இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கை – வியட்நாம் இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்

வியட்நாமிற்கும், இலங்கைக்கும் இடையிலான நேரடி விமான சேவைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து, வியட்நாம் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான முதலாவது விமானம் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது. வியட்நாமின் ஹோ சி மின் நகரத்திலிருந்து வருகை தந்த VN-671 என்ற இலக்கத்தைக் கொண்ட இந்த எயார்பஸ் A-320 ரக விமானம் நேற்று (16) இரவு 11.02 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. இதற்கு பாரம்பரிய நீர் தாரை மரியாதை செலுத்தப்பட்டு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. இந்த முதலாவது விமானப் பயணத்தின் மூலம் 164 பயணிகள் வருகை தந்திருந்தனர். அத்துடன் அதே விமானத்தில் 172 பயணிகள் மீண்டும் வியட்நாம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றனர். இந்த நேரடி விமான சேவையின் கீழ் வாரத்தில் 03 நாட்கள், குறிப்பாக ஞாயிறு, புதன் மற்றும் வெள்ளி ஆகிய கிழமைகளில் கட்டுநாயக்கவிற்கும் வியட்நாமிற்கும் இடையில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவும் நிகழ்ச்சித் திட்டம்

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட துறைசார் மன்றத்துடன் இணைந்து, ஊடகத் துறைக்கான உப துறைசார் மன்றத்தை நிறுவுதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் கொழும்பில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சித்திட்டம் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அரச சேவை மறுசீரமைப்பு மற்றும் திட்டமிடல் பிரிவின் மேலதிக செயலாளர் சாந்தி வீரசிங்க உள்ளிட்ட அப்பிரிவின் அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அனுசரணையுடன் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. துறைசார் மன்றங்கள் அமைக்கப்படும் விதங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அரச அதிகாரிகளுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் மேலதிக செயலாளர் சாந்த வீரசிங்க, சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி தீபா லியனகே, தபால் மாஅதிபர் ருவன் சத்குமார, அரச…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர் வெழுச்சியுடன் முன்னெடுப்பு;

செஞ்சோலைப் படுகொலையின் 20ஆம்ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு; ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – வள்ளிபுனம் செஞ்சோலை வளாகத்தில், கடந்த 2006.08.14அன்று இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலைசெய்யப்பட்ட 53மாணவியர்களுக்கும், நான்கு பணியாளர்களுக்குமான 20ஆம்ஆண்டு நினைவேந்தல் 14.08.2026இன்று உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சி.குகநேசனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தல் நிகழ்வானது, படுகொலை இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக சுடரேற்றப்பட்டு, மலர்மாலை அணிவிக்கப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வுகளில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர்களான சி.குகநேசன், இ.கிரிதரன், அ.சற்குணதாஸ், த.தர்மலவன், ஜீ.ராதிகா, சு.வளர்மதி, மு.கஜேந்தினி, முன்னாள் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ச.ஜீவராசா, சமூகசெயற்பாட்டாளர் த.யோகேஷ்வரன், பொதுகமக்கள் எனம் பலரும் பங்கேற்றிருந்தனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

1093 வெளிநாட்டவர்களை நாடுகடத்த தீர்மானம்

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சைபர் குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளுடன் தொடர்புடைய 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள அனைத்து வெளிநாட்டவர்களையும் நாடுகடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எப்.யூ. வுட்லர் இதனைத் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 26 சம்பவங்கள் தொடர்பில் 573 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 2025ஆம் ஆண்டு இடம்பெற்ற இரண்டு சம்பவங்களில் மேலும் 26 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட 24 சுற்றிவளைப்புகளின் மூலம் 1,093 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

மேலும் படிக்க
தமிழ்நாடு இந்தியா செய்திகள் பொதுவான செய்திகள் 

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது

இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 9 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள விவகாரம் தொடர்பில் மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்த அடுத்த வாரம் புதுடெல்லி செல்லவுள்ளதாக தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். ”தமிழக மீனவர்கள் தொடர்பான பிரச்சினை குறித்து மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. இது தொடர்பில் தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடியுள்ளேன். அவரின் ஆலோசனையின் பிரகாரம் அடுத்த வாரம் புதுடெல்லி சென்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் மத்திய மீன்வளத்துறை அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் ஆகியோரை சந்தித்து, தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடவுள்ளோம். தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விரைவில் சாதகமான முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மாந்தை கிழக்கில் விளையாட்டுக் கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் – ரவிகரன்

