பிள்ளையானுடன் தொடர்புடைய 5 கொலைகள் தொடர்பான அறிக்கை
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ) கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) வழிகாட்டுதலின் கீழ் மட்டக்களப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 5 முக்கிய மனிதக் கொலைகள் தொடர்பான இரகசியத் தகவல்களைக் தகவல்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளன.இந்த விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை இன்று (15) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின்படி, இந்த 5 கொலைகளும் மட்டக்களப்பு பிராந்தியத்தை மையமாகக் கொண்டு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன: கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை. பிள்ளையான் குழுவினரால் கோரப்பட்ட கப்பப் பணத்தை (Extortion) வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டமை. TMVP அமைப்பிற்குள் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாகப் பிள்ளையானின் சொந்தக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களே…
மேலும் படிக்க