தேசிய மக்கள் சக்தியின் யாழ் ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப் பட்டுள்ளது
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த அலுவலகமானது இன்று(23.5.2026) யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் , மாநகர சபை உறுப்பினர்களான, சு.கபிலன் , ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் , கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

