மட்டக்கப்பில் கிணற்றி லிருந்து பெண் உயிருடன் மீட்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்காரைப் பிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை நெல்லிக்காடு பகுதியிலிருந்து பெண் ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதோடு, அதே கிணற்றிலிலிருந்து உயிருடன் மேலும் பெண்ணும் மீட்கப்பட்டள்ளார்.
அப்பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர் அவரது பிள்ளையுடன் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் (19) சென்றவர் வெள்ளிக்கிழமை காலை வரைக்கும் வீடு திபியிருக்கவில்லை.இந்நிலையில் நேற்று (20) காலையில் சிறிய பிள்ளை ஒன்று அப்பகுதியிலுள்ள வயற் பகுதியில் அழுது கொண்டு இருந்த நிலையில் வழியால் சென்றவர்களல் அப்பிள்ளை மீட்கப்பட்டுள்ளது.
அப்பிள்ளையின் தாயை கண்டுபிடிக்காத நிலையில் அப்பகுதியில் அமைந்துள்ள வயல்வெளியில் அமைந்திருந்த பாழ்ங் கிணற்றில் இருந்து குற்றுயிராய் அத்தாய் தாய் உயிருடன் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அந்த தாய் அணிந்திருந்த தாயின் தாலிக்கொடி களவாளப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

