உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

குவைத்தில் அமைந்து ள்ள அமெரிக்க இராணுவ முகாமான ‘அரிப்ஜான் மீது. குறிவைத்து தாக்குதல்

குவைத்தில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ முகாமான ‘அரிப்ஜான்’ (Arifjan) தலைமையகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மிகவும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் இராணுவம் புதிய பதிலடித் தாக்குதல் தொடர் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய தாக்குதலானது “உண்மை வாக்குறுதி” நடவடிக்கையின் 27 ஆவது அலை என ஈரான் இராணுவம் பெயரிட்டுள்ளது.இதேவேளை குவைத் சர்வதேச வானூர்தி நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இதன்போது எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகியுள்ளன. குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா வானூர்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை வானூர்தி நிலைய வளாகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சிய முனையத்தை இலக்கு வைத்து இந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா!

 கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா! அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் “முக்கிய” அங்கமாக…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தை’ கட்டுப்படுத்த தவறிய அமெரிக்க செனட்

ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை முறியடித்துள்ளது இந்த நடைமுறைத் தீர்மானத்திற்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் அளிக்கப்பட்டன.லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து வரும் சூழலிலேயே இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க செனட் சபையானது குடியரசுக் கட்சியினரின் (Republicans) கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிரான போரை ஆதரிப்பதாலும், இந்த முயற்சி முறியடிக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்தது.எவ்வாறாயினும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது நடைமுறைக்கு வர ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும். தனது போர்க் கொள்கைக்கு எதிராக அமையும் இத்தீர்மானத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிப்பார் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை மீறி இச்சட்டத்தை…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அறிவிப்பு

மத்திய கிழக்கின் 14 நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகளை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களை முன்னெடுத்துள்ள நிலையில், நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்திற்கொண்டு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதற்கமைய பஹ்ரைன், எகிப்து, ஈரான், ஈராக், இஸ்ரேல், ஜோர்தான், குவைத், லெபனான், ஓமான், கட்டார், சவுதி அரேபியா, சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் பிரஜைகள் இவ்வாறு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில்  ரியாத்திலுள்ள அமெரிக்க தூதரகம் மீது இரண்டு ஆளில்லா வானூர்திகள் தாக்கியுள்ளன. இதன் விளைவாக சிறு அளவில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதுடன் கட்டடத்திற்கு சிறிய அளவில் பொருட்சேதம் ஏற்பட்டதாக சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.இதேவேளை ஈரான் மீது கடந்த சனிக்கிழமையன்று அமெரிக்காவும், இஸ்ரேலும் குண்டுவீச்சுத் தாக்குதல்களைத் தொடங்கியதை…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்

ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தொடர்ச்சியாக நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் மூவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் என ஐக்கிய அரபு அமீரகப் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.அத்துடன், இந்தத் தாக்குதல்களின் காரணமாக இலங்கை பிரஜை ஒருவர் உட்பட பல்வேறு நாடுகளையும் சேர்ந்த 58 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமீரகத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகளை மீறி வந்த ஈரானிய ட்ரோன்கள் தரையில் விழுந்து வெடித்ததாலேயே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.ஈரான் ஐக்கிய அரபு அமீரகத்தை நோக்கி 165 பலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளதுடன், அவற்றில் 152 ஏவுகணைகளைப் பாதுகாப்புத் தரப்பினர் வானிலேயே அழித்து வெற்றி கண்டுள்ளனர். எஞ்சிய 13 ஏவுகணைகள் கடலில் விழுந்துள்ளன. இதற்கு மேலதிகமாக,…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

காசாவில் போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்

காசாவில் கடந்த ஒக்டோபர் 10 இல் ஏற்பட்ட போர்நிறுத்ததை மீறி இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று (31) காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 31 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 6 இற்கும் மேற்பட்டோர் குழந்தைகள் என்று தெரியவந்துள்ளது.காசா நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பு, பொலிஸ் நிலையம், கான் யூனிஸில் உள்ள ஒரு அகதிகள் கூடார முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. குறிப்பாக கான் யூனிஸ் அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டனர். காசா நகர் குடியிருப்புத் தாக்குதலில் 3 குழந்தைகள், அவர்களது அத்தை மற்றும் பாட்டி என 5 பேர் பலியாயினர்.காசா நகரில் உள்ள பொலிஸ் நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில்…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா தற்காலிகமாக நிறுத்தம்.அமெரிக்க

ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற வீசா (Immigrant Visa) வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் நடைமுறைக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான நடைமுறைகள் திரையிடல் (screening) மற்றும் சரிபார்ப்பு (vetting) நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு வீசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இந்த வீசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும்…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி மக்களை வலியுறுத்தியுள்ளார்.

மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரானில் மதகுருமார்களின் தலைமைத்துவத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை கைவிடாது தொடருமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அந்நாட்டு மக்களை வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலமாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை ஈரானிய அரசாங்கம் கையாண்டு வரும் நிலையில், போராட்டக்காரர்களுக்குத் தேவையான உதவிகள் விரைவில் வந்து சேரும் என ஜனாதிபதி ட்ரம்ப் உறுதியளித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த உதவிகள் எத்தகையவை அல்லது அவை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த மேலதிக விபரங்கள் எதனையும் அவர் வெளியிடவில்லை. ஈரானில் கடந்த பல வருடங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய மக்கள் எழுச்சியாகக் கருதப்படும் இப்போராட்டங்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்டுள்ள இந்த கருத்துக்கள் சர்வதேச ரீதியில் கவனத்தைப் பெற்றுள்ளன. ஈரானில் நிலவிய கடும் விலைவாசி உயர்வு…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம்

ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டம்   ஈரானில் கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் அந்நாட்டு உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனிக்கு எதிராக கடந்த மாதம் 28ஆம் திகதி முதல் மக்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம், தற்போது அந்நாட்டின் மதச்சார்பு ஆட்சிக்கு எதிரான புரட்சியாக வெடித்துள்ளது. சுமார் 2 வாரங்களை நெருங்கும் இப்போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஈரானின் தலைமை வழக்கறிஞர் முகமது மொவாஹேதி ஆசாத் விடுத்துள்ள எச்சரிக்கையில், “போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், அவர்களுக்கு உதவுபவர்கள் ‘கடவுளின் எதிரிகளாக’ (Enemy of God) கருதப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார். ஈரானிய சட்டப்படி இந்தக் குற்றச்சாட்டுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.…

மேலும் படிக்க
உலக செய்திகள் செய்திகள் 

வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ ‘சிறைப்பிடிப்பு

நாடு முழுவதும் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ஜனாதிபதி மதுரோவின் அரசாங்கம் தேசிய அவசரகால நிலையை (National Emergency) பிரகடனப்படுத்தியுள்ளது.   இன்று (03) சனிக்கிழமையன்று, வெனிசூலாவின் கராகஸில் உள்ள லா கார்லோட்டா விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதுடன், அங்கிருந்து புகை கிளம்புவதைக் காண முடிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், அப்பகுதியில் விமானங்கள் மிகத் தாழ்வாகப் பறந்ததாகவும் தெரிவிக்கப்படுன்றன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஒரு “இராணுவ ஆக்கிரமிப்பு” என வர்ணித்துள்ள வெனிசுலா அரசாங்கம், தமது நாட்டின் சிவிலியன்கள் மற்றும் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கப் படைகள் நடத்திய இந்தத் தாக்குதல்களின் பின்னரே அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி பிடிபட்டுள்ளதாக அமெரிக்கத் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது. தமது நாட்டு ஜனாதிபதி மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிருடன் இருப்பதை…

மேலும் படிக்க