07 அதிகாரிகள் உட்பட 27 பேரை பலியெடுத்த சிறை மோதல்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.அதன்படி, 07 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட 27 ஆக உயர்ந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை ஒன்றை நடத்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளதாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நிமல் ஜி. புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். அதற்காக நேற்று (06) நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு தமது அதிகாரிகள் குழுவொன்றை அனுப்பிய போதிலும், அங்கு நிலவிய அமைதியற்ற சூழல் காரணமாக விசாரணைகளை ஆரம்பிக்க முடியாமல் போயுள்ளது. எவ்வாறாயினும், எதிர்வரும் சில நாட்களில் நீர்கொழும்பு சிறைச்சாலைக்குச் சென்று குறித்த சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக நிமல் ஜி. புஞ்சிஹேவா…
மேலும் படிக்க