தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் விபத்து நால்வர் காயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பம் ஒன்றில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மரண தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து நஞ்சருந்தி உயிரை மாய்க்க முயற்சி

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சை அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதைக் கண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, உடனடியாக அவரை மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.சம்பவம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சட்டவிரோதமாகத் தயாரிக்கப்பட்ட ஜீப்புடன் ஒருவர் கைது

இலங்கைக்குள் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட வாகன உதிரி பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஜீப் ஒன்றை வைத்திருந்த 39 வயது சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். கொட்டாவ பொலிஸ் பகுதியில் மேற்கு மாகாண தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட வாகன பாகங்களைக் கொண்டு குறித்த ஜீப் தயாரிக்கப்பட்டதாகவும், செல்லுபடியாகும் வருவாய் உரிமம், காப்பீட்டுச் சான்றிதழ் அல்லது புகை உமிழ்வு சோதனை அறிக்கை இல்லாமல் அது இயக்கப்பட்டு வந்ததாகவும் பொலிசார் தெரிவித்தனர். வாகனம் தொடர்பான போலி ஆவணங்களைத் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரிலும் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வித்தாரந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவருகின்றதுமேலதிக விசாரணைகள்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

தனியார் வங்கி கிளையில் திடீரென தீ விபத்து

மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி கிளையில் இன்று சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் திடீரென தீ விபத்து இடம்பெற்றுள்ளது. வங்கி வளாகத்தில் இருந்து திடீரென கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் வெளிவருவதைக் கண்ட மக்கள் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாக இது குறித்து தீயணைப்புப் பிரிவினருக்கும், பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர். தகவலறிந்த மட்டக்களப்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினசம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயை முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். காலை நேரம் என்பதால் வங்கியில் ஊழியர்களோ அல்லது வாடிக்கையாளர்களோ இல்லாததால் உயிர்ச்சேதங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். மின்சார ஒழுக்கு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகள மூலம் சந்தேகிக்கப்படுகின்றது. விபத்தினால் ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் குறித்து இதுவரை தெரியவரவில்லை. இச்சம்பவம் குறித்து மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

புனித வெசாக் தின த்தை முன்னிட்டு,61 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைச்சாலையில் உள்ள 61 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான இன்ற சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு மற்றும்  இன்று மற்றும் நாளை ஆகிய  இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த உத்தரவானது  நேற்று மாலை முதல் அமுலுக்கு வருவதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் எந்த வொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படு கொலையும் இடம்பெறவில்லை.!சன்ன ஜயசுமன

இலங்கையில் எக்காலத்திலும், எந்தவொரு இடத்திலும் எவ்விதமான தமிழ் இனப்படுகொலையும் இடம்பெறவில்லை.நாடாளுமன்றத்திற்குள் பயங்கரவாதிகள் நினைவுகூரப்படுவது குறித்தும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசு உடனடியாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை நாட்டுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்று சர்வஜன அதிகாரம் கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் சன்ன ஜயசுமன வலியுறுத்தியுள்ளார். சர்வஜன அதிகாரம் கட்சியின் பொதுச்செயலாளர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மூன்று முக்கிய விடயங்கள் குறித்துக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:- “கடந்த மே மாதம் 18ஆம் திகதி வடக்கு மாகாணத்தின் பல இடங்களில் தமிழ் இனப்படுகொலை இடம்பெற்றதாகக் கூறி நினைவு தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. எமது நாட்டில் தமிழ் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்பதில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

உதவி செய்த மக்களுக்கு சிவாஜிலிங்கம் உருக்கமான நன்றி!

தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், மருத்துவச் சிகிச்சைக்காக நிதி உதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தனது இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில், அவசர அறுவைச் சிகிச்சைக்காக (சத்திர சிகிச்சை) தமிழ் மக்களிடம் ஊடகங்கள் வாயிலாக அவர் உதவி கோரியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது முதற்கட்ட அறுவைச் சிகிச்சை மற்றும் ஏனைய மருத்துவச் செலவுகளுக்குத் தேவையான நிதி குறுகிய காலத்திற்குள் திரட்டப்பட்டது. நிதி உதவி கிடைத்ததைத் தொடர்ந்து, ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: எஞ்சிய நிதி சமூக நலனுக்கும் மாவீரர் குடும்பங்களுக்கும்! “எனது உடல்நிலை குறித்து அக்கறை கொண்டு, சிகிச்சைக்கு நிதியுதவி வழங்கிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தமிழ் மக்களுக்கு எனது…

மேலும் படிக்க