இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்து ஐ.நா. அதிருப்தி

எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை தொடர்பான அறிக்கை தற்போது வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இடம்பெறும் தன்னிச்சையான கைதுகள் மற்றும் குற்றச்சாட்டுகள் இன்றி நீண்டகாலம் தடுத்து வைக்கும் நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் கவலை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதித்து, அதனை விரைவாக இரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டமொன்றை உருவாக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சீர்திருத்தம், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை இரத்து செய்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துதல் போன்ற முக்கிய மாற்றங்களை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதிகளின் அடிப்படையிலேயே தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வெளிநாடுகளி லிருந்தவாறு இலங்கையர்கள் வாக்களிப்பதற்கான உரிமையில் விசேட கவனம்

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்கிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவது தொடர்பில்,வெளிப்படைத்தன்மை மற்றும் பொதுமக்களின் நம்பிக்கை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் சந்தன அபயரத்ன தெரிவித்தார். வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் அந்நாடுகளிலிருந்தவாறே தேர்தல்களில் வாக்களிப்பது தொடர்பான பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, வருகை தந்துள்ள சர்வதேச பிரதிநிதிகளை வரவேற்பதற்கான நிகழ்வின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தேர்தல் ஆணைக்குழு, தேர்தல்கள் முறைமைக்கான சர்வதேச அமைப்பின் இலங்கை அலுவலகத்துடன் இணைந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் ஆதரவுடன் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிராந்திய பிரதிநிதிகளை உத்தியோகபூர்வமாக வரவேற்பதும், வெளிநாடுகளிலிருந்து தாய்நாட்டில் வாக்களிப்பது மற்றும் ஜனநாயக பங்கேற்பு தொடர்பான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் அறிவுப் பகிர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதே இந்நிகழ்வின் முக்கிய நோக்கங்களாகும். இலங்கையில் ஜனநாயகத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பரப்பியவர் கைது

பெண்ணொருவரின் தனிப்பட்ட புகைப்படங்களை சமூக ஊடகங்களில் அனுமதியின்றி பரப்பிய குற்றச்சாட்டில் 36 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவினரால், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, சந்தேகநபர் நேற்று (03) மதியம் கினிகத்தேனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கினிகத்தேனை பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், முறைப்பாட்டாளரை திருமணம் செய்து பின்னர் சட்டபூர்வமாகப் பிரிந்திருந்த நிலையில் இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பில் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் கண்டி உப பிரிவு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

9 இந்திய மீனவர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இந்திய மீனவர்கள், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் நிபந்தனைகளுடன் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 22ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். நேற்று (3) அவர்கள் மன்னார் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மேலதிக நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். முதலாம் மற்றும் இரண்டாம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத்தண்டனையும், மூன்றாம் குற்றச்சாட்டுக்கு தலா 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஏற்கனவே இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலையான நிலையில் மீண்டும் கைது செய்யப்பட்ட ஒரு மீனவருக்கு, 25 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் மேலதிகமாக 2 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து, நீதிமன்றம்…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மின்சார விநியோக த்தில் எந்த இடையூறும் இல்லை எரிசக்தி அமைச்சகம்

போதுமான நீர்மின்சாரம் தற்போது உற்பத்தி செய்யப்படுவதால், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைந்தபோதிலும் மின்சார விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணங்களை உயர்த்த வேண்டாம் என்று இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (PUCSL) கோரிக்கை சமர்ப்பித்த பின்னர், ஊடகங்களிடம் பேசியபோது எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், நுரைச்சோலை நிலக்கரி மின் நிலையத்தில் மின் உற்பத்தியைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் தெரிவித்தார். இரண்டு நிலக்கரி சரக்குகள் விரைவில் இலங்கைக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் கப்பல் நாளை (04) மற்றும் இரண்டாவது செப்டெம்பர் 12 அன்று வந்து சேரும்.இரு சரக்குக் கப்பல்களில் இருந்தும் நிலக்கரி இறக்கப்பட்டவுடன், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி இயல்பு நிலைக்குத் திரும்பும்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பில் பெருமளவு போதைப் பொருட்களுடன் மூவர் கைது