மாந்தை கிழக்கில் விளையாட்டுக்கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள நான்கு விளையாட்டுக்கழகங்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் 12.08.2026இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக விளையாட்டுக்கழகங்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200,000ரூபாய் பெறுமதியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை என்பவற்றை வழங்கிவைத்தார். அந்தவகையில் செல்வபுரம் கலைமகள் விளையாட்டுக்கழகம், பாண்டியன்குளம் இளங்கதிர் விளையாட்டுக்கழகம், பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டுக்கழகம், விநாயகபுரம் ஈஸ்வரன் விளையாட்டுக்கழகம் ஆகிய நான்கு விளையாட்டுக்கழகங்களுக்கும் தலா 50,000ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை என்பன நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது. அத்தோடு தன்னிடம் கோரிக்கைவிடுத்த 28விளையாட்டுக் கழகங்களுக்காக, தனது 2026ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 1.4மில்லியன்ரூபாய் நிதியினை நாடாளுமன்ற…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஆனைக்கோட்டை தொல்லியல் அகழ்வாய்வுப் பொருட்கள் நாளையும் நாளை மறுதினமும் காட்சிப் படுத்தப்படும்!

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் அகழாவாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருட்கள் நாளை (13.08.2026) வியாழக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (14.08.2026) வெள்ளிக்கிழமை ஆகிய இருதினங்கள் தொல்லியல் ஆய்வுத்தளத்தில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன. இக் கண்காட்சியில் நமது முன்னோர் பயன்படுத்திய அரிதான பொருட்கள், பண்டைய பண்பாட்டு எச்சங்கள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் பலவும் இடம்பெறவுள்ளன. இக் கண்காட்சியில் ஈழத்தின் பண்டைய வரலாற்றினையும் ஆனைக்கோட்டைப் பிரதேசத்தின் தொன்மைச் சிறப்பையும் சான்றுகளுடன் மக்கள் நேரில் கண்டு உணர்ந்துகொள்ள முடியும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் தமது வரலாற்று மற்றும் தொல்லியல் அறிவை மேம்படுத்திக்கொள்ள இதுவொரு சிறந்தவாய்ப்பாகும். எனவே மாணவர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் குறிப்பிட்ட இரு தினங்களிலும் வருகை தந்து இக் கண்காட்சியைப் பார்வையிட்டு நமது பண்டைய வரலாற்று சிறப்புகளை அறிந்துகொள்ளுமாறு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சர்வதேச கராத்தே போட்டியில் களமிறங்கும் யாழ்.இளைஞர்!

யாழ்ப்பாணத்தைப் பூர்வீகமாகக் கொண்ட கராத்தே வீரரும், அவுஸ்திரேலியாவில் பொறியியலாளராகப் பணியாற்றி வருபவருமான ரத்னம் ரோஸி ஹரிந்த், அவுஸ்திரேலிய தேசிய கராத்தே அணிக்குத் தெரிவாகி தாய்லாந்தில் ஆரம்பமாக வுள்ள, சர்வதேச கராத்தே போட்டியில் பங்கேற்கவுள்ளார். யாழ். சென்.ஜோன்ஸ் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும், யாழ். இந்துக் கல்லூரியில் உயர்கல்வியையும் தொடர்ந்த இவர், மொறட்டுவப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை நிறைவு செய்தவராவார். அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து கிறிபித் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதுகலைப் பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், தற்போது அவுஸ்திரேலியாவில் புவித்தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணியாற்றி வருகின்றார். கராத்தே துறையில் 6ஆம் டான் தரத்தைப் பெற்றுள்ள இவர், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இயங்கிவரும் துமுளு கராத்தே பாடசாலைகளின் ஊடாக, ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் பலி.

யாழில் அதிகளவான போதைப்பொருளை உள்ளெடுத்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது கோப்பாய் தெற்கு பகுதியைச் சேர்ந்த  33 வயதுடையவரே நேற்றுமுன்தினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் நேற்றுமுன்தினம் இரவு கோப்பாய் தெற்கு பகுதியில் உள்ள வாழை தோட்டம் ஒன்றுக்குள் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் அவரை மீட்ட நண்பர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். இருப்பினும் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். அவரது சடலம் மீதான உடற்கூற்று பரிசோதனைகளின் அடிப்படையில், அதிகளவான போதைப்பொருள் பாவனையால் மரணம் சம்பவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். சாட்சிகளை கோப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தொண்டமாநகரில் இரு பாரவூர்திகள் மோதி கோர விபத்து; இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.

கிளிநொச்சி A9 வீதியின் தொண்டமாநகர் பகுதியில் இன்று (12) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச் சென்ற இரண்டு பாரவூர்திகள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பாரவூர்தி தொண்டமாநகர் பகுதியில் வீதியோரமாக நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்குவதற்கு முற்பட்டிருந்த நிலையில், அதே திசையில் பின்னால் பயணித்த மற்றுமொரு பாரவூர்தி அதன்மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பாரவூர்தியின் சாரதி உதவியாளராகப் பணியாற்றிய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 21 வயதுடைய சத்தியராசா சஞ்சயன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். மேலும், 28 வயதுடைய பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க