தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மாந்தை கிழக்கில் விளையாட்டுக் கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் – ரவிகரன்

மாந்தை கிழக்கில் விளையாட்டுக்கழகங்களுக்கு சீருடை மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார் – ரவிகரன் எம்.பி

முல்லைத்தீவு – மாந்தைகிழக்கு பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள நான்கு விளையாட்டுக்கழகங்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் 12.08.2026இன்று விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக விளையாட்டுக்கழகங்களின் கோரிக்கைக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 200,000ரூபாய் பெறுமதியில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை என்பவற்றை வழங்கிவைத்தார்.

அந்தவகையில் செல்வபுரம் கலைமகள் விளையாட்டுக்கழகம், பாண்டியன்குளம் இளங்கதிர் விளையாட்டுக்கழகம், பாலிநகர் ஸ்கைலாப் விளையாட்டுக்கழகம், விநாயகபுரம் ஈஸ்வரன் விளையாட்டுக்கழகம் ஆகிய நான்கு விளையாட்டுக்கழகங்களுக்கும் தலா 50,000ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடை என்பன நாடாளுமன்ற உறுப்பினரால் வழங்கிவைக்கப்பட்டது.

அத்தோடு தன்னிடம் கோரிக்கைவிடுத்த 28விளையாட்டுக் கழகங்களுக்காக, தனது 2026ஆம் ஆண்டிற்குரிய பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து 1.4மில்லியன்ரூபாய் நிதியினை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் முதற்கட்ட செயற்பாடாகவே மாந்தைகிழக்கு பிரதேசத்திலுள்ள விளையாட்டுக்கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்களும், சீருடைகளும் வழங்கிவைக்கப்பட்டன.

மேலும் இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மாந்தைகிழக்கு பிரதேசசெயலாளர், பிரதேசசெயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அன்மைச் செய்தி

Leave a Comment