அண்மை செய்தி தாயகச் செய்தி 

அத்தியார் இந்துக் கல்லூரியில் போதை விழிப்புணர்வு

யாழ்ப்பாணம்,  நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரியில் மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக நேற்றைய தினம் விழிப்புணர்வு  நாடககம் அரங்கு ஆற்றுகை  செய்யப்பட்டுள்ளது அண்மைக்  காலமாக அதிகளவான  இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ள போதை பாவனையிலிருந்து அவர்களை விடுவிக்கும் முகமாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே குறித்த விழிப்புணர்வு நாடகம் நேற்றைய தினம் அரங்காற்றுகை  செய்யப்பட்டுள்ளது குறித்த நிகழ்வில் மாணவர்கள் அதிக அளவில் பயன் பெற்றுள்ளன

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து தொலைத்தொடர்பு கம்பம் உடைந்து சேதம்

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், தொலைத்தொடர்பு கம்பம் இரண்டு முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இன்று (22) அதிகாலை 12.00 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட92 ம் கட்டை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சீமந்து (சிமெண்ட்) ஏற்றுவதற்காகச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த வேளையில் லொறியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் (நித்திரைச் சிறுக்கம்) காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி தொலைதொடர்பு காமத்தை உடைத்துக்குண்டு மரத்தில் மோதி  அருகில் இருந்த மற்றுமோர் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அநுரவின் வாக்குறுதிகள் எங்கே? மயிலிட்டியில் போராட்டம்

வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி , காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் “கொமோண்டோ ” பங்களா முன்பாக இன்றைய தினம் ஐந்தாவது வெள்ளிக்கிழமை போராட்டத்தினை முன்னெடுத்தனர். வலி. வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகிறது. யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும் , அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாத நிலையில் , அவை உயர்பாதுகாப்பு வலயமாகவே காணப்படுகிறது. இந்நிலையில் தமது 651 ஏக்கர் வரையிலான காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வரும் நிலையில் காணிகள்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் முதன்மைப் பணவீக்க மதிப்பு, ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது. இது மார்ச் மாதப் பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை சற்று அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவற்ற பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் வரை மிகக் கடுமையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் தேசிய பணவீக்கம் இந்த அளவுக்குத் திடீரென உயர்வடைவதற்கு, உணவற்ற பிரிவில்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

அவசரமாக திருப்பி அனுப்பப்பட்ட பல விமானங்கள்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் மத்தள சர்வதேச விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சுமார் 6 விமானங்களே இவ்வாறு மத்தள விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது தற்போது பெய்து வரும் பலத்த மழையினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் குறித்த விமானங்களை தரையிறக்க முடியாத நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்குவதற்காக வருகை தந்த 9 விமானங்கள் மத்தள விமான நிலையத்திற்கும், இந்தியாவின் கொச்சின் மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களுக்கும் திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கட்டார் நாட்டின் தோஹாவிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த கட்டார் எயார்வேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 02 விமானங்களும், சார்ஜாவிலிருந்து வந்த எயார் அரேபியா நிறுவனத்தின் 02 விமானங்களும், அபுதாபியிலிருந்து வந்த எத்திஹாட்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

சீமானுக்கு கொலை மிரட்டல் விடுத்த அர்ச்சுனா எம்.பி மன்னிப்பு கேட்க வேண்டும் டாக்டர் ராமதாஸ்

ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’ எனப் பகிரங்கமாகக் கொலை மிரட்டல் விடுத்துப் பேசியிருப்பது ஜனநாயக மரபுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், இதற்காக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க.) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது தொப்புள்கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் தங்களின் அரசியல் உரிமை மற்றும் வாழ்வுரிமைக்காக 75 ஆண்டுகளுக்கும் மேலாகப் பேரிழப்புகளுடன் விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள் என்றும், அந்தப் போராட்டக் காலங்களில் தமிழினம் பின்னடைவைச் சந்தித்ததற்குச் சகோதர யுத்தங்களும் ஒற்றுமையின்மையுமே முதன்மைக் காரணம் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் இத்தகைய சூழலில், பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா, சமீபத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானைக் குறிவைத்து, ‘ஆயுதம் இருந்திருந்தால் சுட்டிருப்பேன்’…

மேலும் படிக்க