உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை டொனால்ட் ட்ரம்ப்  அறிவித்து ள்ளார்.

ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளில் அமெரிக்கா முன்னேற்றம் கண்டு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நேற்று (24) செய்தியாளர்களிடம் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். போர் முடிவுக்கு கொண்டுவருதற்கான நடவடிக்கையில் ஈரானுக்கு ஒரு முக்கியமான சலுகையை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேவேளை, அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சத் தீர்வுத் திட்டத்தை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உயர்மட்ட பேச்சுவார்த்தைகளை அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) மற்றும் இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) ஆகியோர் முன்னெடுத்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  அறிவித்துள்ளார். பகைமையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்காக ஈரானில் உள்ள சரியான நபர்களுடன் அமெரிக்கா பேசி வருவதாகவும், ஈரானியர்கள் ஒரு ஒப்பந்தத்தை…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய த்தில் பாரிய வெடிப்பு!

டெக்சாஸ் மாநிலத்தின் போர்ட் ஆர்தரில் (Port Arthur) அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதி குடியிருப்பாளர்கள் உடனடியாக வீடுகளுக்குள்ளேயே பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த பாரிய வெடிப்பைத் தொடர்ந்து வானில் கரும்புகை சூழ்ந்துள்ளதோடு, வெடிப்புச் சத்தத்தினால் அருகில் உள்ள வீடுகள் கூட அதிர்வடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த வெடிப்புச் சம்பவத்தினால் இதுவரை உயிர்ச்சேதங்களோ அல்லது காயங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. ஆயினும், காற்றின் தரம் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் கதவு மற்றும் ஜன்னல்களை மூடிக்கொண்டு வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அழைப்பின் பேரில் ஈரானியக் கப்பல் ‘டெனா’ (DENA), இலங் கைக்கு வந்ததாக அலிரெசா தொல் கோஷ் தெரிவிப்பு.

இலங்கைக்கு அருகிலுள்ள கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலால் அழிக்கப்பட்ட ஈரானியக் கப்பல் ‘டெனா’ (DENA), இலங்கையின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்ததாக இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரெசா தொல்கோஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் கப்பல் எந்தவொரு இராணுவ நோக்கத்திற்காகவும் நாட்டிற்குள் வரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, இலங்கையின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் வந்த கப்பலை, அமெரிக்கா எந்தவித முன்னறிவிப்பும் இன்றித் தாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில் 104 பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களில் பெரும்பாலானோர் இராணுவ சார்பற்ற ஓர் இசைக் குழுவின் உறுப்பினர்கள் ஆவர். அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீதான ஈரானின் தாக்குதல்கள், அந்த அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுபவை அல்ல என்பதை வலியுறுத்த வேண்டும்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இதில் 5,000 பவுண்ட் (சுமார் 2,268 கிலோகிராம்) எடை கொண்ட ‘டீப் பெனெட்ரேட்டர்’ மற்றும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளதுசில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள கடினமாக்கப்பட்ட ஈரானிய மிசைல் தளங்களுக்கு பல 5,000 பவுண்ட் டீப் பெனெட்ரேட்டர் முனிஷன்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இந்தத் தளங்களில் உள்ள ஈரானிய ஆண்டி-ஷிப் க்ரூஸ் மிசைல்கள் (கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள்) சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் (அல்லது பெருமளவு…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் பாரிய தாக்குதல்

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று திங்கட்கிழமை  அதிகாலை ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.விமான நிலையத்திலிருந்த எரிபொருட் கிடங்கை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.மத்தியகிழக்கிலுள்ள அமெரிக்க நலன்களை அழிக்கும் வகையில் இத்தாக்குதல் அமைந்தது. இதனால் வானைத் தொடுமளவு புகை மண்டலம் தென்பட்டது. பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து தெரியும் அளவுக்கு அடர்த்தியான கரும்புகையை  வானத்தில்  காண முடிந்தது.  துபாய் ஊடக அலுவலகம் இந்த தாக்குதலை  உறுதிப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி  வைப்பதாக அறிவித்து, பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று  வலியுறுத்தப்பட்டது .தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் சட்டபூர்வ உரிமை களை மதித்து, இழப்பீடு களை வழங்க! ஈரான் ஜனாதிபதி

போரை நிறுத்த வேண்டுமானால் ஈரானின் சட்டபூர்வ உரிமைகளை மதித்து,இழப்பீடுகளை வழங்க இஸ்ரேலும் அமெரிக்காவும் முன்வர வேண்டுமென ஈரான் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் தெரிவித்துள்ளார். போரை நிறுத்துமாறு தொடர்ச்சியாக விடப்படும் வேண்டுகோளுக்கு பதிலளித்துள்ள ஈரான் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது;எதிர்கால ஆக்கிரமிப்பைத் தடுக்க உறுதியான சர்வதேச உத்தரவாதங்கள் அவசியம். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானின் இருப்பையும் உரிமையையும் அங்கீகரிக்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட காசா பகுதியிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும்.வலிந்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் ஏற்பட்ட அழிவுகளுக்கு இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டும்.இவற்றை செய்தால் மாத்திரமே போரை நிறுத்துவது சாத்தியப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.இரு தரப்பிலும் தாக்குதல்கள் தீவிரமடைந்தாலும் ஈரானின் நிலைப்பாடு இன்னும் மாறாதுள்ளதையே இந்நிபந்தனைகள் வௌிப்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.அயல்நாடுகளை தாக்குவதில்லை என ஈரான் அறிவித்த பின்னரும் சில நாடுகள் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டிய ஈரான் ஜனாதிபதி, சில சதிகளை அரங்கேற்றி போரின் போக்கை மாற்றுவதற்கு அமெரிக்கா…

மேலும் படிக்க
உலக செய்திகள் சிறப்புச் செய்தி 

ஈரான் கொத்துக் குண்டுகளை பயன் படுத்துவதாக இஸ்ரேலிய இரா ணுவம் குற்றம் சாட்டு!

