கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்!
மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம் வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம் மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும், பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள், திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள். கடந்த பல வருடங்களாக இந்த ஈவு வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான…
மேலும் படிக்க