சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

செருப்பு மாலை அணிவித் திருந்த தனது பதாகையை கிழித்து, அறுத்துச் சென்ற அர்ச்சுனா

யாழ்ப்பாணத்தில் செருப்பு மாலை அணிவித்திருந்த தனது பதாகையை கிழித்து, தனது காரில் அர்ச்சுனா இராமநாதன் எடுத்து சென்ற  சம்பவம் இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனை இலக்கு வைத்து அவமதிப்பான வாசகங்கள் கொண்ட 10 அடி உயர பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் பிரதான வீதியில், சின்னக்கடை பகுதிக்கு அண்மையில் இந்தப் பதாகை வைக்கப்பட்டிருந்தது.அந்தப் பதாகையில் ‘நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராஜபக்ஷ ஈனப் பிறவி’ என எழுதப்பட்டு அவரது புகைப்படத்தின் மீது செருப்புகளால் செய்யப்பட்ட மாலையும் தொங்கவிடப்பட்டிருந்தது. நேற்று இரவு இனந்தெரியாத நபர்களால் இந்தப் பதாகை அமைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.இந்நிலையில், குறித்த பதாகையின் புகைப்படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வந்தது. இந்நிலையில் காலை 10 மணியளவில் பதாகை வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு தனது காரில் வந்த அர்ச்சுனா இராமநாதன், பதாகையை கிழித்தெடுத்து, தனது காரில் எடுத்து…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழிலிருந்து தங்கம் கடத்த முற்பட்ட 08 பேரும் சுங்க அதிகாரிகள். விசாரணை செய்ய நீதிமன்று அனுமதி

யாழ்ப்பாணத்தில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 08 பேரையும் எதிர்வரும் திங்கட்கிழமை வரையில் சுங்க திணைக்கள அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்று அனுமதித்துள்ளது. காங்கேசன்துறையில் இருந்து நாகப்பட்டினத்திற்கு நேற்று முன்தினம் (17) பயணிக்க இருந்த பயணிகளில் இந்திய பிரஜைகளான இருவரின் உடைமையில் இருந்து தலா 100 கிராம் தங்க கட்டிகள் மீட்கப்பட்டன. அதனை தொடர்ந்து பயணிகளை சோதனைக்கு உட்படுத்திய வேளை சந்தேகத்திற்கு இடமான 26 பயணிகளை சுங்க திணைக்கள அதிகாரிகள் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 26 பேரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த சுங்க திணைக்கள அதிகாரிகள் 26 பேரையும் யாழ் . போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்று ஸ்கான் செய்தனர்.அதன் போது 06 பேரின் உடலினுள் தங்க கட்டிகள் காணப்பட்டுள்ளன. அதனை அடுத்து 06 பேரையும் தமது…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அர்ச்சுனா கஜேந்திரகுமார் இடையே. கடுமையான வாக்குவாதங்கள்

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம் வலி.வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன. அத்துடன் தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக இராமநாதன் அர்ச்சுனா, மிகக்கடுமையாக ஏக வசனங்களை…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் சந்தேக நபர் கைது

சிகையலங்கார நிலையத்தினுள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்தினை சமூக வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட காணொளி தொடர்பாக சந்தேக நபர் ஒருவரை மதவாச்சி பொலிஸார் கைது செய்துள்ளனர். மதவாச்சி பகுதியில் உள்ள ஒரு சிகையலங்கார நிலையத்திற்குள் நுழைந்த நபர் ஒருவர் அதன் உரிமையாளரைத் தாக்கும் காணொளி ஒன்று சமீப நாட்களாக சமூக மற்றும் மின்னணு ஊடகங்களில் பரவி வருவதைத் தொடர்ந்து, 10 ஆம் திகதி மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு ஒன்றினைச் செய்திருந்தார். இந்தக் காணொளிகள் குறித்து மதவாச்சி பொலிஸார் நடத்திய விசாரணையின் போது தாக்குதல் இச்சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை 17ஆம் திகதி புதன்கிழமை மாலை மதவாச்சி பொலிஸ் நிலைய பொலிஸ் குழுவினரால் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன் .சம்பந்தப்பட்ட தாக்குதலில் சந்தேக நபரால் பயன்படுத்தப்பட்ட கூர்மையான ஆயுதம் ஒன்றையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கைதுசெய்யப்பட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம்

புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் உயிரிழப்பு – யாழ் நெடுங்குளத்தில் சோகம் யாழ்ப்பாணம், நெடுங்குளம் பகுதியில் இன்று இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், புகையிரதத்துடன் மோதி இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய, பகலகம பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய நிரோஷன் லக்மால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, குறித்த சிப்பாய் விடுமுறைக்காக தனது சொந்த ஊருக்குச் சென்றிருந்த நிலையில், விடுமுறை காலம் முடிவடைந்த பின்னரும் நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று மீண்டும் பலாலி இராணுவ முகாமுக்கு வந்த அவரிடம், நீண்டகாலமாக கடமைக்குத் திரும்பாதமை தொடர்பில் கொழும்பிலுள்ள இராணுவ தலைமையகத்தில் ஆஜராகி விளக்கம் வழங்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் முகாமிலிருந்து வெளியேறிய அவர், அரியாலை – நெடுங்குளம் பகுதியில் புகையிரதத்துடன் மோதி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாண பொலிஸாரின்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மானிப்பாய் காணி விவகாரம்: அப்பாவி மக்களை பலிகடாவாக்க வேண்டாம்!

மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி தொடர்பாக சில சமூக வலைத்தளங்கள் மற்றும் இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் தவறான செய்திகளால் தாம் மற்றும் தமது குடும்பம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர். இதனைத் தெரிவிக்கும் வகையில் யாழ் ஊடக அமையத்தில் விசேட ஊடக சந்திப்பொன்று அண்மையில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் பாதிக்கப்பட்ட தரப்பினருடன் மானிப்பாய் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவர், இன்றைய காலச் சூழலில் ஊடகங்களின் விமர்சனங்களும் சுட்டிக்காட்டல்களும் அவசியமானவை என்றாலும், உண்மைக்குப் புறம்பான செய்திகளின் தாக்கம் அப்பாவி மக்களையும் அவர்களது குடும்பங்களையும் கடுமையாகப் பாதிப்பதாகத் தெரிவித்தார். பண்டத்தரிப்பு பகுதியில் நீண்டகாலமாக இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மானிப்பாய் பிரதேச சபைக்குச் சொந்தமான காணி ஒன்று சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டதாகவும்,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொட்டகலை திருமண மண்டப மோதல்: விலக்க சென்ற பொலிஸார் மீது தாக்குதல்

தலவாக்கலை — வட்டகொட பகுதியைச் சேர்ந்த குழுவினர் கொட்டகலை நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நேற்று (17) திருமண விழா ஒன்றை நடத்தியுள்ளனர். இதன்போது, மாலை 4.00 மணியளவில் திருமணத்திற்கு வந்திருந்த, மதுபோதையிலிருந்த இருதரப்பினரிடையே பயங்கர மோதல் வெடித்துள்ளது. அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உடனடியாகச் சென்று மோதலைச் சமரசம் செய்ய முயன்றுள்ளனர். எனினும், மோதலில் ஈடுபட்ட இருதரப்பினரும் ஒன்றாக இணைந்து அந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர். இதனையடுத்து, காயமடைந்த அதிகாரிகளை மீட்கத் திம்புள்ளை-பத்தனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் மேலதிக பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால், வன்முறைக் கும்பல் அவர்களையும் விட்டுவைக்காமல் தாக்குதல் நடத்தியுள்ளது. பொலிஸார் கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தாக்குதலுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்களைக் கைது செய்தனர். பொலிஸார் தாக்கப்படுவதைக் கண்ட கொட்டகலை நகர மக்கள் உடனடியாகச்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

தொடர்பணியில் ஏர் நிலம்..ஆழ்துளைக் கிணறு அமைப்பு.

தொடர்பணியில் ஏர் நிலம்.. 05.06.2016இல் இறைபதமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் 10வது ஆண்டு நினைவு நாள் 05.06.2026 ஆகும்.. இவ் நாளில் அவரது ஆன்மா சாந்திபெற இறைவணை வேண்டுவதோடு நினைவுகளால் வணங்குகின்றோம். இறைபமடைந்த மாரிமுத்து இராசரத்தினம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு தாயகம் மன்னார் முத்தரிப்புத்துறை 70 குடியேற்றத்திட்ட மக்களின் கோரிக்கைக்கு அமைவாக குடிநீர் தேவையினை பூர்தி செய்யுமுகமாக ஆழ்துளைக் கிணறு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டதோடு சிறப்புணவு வழங்கி ஆன்ம சாந்தி பிரார்தனையும் நடைபெற்று பயன்தரு மரக்கன்றும் நடுகை செய்யப்பட்டது… இச் செயற்திட்டத்திற்கு அவரது சுவிற்சர்லாந்து வாழ் மகள் திருமதி ராதிகா கஜேந்திரன் அவர்கள் 3,24,000/= நிதியினை வழங்கியிருந்தார். இவ் நிதியுதவி நல்கிய குடும்பத்தினர்கும் இப் பணியை நிறைவாக்கிய “ஏர் நிலம்” தொண்டமைபின் இணைப்பாளர் கவிஞர் மன்னார் பெனில், நிர்வாக இயக்குனர் திரு.தனம் நித்தி ஆகியோருக்கும் பயன்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட. அமெரிக்க ஜனாதிபதி

மேற்கு ஆசிய போரை முடிவுக்கு கொண்டுவரும் அமைதி ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதியுடனான இரவு விருந்தின்போதே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது என்று சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. ஜி7 உச்சிமாநாட்டை தொடர்ந்து வெர்சாய் அரண்மனையில் மெக்ரோனுடன் இரவு உணவு அருந்தியபோது, ​​டிரம்ப் தனிப்பட்ட முறையில் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில், அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மின்னணு முறையில் கையொப்பமிடப்பட்டுள்ளதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயியும் உறுதிப்படுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஆங்கிலக் கால் வாயில் பதற்றத்தின் தீப்பொறி ஆபத்தான கடற்படை மோதல்

ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி பிரித்தானியா, ரஷ்யா மற்றும் ஐரோப்பிய கடற்பரப்பில் அதிகரிக்கும் மோதல் அபாயம் ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர் ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ஆங்கிலக் கால்வாயில் ஆபத்தான கடற்படை மோதல் உலகின் மிக முக்கியமான மற்றும் அதிக போக்குவரத்து கொண்ட கடல் வழித்தடங்களில் ஒன்றாகக் கருதப்படும் ஆங்கிலக் கால்வாய், அண்மையில் ஒரு பதற்றமான இராணுவச் சம்பவத்தின் மையமாக மாறியுள்ளது. ரஷ்ய கடற்படையின் அட்மிரல் கிரிகோரோவிச் (Admiral Grigorovich) போர்க்கப்பல், சர்வதேச கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த பிரித்தானியக் கொடி ஏந்திய ஒரு தனியார் யாட்ச் படகின் அருகே எச்சரிக்கைத் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ எதுவும் ஏற்படவில்லை என்றாலும், பிரித்தானிய பாதுகாப்பு அமைப்புகளும்…

மேலும் படிக்க