தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை.

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுவந்தன் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.  குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்பபணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக் கூடாது – ரவிகரன் எம்.பி

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.05.2026நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

அணு நிழல்களின் மீள்வரம் ரஷ்யாவின் சர்மாத் ஏவுகணை, நேட்டோவின் பாதுகாப்பு அச்சம்,

அணு நிழல்களின் மீள்வரம் ரஷ்யாவின் சர்மாத் ஏவுகணை, நேட்டோவின் பாதுகாப்பு அச்சம், மற்றும் புதிய பனிப்போரின் எழுச்சி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ புதிய மூலோபாய யுகத்தின் தோற்றம் உலக பாதுகாப்பு அமைப்பு இன்று பனிப்போருக்குப் பிந்தைய காலத்தின் மிக ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது. ரஷ்யாவின் RS-28 “சர்மாத்” கண்டம் தாண்டும் அணு ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையும் அதனை விரைவாக போர்பணிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையும் உலக அரசியல் சமநிலையை ஆழமாக மாற்றியமைத்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சர்மாத் ஏவுகணையை சாதாரண அணு ஆயுதமாக அல்லாமல், மேற்கத்திய உலகின் முழு பாதுகாப்பு அமைப்புகளையும் முறியடிக்க வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை “அடக்க முடியாத” ஆயுதமாக வர்ணித்துள்ளார். இது…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில். முள்ளிவாய்க் கால் இனப்படு கொலை யின் 17வது ஆண்டு நினைவேந்தல்

தமிழினத்தின் வலி நிறைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்றைய தினம் 12.05.2026 செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ​​இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்துகொண்டு நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவேந்தல்​நிகழ்வின் தொடக்கத்தில், உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூறும் முகமாக மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச் சுடர்களும் ஏற்றப்பட்டன.தொடர்ந்து இறுதிப் போரின் போது மக்கள் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்கவும், உயிர் வாழவும் ஆதாரமாக விளங்கிய வரலாற்றுச் சுவடுமிக்க ‘உப்பில்லா கஞ்சி’ பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் கஞ்சி:ஒரு இனத்தின் குறியீடு

முள்ளிவாய்க்கால் கஞ்சி: ஒரு இனத்தின் ஈழத் தமிழர்களின்மன உறுதியையும் பறைசாற்றும் ஒரு குறியீடு முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது வெறும் உணவுப் பண்டம் அல்ல; அது ஈழத் தமிழர்களின் வரலாற்றில் அழியாத வடுக்களையும், அதே சமயம் அவர்களின் மன உறுதியையும் பறைசாற்றும் ஒரு குறியீடு. வரலாற்றுப் பின்னணி 2009-ஆம் ஆண்டு ஈழப்போர் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, வன்னிப் பெருநிலப்பரப்பில் மக்கள் ஒரு சிறிய பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டனர். அங்கு உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை இலங்கை அரசு தடுத்ததால், கடும் பஞ்சம் ஏற்பட்டது. அந்தப் பயங்கரமான சூழலில், கிடைத்த சொற்ப அரிசியைக் கொண்டு அதிக நீர் சேர்த்து காய்ச்சப்பட்ட இந்தக் கஞ்சியே பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைக் காத்தது. கஞ்சியின் முக்கியத்துவம் பசியின் அடையாளம்: குண்டுகள் மழைபோல் பொழிந்த வேளையிலும், பதுங்கு குழிகளுக்குள் இருந்த மக்களுக்குக் கிடைத்த ஒரே ஆகாரம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நேற்றையதினம் ஆரம்பமானது

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமானது நேற்றையதினம் ஆரம்பமானது. யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இதன்போது காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் ஒரு பிரிவாகவும், தமிழ் தேசியப் பேரவையினர் ஒரு பிரிவாகவும் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிப்பில் ஈடுபட்டனர். இதேவேளை முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற வலி நிறைந்த நினைவுகளை சுமந்தவாறு முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியும் வடக்கு – கிழக்கு எங்கும் பயணிக்க தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் ஆத்மா சாந்தி வேண்டி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து ஆலய முன்றலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இடம்பெற்றது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்திற்கும் ரவிகரன் எம்.பிக்குமிடையில் சந்திப்பு இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த் அவர்களுக்கும் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களுக்குமிடையில் 12.05.2026இன்று முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களது மக்கள் தொடர்பகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப்பிராந்தியத்தில் நிலவும் நிலஆக்கிரமிப்புக்கள், விவசாயிகள் மற்றும் மீனவமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன. மேலும் இதன்போது முள்ளிவாய்கால் கஞ்சி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்கு தெளிவுபடுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி புலச் செய்திகள் 

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்!

