கிளி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் விபத்தில் இளம் தாய் ஒருவர் பலி
கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே
மரணித்துள்ளார்.
உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார்
சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் வேகமாக ஓடிதிரிந்ததாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள்குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் குறித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம்தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

