பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு,: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்
கர்நாடக வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் 3 தமிழர்கள் பலி: தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், அனூர் தாலுகா வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் வனத்துறையினரின் துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டு மூன்று நாட்களாகியும் இதுவரையில் கர்நாடகா அரசின் சார்பில் உரிய நீதி விசாரணையோ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து எந்த அறிவிப்பும் இல்லாததால் கர்நாடக அரசின் போக்குவரத்துக் கழக பேருந்தை சிறைபிடித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் உயிரிழந்த தமிழர்களுக்கு நீதி கேட்டு போராட்டம்.
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் (அனூர்) தாலுகாவில் அமைந்துள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில், வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அந்தப் பகுதியில் வசித்து வந்த ஆண்டனி சாமி (50), ஜான் ரோஸ் பீட்டர் (42) மற்றும் குமார் (35) ஆகிய 3 தமிழர்கள் உயிரிழந்தனர். மேலும் ஜோசப் மகிமை தாஸ் என்பவர் காயமடைந்தார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், ஹனூர் காவல்துறை வனத்துறை அதிகாரிகள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவு 103(1)-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டம்
இச்சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் கர்நாடக அரசு சார்பில் உரிய நீதி விசாரணையோ, உயிரிழந்த தமிழர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி மற்றும் அரசு வேலைவாய்ப்போ வழங்கப்படவில்லை எனக் கூறி தமிழக வாழ்வுரிமைக் கட்சி (TVK) மற்றும் பல தமிழ் அமைப்பினர் சார்பில் போராட்டம் வெடித்தது.
போராட்டத்தின் போது கர்நாடக மாநிலப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டு, கர்நாடக வனத்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்தும் துப்பாக்கிச்சூடு நடத்திய அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

