சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

ஐ.நா வதிவிடப் பிரதிநிதியை சந்தித்த தமிழ் பிரதிநிதிகள்

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை மேற்கொண்டுவரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி திரு.மார்க் அன்றி பிரான்சிக்கும்  தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

இன்று காலை 9.15 – 10.15 வரை இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஸ்ர சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிடப் பிரதிநிதி மார்க்-ஆண்ட்ரே ஃபிரான்ச் (Marc-André Franche) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு கடந்த செவ்வாய்க்கிழமை(24/03/2026) அன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமையத்தில் (IOM) நடைபெற்றது.

இதன்போது, வடக்கு மாகாணத்தின் தற்போதைய அரசியல் மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழல் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. நீண்டகாலமாக மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படாததால் ஏற்பட்டுள்ள பாரிய நிர்வாக இடைவெளி மற்றும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடச் சவால்கள் குறித்து ஐநாவின் வதிவிடப் பிரதிநிதிக்குச் சுட்டிக்காட்டப்பட்டது.

​குறிப்பாக, தேர்தல்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் அதிகாரப் பரவலாக்கல் சிதைவடைந்து, நிர்வாகக் கட்டமைப்புகளில் தேக்கநிலை ஏற்பட்டுள்ளதை அவர் வலியுறுத்தியதோடு, யுத்தத்திற்குப் பின்னரான வடக்கின் பொருளாதார நிலையை மீண்டும் கட்டியெழுப்புவது (Revitalization) மற்றும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் வேலையில்லாப் பிரச்சினைக்குத் தீர்வு காண அவர்களுக்கான புதிய வேலைவாய்ப்புச் சந்தர்ப்பங்களை உருவாக்குவதன் ஊடாக, அங்குள்ள வளங்களை முறையாகப் பயன்படுத்தி பொருளாதாரத்தைச் சீரமைப்பது குறித்தும் விரிவாகக் கலந்தாலோசிக்கப்பட்டது.

அன்மைச் செய்தி

Leave a Comment