ஈரான் தனது ஏவுகணைத் தாக்குதல்களில் கொத்துக்குண்டுகளை பயன்படுத்துவதாக இஸ்ரேலிய இராணுவம் (IDF) மற்றும் சர்வதேச ஊடகங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஈரானின் Fateh போன்ற ஏவுகணைகள் விண்ணிலிருந்து வரும்போது, தரைக்குச் சில கிலோமீட்டர் உயரத்திலேயே வெடித்துச் சிதறுகின்றன. அதன் உள்ளே இருக்கும் சிறிய குண்டுகள் ஒரு பெரிய கால்பந்து மைதானம் போன்ற பரப்பளவில் மழையெனப் பொழிகின்றன. இஸ்ரேலின் Iron Dome போன்ற அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளுக்கே இது பெரும் சவாலாக உள்ளது. ஒரு ஏவுகணையைத் தடுப்பது எளிது, ஆனால் விண்ணிலேயே பிரிந்து பல துண்டுகளாக வரும் நூற்றுக்கணக்கான சிறு குண்டுகளைத் தடுப்பது மிகக் கடினம். சமீபத்திய தாக்குதல்களில் மத்திய இஸ்ரேலின் பல பகுதிகளில் இத்தகைய குண்டுகள் விழுந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் ஈழப் போரின் போதும் கொத்துக்குண்டுகள் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அதனை நிருபிக்கக்கூடிய சாட்சியங்களும் உள்ளன என்கின்றனர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் போர்க் குற்றத்திற்கு இணையான ஒரு செயல்”எஸ்மாயில் பாகேய்

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ‘ஐரிஸ் டெனா’ கப்பல் மூழ்கடிக்கப்பட்ட சம்பவத்தினை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் வர்ணித்துள்ளார். இந்திய கடற்படையுடனான கூட்டு கடற்படை பயிற்சி மற்றும் துறைமுக விஜயத்திற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கடந்த புதன்கிழமை இந்தியா மற்றும் இலங்கை கடற்கரையோரங்களுக்கு அருகில் இக்கப்பல் தாக்கப்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் எஸ்மாயில் பாகேய் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ‘X’ தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,இத்தாக்குதலை “போர்க்குற்றத்திற்கு இணையான ஒரு கொடூரமான செயல்” என வர்ணித்துள்ளதுடன், “கடற்படையினரை மீட்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா திட்டமிட்டே தடுத்தது” என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தச் சம்பவத்தில் 104 கடற்படையினர் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்களில் 84 பேரின் சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் ஈரானுக்கு விரைவில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான இராணுவ நடவடிக் கையை பிரான்ஸ் ஜனாதிபதி

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு, சர்வதேச வர்த்தகத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் திறப்பதற்கான ஒரு “முன்னோடியில்லாத” இராணுவ நடவடிக்கையை பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அறிவித்துள்ளார். சர்வதேச எரிசக்தி மற்றும் வர்த்தகப் போக்குவரத்தை உறுதி செய்வதற்காக, பிரான்ஸ் தனது கடற்படையின் ஒரு பெரும் பகுதியை மத்திய கிழக்கு கடற்பரப்பில் நிலைநிறுத்த உத்தரவிட்டுள்ளது.இது ஒரு தற்காப்பு மற்றும் பாதுகாப்பு ரீதியான நடவடிக்கை என பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் ஈரானின்! மறுத்துள்ளஅமெரிக்க.

இலங்கை கடற்பரப்பிற்கு அண்மையில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் IRIS Dena கப்பல், ஆயுதங்களற்ற நிலையில் இருந்ததாக வெளியாகும் தகவல்களை அமெரிக்க இந்தோ-பசுபிக் கட்டளைப்பீடம் மறுத்துள்ளது. சர்வதேச சட்டங்களின்படி அந்தப் போர்க்கப்பல் ஒரு முறையான இராணுவ இலக்கு (Legitimate Military Target) என்றும் அந்தப் போர்க்கப்பலை அழிப்பதற்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதி உண்டு எனவும் அமெரிக்கத் தரப்பு விளக்கமளித்துள்ளது. இதற்கமைய அந்த கப்பல் அழிக்கப்பட்டதாகவும், ஆயுத மோதல் சட்டங்களுக்கு இணங்க, இச்சம்பவத்தில் உயிர் தப்பியவர்களுக்கு இலங்கை தரப்பினால் உயிராபத்து ஏற்படாத வகையில் மனிதாபிமான உதவி மற்றும் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது. அத்துடன் ஒபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic Fury) நடவடிக்கையின் கீழ், ஈரானிய இராணுவச் சொத்துக்கள் அனைத்தும் இலக்கு வைக்கப்படுவதாக அமெரிக்கா முன்னரே எச்சரித்திருந்தது. சர்வதேச கடல்சார் சட்டங்களின்படி, ஒரு நாட்டின் போர்க்கப்பல்…

மேலும் படிக்க