அண்மை செய்தி தாயகச் செய்தி 

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேச விடுதலைக்காக தன்னை அற்பணித்துச் சேவையாற்றிய மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 06.03.2026 இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறது. இந்நிகழ்வில்தலைமை அலுவலகம் த.தே.ம.முன்னணி சபாபதி வீதி கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா!

 கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா! அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் “முக்கிய” அங்கமாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்!

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்! ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஓரங்கமாக கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. எம்.பளீல் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, நேற்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் ஒருங்கிணைப்பில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’-‘அகன்று செல்’ எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது!

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது! யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதி. கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் மாயமானார்கள்.மீன்பிடிக்கச் சென்றபோது இவர்களது படகு இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்து, நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றது.அங்கு இருந்த இந்திய மீனவர்கள் இவர்களைக் கவனித்து, அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி, அவர்களது படகை இழுத்துச் சென்று இலங்கை கடல் எல்லையில் விட்டுச் சென்றனர். மீண்டும் எல்லை தாண்டிய படகு: எனினும், கடல் அலையினால் படகு மீண்டும் இழுத்துச் செல்லப்பட்டு இந்தியக் கரைக்குச் சென்றுள்ளது.காணாமல் போன ஏழாவது நாளில், நேற்று வியாழக்கிழமை தமிழகத்தின் வடக்குக் கரையில் உள்ள அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழக கடலோரக் காவல் படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர்.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண் களுக்கு எங்கே பாதுகாப்பு?

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு? நுவரெலியாவில் போராட்டம்! உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இச்சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் இருபாலாரும் இச்சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஈரானியப் போர் கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப் பேற்றுள்ளது.

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் இயந்திரக் கோளாறு காரணமாகத் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேரின்’ கப்பலை மனிதாபிமான அடிப்படையில் இலங்கை அரசு பொறுப்பேற்றுள்ளது. நேற்று வியாழக்கிழமை இரவு ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். “இந்தக் கப்பலை கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வராமல், திருகோணமலைத் துறைமுகத்துக்குக் கொண்டு சென்று அங்கு தரித்து நிறுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கப்பலில் உள்ள 208 பணியாளர்களும் முதலில் கொழும்புத் துறைமுகத்துக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் வெலிசர கடற்படை முகாமில் தங்கவைக்கப்படவுள்ளனர். ஈரானியக் கப்பலில் 300 குழந்தைகள் இருப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை. அரசியல் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் இத்தகைய வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம்” – என்றும்  ஜனாதிபதி திட்டவட்டமாகத்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

மத்திய கிழக்கு: தீவிரமடையும் அமெரிக்கா–ஈரான்–இஸ்ரேல் மோதலும் உலகளாவிய தாக்கமும்

மத்திய கிழக்கு: தீவிரமடையும் அமெரிக்கா–ஈரான்–இஸ்ரேல் மோதலும் உலகளாவிய தாக்கமும் மத்திய கிழக்கு முழுவதும் வேகமாக விரிவடைந்து வரும் மோதல் குறித்த ஆழமான புவிசார் அரசியல் மற்றும் இராணுவ ஆய்வு ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் ராணுவ விவகாரங்கள் ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ◆ பெரும் போரை நோக்கி நகரும் பிராந்தியம் மத்திய கிழக்கு நாடுகள் 21-ஆம் நூற்றாண்டின் மிகவும் ஆபத்தான புவிசார் அரசியல் கட்டத்திற்குள் நுழைந்துள்ளன. ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான மோதல் கடந்த சில நாட்களில் வியத்தகு அளவில் தீவிரமடைந்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல்கள், கடற்படைத் தாக்குதல்கள், நாசவேலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் என பல நாடுகளுக்கு போர் பரவி வருகிறது. ஆரம்பத்தில் வரையறுக்கப்பட்ட இராணுவ மோதலாகத்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தியும் மாவட்ட அரச அதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மனுவொன்றை கையளித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த மனுவில் தெரிவிக்கப்படுவதாவது, கடந்த 25.2.2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா எமது சம்மேளனத்தின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அன்றைய கூட்டத்திற்கு எம்மை அழைக்காமையால் நாம் அங்கு சமூகமாகவில்லை. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு விடயத்தை அதிகாரிகள் கையில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மிக மோசமான வார்த்தைகளால் எமது சம்மேளனம்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தை’ கட்டுப்படுத்த தவறிய அமெரிக்க செனட்

ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை முறியடித்துள்ளது இந்த நடைமுறைத் தீர்மானத்திற்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் அளிக்கப்பட்டன.லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து வரும் சூழலிலேயே இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க செனட் சபையானது குடியரசுக் கட்சியினரின் (Republicans) கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிரான போரை ஆதரிப்பதாலும், இந்த முயற்சி முறியடிக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்தது.எவ்வாறாயினும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது நடைமுறைக்கு வர ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும். தனது போர்க் கொள்கைக்கு எதிராக அமையும் இத்தீர்மானத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிப்பார் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை மீறி இச்சட்டத்தை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து நேற்று (4) இரவு புறப்பட்ட இந்தக் கப்பல், தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.மத்திய கிழக்கில் சவால்கள் நிலவினாலும், இலங்கைக்கு மசகு எண்ணெயைத் தடையின்றி கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் காலங்களில் எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான கொள்ளளவு மற்றும் வசதிகள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக தலைவர்…

மேலும் படிக்க