கனடாவில் வரலாறு படைத்த தமிழினப் படுகொலை நினைவகம் திறக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவு நாள்! கனடாவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழினப் படுகொலை நினைவகம் (Tamil Genocide Monument) திறக்கப்பட்டு நேற்றுடன் (மே 11, 2026) ஓராண்டு நிறைவடைந்துள்ளது. கடந்த 2025-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி, சிங்குவாசி பூங்காவில் (Chinguacousy Park) ஆயிரக்கணக்கான மக்களின் முன்னிலையில் இந்த நினைவகம் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. ஈழத் தமிழர்களின் பூர்வீக தாயகமான தமிழீழத்தின் வரைபடம் மற்றும் வடக்கு-கிழக்கின் ஒன்பது மாவட்டங்களைக் குறிக்கும் ஒன்பது தூண்களுடன் 4.8 மீட்டர் உயரத்தில் இந்த நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணி: 2021-இல் யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிக்கப்பட்டதற்குப் பதிலடியாக, பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் (Patrick Brown) தலைமையிலான மாநகராட்சி இந்த நினைவகத்தை அமைப்பதாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அக்கரைப் பற்று. உதிரம் கொடுப் போம், உயிர் காப்போம்’ இரத்ததான முகாம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை உட்பட இங்குள்ள இதர வைத்தியசாலைகளில் தற்போது நிலவி வரும் இரத்தப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தினரால் அப்பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் ஒழுங்கு செய்யப்பட்டு ‘உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம்’ என்ற தொனிப்பொருளின் கீழ்  இரத்ததான முகாம்  நேற்று நடைபெற்றது. பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்ததான முகாமில்  பொதுமக்கள் உட்பட பெருமளவு பிரதேச செயலக ஊழியர்கள்  மனமுவந்து தமது உதிரத்தை வழங்க முன்வந்தனர்.வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி டாக்டர் இஷான் குணவர்தன தலைமையிலான மருத்துவக் குழுவினர் தமது இரத்தத்தை வழங்க முன்வந்தோரின் உடல் பரிசோதனைகளை மேற்கொண்டதை அடுத்து அவர்களின் இரத்தத்தை பெற்றுக்கொண்டனர். இரத்தம் வழங்கிய நன்கொடையாளர்களின் இந்த கைங்கரியத்துக்கு தனது  நன்றியையும்  பாராட்டையும்   பிரதேச செயலாளர் அன்சார் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சகல கிளினிக்கு களும் வழமை போன்று. சத்தியமூர்த்தி

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சகல கிளினிக்குகளும் வழமை போன்று நடைபெறுவதாக  வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலையின் மருந்துக் களஞ்சியத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சின் துரித நடவடிக்கையின் கீழ் கொழும்பு மத்திய மருந்துக் களஞ்சியத்திலிருந்து மூன்று பாரவூர்திகள் மூலம் மருந்துகள் கொண்டு வரப்பட்டன. இதனால் கொண்டு வரப்பட்ட அனைத்து மருந்துகளும் புதிதாக தற்காலிகமாக அமைக்கப்பட்ட மருந்துக் களஞ்சியத்தில் பாதுகாப்பாக இறக்கி வைக்கப்பட்டுள்ளன.இதனால் சகல சேவைகளும் வழமைபோன்று நடைபெறுகின்றன. மேலும் ஒரு தொகுதி மருந்துகள் எதிர்வரும் நாட்களில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படவுள்ளன. கிளினிக்குகளுக்கு வருகை தரும் நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருந்துகளையும் வழங்குவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க