தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முள்ளிக்குளம் மக்களின் 753ஏக்கர் காணிகளை நிபந்தனை களுடன் விடுவிக்க இணக்கம்

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க இணக்கம் தெரிவித்தார் – பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர விஜயரத்தினம் சரவணன் மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவில், கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள 1012ஏக்கர் காணியில் 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர பதிலளித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் 25.05.2026இன்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக் கூட்டங்களில் முள்ளிக்குளத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் விபத்தில் இளம் தாய் ஒருவர் பலி

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் வேகமாக ஓடிதிரிந்ததாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள்குறிப்பிட்டனர். சம்பவத்தில் குறித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம்தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

களுவாஞ்சிகுடி கடலில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன்பிடிக்க சென்ற 19 வயது இளைஞனான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த சனிக்கிழமை (23) கடலுக்கு இரவு சென்றவரே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில்  மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும், அதில் அவர் இல்லாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சாதாரண தரப் பரீட்சை பெறு பேறுகள் -ஜூன் மாத நடுப் பகுதியில்

2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஜூன் மாத நடுப்பகுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே, பெறுபேறுகள் வெளியாகும் திகதி இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என கூறியுள்ளார். கடந்த பெப்ரவரி 17 முதல் 26 வரை நடைபெற்ற இந்தப் பரீட்சைக்கு 4,51,463 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 3,82,249 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களும், 69,214 பேர் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களுமாக இருப்பதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 46) யாழ். சிறைச்சாலையில் குளியல் பகுதியில் உயிர்மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. அதன்படி  அந்த தீர்ப்பை வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்தியாவின் அன்பளிப்பு; வடக்கு காவல் நிலையங் களுக்கு 134 வாகனங்கள்!

இந்தியா அரசாங்கம், இந்தியா–இலங்கை நட்பு திட்டத்தின் கீழ் இலங்கை  காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 134 ஒற்றை கெப் (Single-Cab) வாகனங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த வாகனங்கள் வட மாகாணத்திலுள்ள காவல் நிலையங்களில் சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என தெரிவித்தார்.அதேவேளை, இந்த அன்பளிப்பை பாராட்டும் வகையில் காவல்துறை.மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர்…

மேலும் படிக்க