சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாலியல் குற்றவாளி களை காப்பாற்றாதே” – நீதி கேட்டு கொந்த ளித்த வடகிழக்கு பெண்கள்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு’ அமைப்பினால் இன்று மட்டக்கப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் “பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக…” பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மகா சங்கத்தின் ஒழுக்கக் கட்டுப்பாட்டைப் பேண விரைவில் புதிய சட்டம்! அநுரகுமார

மகா சங்கத்தினர் சங்க சமூகத்தை ஒழுக்கக் கட்டுப்பாட்டுடன் பேணிச் செல்வதற்குத் தேவையான சட்டங்களை விரைவில் தயாரித்து வழங்குவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். மாத்தறை, திஹகொட மிதெல்லவல புராதன ரஜமஹா விகாரையில் நேற்று நடைபெற்ற ‘2570 ஆவது ஸ்ரீ புத்த ஆண்டு அரச வெசாக் விழாவின்’ ஆரம்ப நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டில் நிலையான பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்கு மத மறுமலர்ச்சி இன்றியமையாததாகும். உன்னத புத்த சாசனத்தையும் தர்மத்தையும் எதிர்கால சந்ததியினருக்காகப் பாதுகாப்பதற்காக, நமக்குள்ள பொறுப்புக்களைச் சரியாக இனங்கண்டு கைகோர்ப்பதே இந்த வெசாக் புண்ணிய தினத்தில் நாம் எடுக்கக்கூடிய சிறந்த உறுதிமொழியாகும். நாம் ஆன்மிக ரீதியாக வீழ்ச்சியடையும் போதெல்லாம் அதற்கு இணையாகப் பொருளாதார ரீதியாகவும், பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடையும் போது ஆன்மிக ரீதியாகவும் வீழ்ச்சியடைந்திருக்கின்றோம்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உக்ரைன் மீது மரண நிழல்: மாஸ்கோவின் எச்சரிக்கை உலகப் போரின் புதிய கட்ட த்தை அறிவிக்கிறதா?

உக்ரைன் மீது மரண நிழல்: மாஸ்கோவின் எச்சரிக்கை உலகப் போரின் புதிய கட்டத்தை அறிவிக்கிறதா? கீவை காலி செய்ய ரஷ்யா எச்சரிக்கை — ஐரோப்பா முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தும் மாபெரும் இராணுவ பதற்றம் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ தாக்குதலை எதிர்நோக்கும் தலைநகர் கீவ் உக்ரைனின் தலைநகரமான கீவ் தற்போது முழுமையான போர் அச்சத்தின் கீழ் நிற்கிறது. சமீபத்திய மாதங்களில் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய மற்றும் திட்டமிட்ட தாக்குதல்களை நடத்தத் தயாராக இருப்பதாக ரஷ்யா வெளிப்படையாக அறிவித்துள்ளது. உக்ரைனின் “இராணுவ-தொழில்துறை அமைப்புகள்”, ட்ரோன் உற்பத்தி மையங்கள், கட்டளை தலைமையகங்கள், உளவுத்துறை மையங்கள் மற்றும் “முடிவெடுக்கும் மையங்கள்” மீது தொடர்ச்சியான தாக்குதல்கள் நடத்தப்படும் என மாஸ்கோ அறிவித்துள்ளது. இந்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

இலங்கை சிறை யிலுள்ள தமிழக மீனவர்களை விடு விக்க வேண்டும்! மோடியிடம் விஜய் கோரிக்கை

இலங்கைச் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக சென்னையில் இருந்து நேற்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார். இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்ற அவரை, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில், தமிழக தலைமைச் செயலர் சாய் குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதையடுத்து, பொலிஸ் அணிவகுப்பு மரியாதையும் விஜய்க்கு அளிக்கப்பட்டது. இதன்பின், சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடியைச் சந்தித்த முதல்வர் விஜய், அவருக்கு பூங்கொத்து கொடுத்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இருவரும் தமிழ்நாடு மற்றும் தேசிய விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். சுமார்…

மேலும் படிக்க