசாவளை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பண்டார வன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்;

பண்டாரவன்னியனின் 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல்; ரவிகரன் எம்.பியின் தலைமையில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு வன்னிப் பெருநிலப்பரப்பின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு ஒல்லாந்தக்கோட்டையில் நிலைகொண்டிருந்த ஆங்கிலேயப் படைகள்மீது தாக்குதல் மேற்கொண்டு வெற்றியீட்டிய 223ஆம் ஆண்டு வெற்றிநாள் நினைவேந்தல் நிகழ்வுகள் 25.08.2026இன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் உணவெழுச்சியுடன் இடம்பெற்றது. அந்தவகையில் முல்லைத்தீவு நகரில் அமைந்துள்ள மாவீரன் பண்டாரவன்னியனின் சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம் ஜெகதீசன், கலையரசி கமலேஸ்வரன், தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ், தவராசா அமலன், சமூக ஆர்வலர்களான மணிவண்ணன் நிறோஜன், மரியநாயகம் மரியஎனஸ்ரின் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க