அண்மை செய்தி தாயகச் செய்தி 

படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து

படகுத்துறையில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மீனவ வாடிகளை விடுவிக்குமாறு – ரவிகரன் எம்.பி வலியுறுத்து மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்பிரிவில், இலுப்பைக்கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்குரிய கடலுணவுகளைக் கொள்வனவுசெய்யும் வாடிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது வலியுறுத்தலையடுத்து, ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குறித்த வாடிகளை விடுவிப்பதுதொடர்பில் கடற்படையினருக்கு கடிதமொன்றை அனுப்பிவைப்பதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் – மாந்தை மேற்கு, பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.07.2026நேற்று இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், படகுத்துறைப் பகுதி மீனவர்களின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 18.06.2026அன்று அப்பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், நிலைமைகளைப் பார்வையிட்டதுடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போது தமது கடலுணவுக்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கரும்புலிகள் நாள் ஜூலை 5-

கரும்புலிகள் நாள் ஜூலை 5- ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 5-ஆம் நாள் ஈழத் தமிழர்களால் கரும்புலிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொடைப் பிரிவான கரும்புலிகளின் முதல் தற்கொலைத் தாக்குதலை 1987-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம்  திகதி. கப்டன் மில்லர் (வல்லிபுரம் வசந்தன்)  நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இலங்கை இராணுவ முகாம் மீது வெடிமருந்து நிரப்பிய வாகனத்தை மோதி முதன் முதலாகத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் தாக்குதல் நடந்த ஜூலை 5-ஆம் நாளை, விடுதலைப் புலிகள் இயக்கம் “கரும்புலிகள் நாள்” என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, ஆண்டு தோறும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழர்களால் இந்நாள் நினைவுகூரப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மானிப்பாய் குப்பை மேடு திடீரென தீப்பற்றி எரிந்ததால் பதற்றம்

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான கழிவு சேகரிப்பு மற்றும் இயற்கை உரம் தயாரிப்பு நிலையத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது. கல்லூண்டாய் குடியேற்றத்திட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள குறித்த குப்பை மேட்டில் திடீரென தீப்பற்றியதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தீ விபத்து ஏற்பட்டதும் சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு படையினர், பல மணி நேர முயற்சிக்குப் பிறகு தீயை கட்டுப்படுத்தினர். பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த காலங்களில் சீரான கழிவு தரம்பிரிப்பு மற்றும் பராமரிப்பு காரணமாக இப்பகுதியில் தீ விபத்துகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. ஆனால் இம்முறை கழிவுப் பொருட்கள் முறையாக தரம்பிரிக்கப்படாததாலேயே தீ ஏற்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். குப்பை மேடு குடியிருப்புகளுக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

நெடுந்தீவு குடிநீர் பிரச்சினை தீர்க்க கோரிக்கை

நெடுந்தீவில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கும் வகையில், கடல்நீரை நன்னீராக்கும் (RO Plant) திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும் என ஈ.பி.டி.பி கட்சி அரசாங்கத்திடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம் கருத்து தெரிவிக்கையில், நெடுந்தீவில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 2010ஆம் ஆண்டு காலப்பகுதியில் அன்றைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் RO Plant திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார். தற்போது அந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 80,000 லிட்டருக்கும் அதிகமான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பெறப்பட்டு, சுமார் 900 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால், நெடுந்தீவில் மக்கள் தொகை அதிகரித்துள்ள நிலையில் தற்போது 1400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருவதால், தற்போதைய நீர் உற்பத்தி போதுமானதாக இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகள், ஆலயங்கள் மற்றும் அரச…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மேயரை பதவி நீக்கிய வடக்கு ஆளுனரின் வர்த்தமானிக்கு ஜீலை 15 வரை இடைக்கால தடை:

வவுனியா மாநகரசபை மேயரை பதவி நீக்கிய வடக்கு ஆளுனரின் வர்த்தமானிக்கு ஜீலை 15 வரை இடைக்கால தடை: வவுனியா மேல் நீதிமன்றம் உத்தரவு! வவுனியா மாநகர மேயர் சு.காண்டீபன் அவர்களை பதவி நீக்கி வடமாகாண ஆளுனர் வெளியிட்ட வர்த்தமானிக்கு வவுனியா மேல் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். ஆளுனரின் முடிவினை சவாலுக்கு உட்படுத்தி மனுதாரரான வவுனியா மாநகரசபை மேயர் சு.காண்டீபன் தொடுத்த வழக்கு இன்று (03.07) வவுனியா மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டது. இது தொடர்பாக மனுதாரர் சார்பில் ஆயஜராகிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, வட மாகாண ஆளுநர் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வவுனியா மாநகர மேயர் காண்டீபனின் பதவியை நீக்கி அறிவித்தார். அதற்கு எதிராக எழுத்தாணை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முல்லை. ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டு யானையின் அட்டகாசம்

முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டடைப்பகுதியில் காட்டுயானையின் அட்டகாசம் அதிகாரித்து வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள். வீடுகளில் நெல்மூடைகளை வைத்திருக்கமுடியாத நிலை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னரும் வீடு ஒன்றிற்குள் புகுந்த காட்டுயானை நெல்பைகளை உடுத்து நாசாம் செய்து உண்டுள்ளது.இந்த நிலையில் இன்று(03.07.2026) அதிகாலை வேலை ஒட்டுசுட்டான் 14 ஆம் கட்டைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைந்த மாதிரி பண்ணையாளர் கூட்டுறவு சங்கத்திற்குள் புகுந்த காட்டுயானை களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்ட அறையின் கதவினை உடைத்து துவம்சம் செய்துவிட்டு அங்கிருந்த 6பை நெல்லினை எடுத்து உண்டு நாசப்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மாணவர்களின் பாதுகாப்புக்காக கிளிநொச்சி A9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு

பாடசாலை மாணவர்களின் பாதுகாப்புக்காக கிளிநொச்சி A9 வீதியில் கனரக வாகனங்களுக்கு நேரக் கட்டுப்பாடு – இன்று சாரதிகளுக்கு அறிவுறுத்தல் கிளிநொச்சி A9 வீதியின் இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரை பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், ரிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களின் போக்குவரத்துக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் கடந்த ஜூன் 30 ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற வீதி விபத்துகளைத் தடுப்பது மற்றும் எதிர்கால சந்ததியினரை நல்வழிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டது. அதன்படி, தினமும் காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை மற்றும் பிற்பகல் 1.00 மணி முதல் 2.00 மணி வரை, இரணைமடு சந்தி முதல் பரந்தன் சந்தி வரையிலான A9 வீதிப் பகுதியில் ரிப்பர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

வண்ணான்கேணி வடக்கில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காணியின்றி தவிப்பு

கிளிநொச்சி மாவட்டம், வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக  கவலை தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து, கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருக்கும் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அக்கடிதத்தில் கிராம மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: “எமது கிராமத்தில் வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்குவதற்கு சொந்தக் காணி இல்லாத நிலையில், உறவினர்களின் வீடுகளிலும், மற்றவர்களின் காணிகளிலும் தற்காலிகமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அசௌகரியங்களையும், நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர். இப்படியான சூழ்நிலையில், எமது கிராமத்தின் பின்புறமாக அமைந்துள்ள அரசின் ஒதுக்கீட்டுக் காப்புக் காணிகளை, பிரதேச செயலகத்தின் ஊடாக பொதுப் பயன்பாட்டுக்காக (வெகுசமூகத்திற்காக) வழங்குவதற்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கொக்குத் தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: விளக்கம் கோரி ரவிகரன்

கொக்குத்தொடுவாய் அத்துமீறிய உப்பள நிருமாணம்: தற்போதைய நிலை குறித்து விளக்கம் கோரி ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்குக் கடிதம்! முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறிய முறையில் அமைக்கப்பட்டு வரும் உப்பளத்தை தடுத்துநிறுத்துவது தொடர்பில் மாவட்டச் செயலாளரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் குறித்த பகுதியில் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்துவது தொடர்பான தற்போதைய நிலை குறித்தும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளருக்கு 2026.06.29 அன்று கடிதமொன்றை அனுப்பியுள்ளார். அக்கடிதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினரால் மேற்கண்டவாறு கோரப்பட்டுள்ளது. அந்த வகையில் கொக்குத்தொடுவாய் பகுதியில் அத்துமீறி உப்பளம் அமைப்பதைத் தடுத்தல் மற்றும் மக்களுக்குச் சொந்தமான காணிகளை எல்லைப்படுத்தல் தொடர்பாக தற்போதைய நிலை குறித்து வினவல்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா;

ஒதியமலை தான்தோன்றி பிள்ளையார் ஆலயத்தில் அடிக்கல் நாட்டுவிழா; ரவிகரன் எம்.பி பங்கேற்பு. முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட, ஒதியமலை தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் புதிய கட்டுமானப் பணிகளை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா 02.07.2026 நேற்று இடம்பெற்றது. இந் நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் குறித்த ஆலயத்தின் கருவறை, முருகன் சந்நிதானம், நாகதம்பிரான் சந்நிதானம், வசந்தமண்டபம், வைரவர் சந்நிதானம் என்பவற்றுக்கு புதிய கட்டடங்களை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராசரத்தினம் கிரிதரன் அவர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க