தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திட்டமிட்ட அழிப்பு களிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி

திட்டமிட்ட அழிப்புகளிலிருந்து எம் இனத்தைக் காக்க மாணவர்கள் ஒழுக்கத்துடன் உயர வேண்டும்” சிறீதரன் எம்.பி தெரிவிப்பு…..! ​”எமது இனத்தின் எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது; உலகத்தரம் வாய்ந்த கல்வியோடும் கட்டுக்கோப்பான ஒழுக்கத்தோடும் நீங்கள் மிளிரும் போதே, திட்டமிடப்பட்ட அழிப்புக்களை முறியடித்து நாம் உலக அரங்கில் தலைநிமிர முடியும்” என அண்மையில், யாழ்/ அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டியில் கலந்துகொண்ட, நிகழ்வின் பிரதம விருந்தினரும் அப் பள்ளியின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். ​போருக்குப் பின்னரான சூழலில் தமிழ் தேசிய இனம் பல்வேறு நூதனமான மற்றும் திட்டமிடப்பட்ட அழிப்பு நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்து வருவதை எம்மால் அவதானிக்கமுடிகிறது. “யுத்தத்திற்குப் பின்னரான காலப்பகுதியில், தமிழ் மக்களின் இருப்பையும் அடையாளத்தையும் சிதைப்பதற்கான பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன; எமது எதிர்கால சந்ததியினரான மாணவர்களின் ஒழுக்க விழுமியங்களைச்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள ஈரானின் ஏவுகணைத் தளங்கள் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானின் தெற்கு கடற்கரைப் பகுதியில், குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) அறிவித்துள்ளது. இதில் 5,000 பவுண்ட் (சுமார் 2,268 கிலோகிராம்) எடை கொண்ட ‘டீப் பெனெட்ரேட்டர்’ மற்றும் ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளதுசில மணி நேரங்களுக்கு முன், அமெரிக்கப் படைகள் ஈரானின் கடற்கரைப் பகுதியில் ஹோர்முஸ் நீரிணை அருகே உள்ள கடினமாக்கப்பட்ட ஈரானிய மிசைல் தளங்களுக்கு பல 5,000 பவுண்ட் டீப் பெனெட்ரேட்டர் முனிஷன்களை வெற்றிகரமாகப் பயன்படுத்தின. இந்தத் தளங்களில் உள்ள ஈரானிய ஆண்டி-ஷிப் க்ரூஸ் மிசைல்கள் (கப்பல்களைத் தாக்கும் ஏவுகணைகள்) சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தியிருந்தன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல், ஈரான் ஹோர்முஸ் நீரிணையை மூடியதால் (அல்லது பெருமளவு…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. 

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை இலங்கையை வந்தடைந்தன.

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று (18) காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, மார்ச் மாதத்தில் இதுவரையில் 38,000 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், அடுத்த இரண்டு நாட்களுக்குள் மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயு கையிருப்பு நாட்டிற்கு கிடைக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். எமக்கு மார்ச் மாதத்திற்கு 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவே தேவையாயிருந்தது. எனினும், ஒரு தனியார் நிறுவனம் எரிவாயு விநியோகத்தை முடக்கியுள்ளதால், மார்ச் மாதத்திற்காக நாம் 38,000 மெட்ரிக் தொன் ஓடர் செய்தோம். அதற்கான எரிவாயுவை எமது லிட்ரோ நிறுவனம் இறக்குமதி செய்கிறது. அந்த…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கேப்பாபிலவு மக்க ளின் காணிகளை விடுவிக்க வலியு றுத்திய ரவிகரன் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம்

இராணுவத்தின் பிடியிலுள்ள கேப்பாபிலவு மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய – ரவிகரன் எம்.பி; காணிவிடுவிப்பு தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அறிக்கை கோரியுள்ள ஜனாதிபதி செயலகம் முல்லைத்தீவு – கேப்பாபிலவில் இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கடந்த 14.01.2026அன்று வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனால் ஜனாதிபதி அனுர குமாரதிஸாநாயக்கவிற்கு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய, பாதுகாப்புப் பிரிவினரிடம் வினவுதல்களை மேற்கொண்டு கேப்பாபிலவு பிரதேசத்தில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான விரிவான ஒரு அறிக்கையை உடனடியாக தமக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி செயலகம் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் கடந்த 07.01.2026அன்று இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் முல்லைத்தீவு –…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

அம்பலாந் தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் பயங்கர விபத்தில் நால்வர் உயிரிழப்பு.

அம்பலாந்தோட்டை – கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக காவல்துறைனர்.  தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறைனர்.  குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த பேருந்தும்  மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில்  காவல்துறைனர்.மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

இலங்கை க்கு வழங்கப் பட்ட உலங்கு வானூர்தி கள்.இலங்கை க்கு அனுப்பி வைப்பு.

