முல்லை கோம்பாவில் ஜனசக்தி முன்பள்ளியின் விளையாட்டு விழா

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, கோம்பாவில் ஜனசக்தி முன்பள்ளிச் சிறார்களின் வருடாந்த விளையாட்டுவிழா 27.03.2026நேற்று சிறப்புற இடம்பெற்றது.
குறித்த விளையாட்டுவிழா நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார்.
அந்தவகையில் இந்நிகழ்வானது விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பமானது. குறிப்பாக விருந்தினர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், முன்பள்ளிச் சிறார்களின் மேலைத்தேய இசைக்கருவிகளின் அணிவகுப்பு மரியாதையுடன் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து சிறார்களின் விளையாட்டுக்கள் ஆரம்பமாகின. அத்தோடு சிறார்களின் இசையும் அசைவும் மற்றும் விநோத உடை ஆகிய நிகழ்வுகள் பார்வையாளர்யாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்திருந்தன.
அதேவேளை விளையாட்டுக்களில் வெற்றியீட்டிய சிறார்கள் இதன்போது பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டதுடன், விளையாட்டுக்களில் பங்கேற்ற சிறார்களுக்கு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வில் விருந்தினர்களாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு மேம்பாட்டு பேரவையின் தலைவரும் ஓய்வு நிலை பிரதிகல்விப்பணிப்பாளருமான பொன்.பேரின்பநாயகம், புதுக்குடியிருப்பு பண்பாட்டு பேரவையின் ஆலோசகரும், ஓய்வு நிலை பிரதிகல்விப்பணிப்பாளருமான ச.நாகரட்ணம், ஓய்வுநிலை கோட்டக்கல்விப் பணிப்பாளர் சி.பாஸ்கரன், கோம்பாவில் விக்னேஸ்வரா வித்தியாலய முதல்வர் யோ.மகேஸ்வரன், சிறி சுப்பிரமணிய வித்தியாசாலையின் முதல்வர் தா.மங்களரூபன், புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.ச.சிவமணி, கோம்பாவில் கிராமசேவையாளர் பி.ஹமில்டன் டயஸ் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