அமெரிக்காவால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 10 TH-57 Sea Ranger ரக  உலங்கு வானூர்திகள்.தற்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் மஹிந்த சமரசிங்க தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்த 10  வானூர்திகளும்.மார்ச் 15 ஆம் திகதி அமெரிக்காவின் அலபாமாவில் உள்ள Port Mobile இலிருந்து இலங்கை நோக்கிப் புறப்பட்டுள்ளன. இவை இந்த ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.Bell 206B-3 Jet Ranger ரகத்தின் இராணுவப் பதிப்பான இந்த வானூர்திகளும்., இலங்கை விமானப்படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளன. தற்போதுள்ள Bell 206 மொடல்களுடன் இந்த  வானூர்திகளும்.இணைப்பதன் மூலம், உயர்தர விமானி பயிற்சி, பேரிடர் கால துரித செயற்பாடுகள் மற்றும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட முக்கியமான பொதுப்பயன்பாட்டு நடவடிக்கைகளுக்கான திறனை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி சந்தேகத்திற் கிடமான இடத்திற்கு நீதிபதி

குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்திற்கு இன்று நீதிபதி, சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம் ஒன்றை மேற்கொண்டனர் . 1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் படி இன்று (17) களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி , பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினர் குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான இடத்தினை பார்வையிட்டனர். இந்த குருக்கள்மடம் மனிதப்புதைகுழி சந்தேகத்திற்கிடமான பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.இதன்போது குருக்கள்மடம் மனிதப்புதைகுழி முதலாம்கட்ட அகழ்வு பணி மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார். இப்புதைகுழி எதிர்வரும் 30 ஆம்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சுதந்திர தினத்தன்று கறுப்புக் கொடி மூன்று பல்கலைக் கழக மாணவர்கள் விசாரணைக்கு அழைப்பு

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை தேசியக் கொடி இறக்கப்பட்டு, கறுப்புக் கொடி ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக  பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேரை யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர், கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் உள்ளிட்ட மூன்று மாணவர்களிடம் வாக்குமூலம் சேகரிப்பதற்காக யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் பல்கலைக்கழக பதிவாளர் எழுத்து மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கை சுதந்திர தினத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்றப்பட்டிருந்த இலங்கை தேசியக் கொடியை மாணவர்கள் சிலர் கீழே இறக்கி அதற்குப் பதிலாக கறுப்புக் கொடியைப் பறக்கவிட்டுத் தமது எதிர்ப்பை பதிவு செய்தனர். இச்சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்பட ஆதாரங்கள் மற்றும்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்க கடற் படையின் பின்வாங்கல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி

விளிம்பில் மத்திய கிழக்கு: ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள், அமெரிக்க கடற்படையின் பின்வாங்கல் மற்றும் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுத்து: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | சர்வதேச அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ✦ இஸ்ரேலையும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க இராணுவ இருப்பையும் உலுக்கிய ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் ஈரானின் உயரடுக்கு இராணுவப் படையான இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC), இஸ்ரேலிய இராணுவக் கட்டமைப்புகள் மற்றும் வளைகுடா பகுதி முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்கு வைத்து நடத்திய பாரிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு கடந்த பல தசாப்தங்களில் இல்லாத அளவிற்கு மிகவும் கொந்தளிப்பான இராணுவக் கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஈரானின் உத்தியோகபூர்வ அறிவிப்புகளின்படி, இஸ்ரேலின் வான்வெளி ஆயுத உற்பத்தி நிலையங்கள் மற்றும் வான்வழி…

மேலும் படிக்க
உலக செய்திகள் 

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் பாரிய தாக்குதல்

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது நேற்று திங்கட்கிழமை  அதிகாலை ஈரான் பாரிய தாக்குதல்களை மேற்கொண்டிருந்தது.விமான நிலையத்திலிருந்த எரிபொருட் கிடங்கை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டது.மத்தியகிழக்கிலுள்ள அமெரிக்க நலன்களை அழிக்கும் வகையில் இத்தாக்குதல் அமைந்தது. இதனால் வானைத் தொடுமளவு புகை மண்டலம் தென்பட்டது. பல கிலோமீட்டர் தொலைவிலிருந்து தெரியும் அளவுக்கு அடர்த்தியான கரும்புகையை  வானத்தில்  காண முடிந்தது.  துபாய் ஊடக அலுவலகம் இந்த தாக்குதலை  உறுதிப்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அனைத்து விமான சேவைகளையும் நிறுத்தி  வைப்பதாக அறிவித்து, பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்ல வேண்டாம் என்று  வலியுறுத்தப்பட்டது .தீயணைக்கும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

மேலும் படிக்க