கொழும்பின் வெல்லம்பிட்டிய மற்றும் மட்டக்குளி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பெருமளவு போதைப்பொருட்கள் மற்றும் மின்னணு சிகரெட்டுகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு (CCD) அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேதவத்தை பகுதியில் நேற்று (02) நண்பகல் சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 4 கிலோகிராம் 170 கிராம் ஹெரோயின் மற்றும் 8 கிலோகிராம் 55 கிராம் மெத்தாம்பெட்டமைன் (ஐஸ்) ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபாய் பணமும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.கைது செய்யப்பட்டவர் சேதவத்தை, வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, வெல்லம்பிட்டிய பகுதியில் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயன்ற 130 மின்னணு சிகரெட்டுகளுடன் 26 வயதுடைய சந்தேகநபர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எல்-நினோ தாக்கத்தால் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்தால் வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எல்-நினோ காலநிலை தாக்கத்தை எதிர்கொள்வதற்காக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக, சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் நான்காவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது, எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், எல்-நினோ காலநிலையால் மரக்கறி மற்றும் பழச்செய்கைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பது தொடர்பிலும், நாட்டில் மரக்கறித் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப்பட்டது. இதுவரை ஆறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் எல்-நினோ தாக்கத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அப்பகுதி மக்களின் அன்றாட வாழ்க்கையை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் களிலிருந்து 463 கிலோ ஐஸ் மீட்பு

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களிலிருந்து நேற்று 800 கோடி ரூபா பெறுமதியான ஒரு தொகை போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானிலிருந்து கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் இந்த போதைப் பொருள் தொடர்பில், தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேற்படி கொள்கலன்களில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 463 கிலோ ஐஸ் ரக போதைப் பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்திருந்த இரகசிய தகவலையடுத்து நீதிமன்ற உத்தரவைப் பெற்றுக் கொண்டுள்ள மத்திய குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகள், இது தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது, குறித்த கொள்கலனில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொள்கலனில், துவாய்களால் சுற்றப்பட்ட நிலையில் சூசகமாக மறைத்து வைக்கப்பட்டு இந்த போதைப் பொருள் நாட்டுக்குக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கடும் வரட்சியால் ஏழு மாவட்டங்கள் பாதிப்பு;

நாட்டில் நிலவும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக 07 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 82,000 பேர், குடிநீரைப் பெறுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.நாட்டின் 24 பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள 25,647 குடும்பங்களைச் சேர்ந்த 81,929 பேர், குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து தேசிய அனர்த்த நிவாரண சேவை மத்திய நிலையம், மாவட்டச் செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, அந்நிலையத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் பிரகீத் தனன்சூரிய தெரிவித்துள்ளார் மொனராகலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய இரு மாவட்டங்களிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், அதனைத் தவிர அம்பாறை, பதுளை, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்ட மக்களும் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ள…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

துப்பாக்கி லைசன்ஸ்களை புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

துப்பாக்கி உள்ளிட்ட சுடுபடைக்கலன்களுக்கான 2027 ஆம் ஆண்டுக்கான அனுமதிப் பத்திரங்களைப் புதுப்பிக்கும் செயற்பாடுகள் இன்று (01) முதல் ஆரம்பமாகவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.அதற்கிணங்க இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நான்கு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அமைச்சு தெரிவித்துள்ளது. உரிய கால அவகாசத்துக்குள் அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பிக்கத் தவறும் அனைத்துத் துப்பாக்கி உரிமையாளர்களும் துப்பாக்கிச் சட்டக் கோவையின் 22 வது பிரிவின் விதிகளுக்கு அமைவாக, செல்லுபடியாகும் அனுமதியின்றித் துப்பாக்கி வைத்திருத்தல் என்ற குற்றத்தின் கீழ் தண்டனைக்குரியவர்களாவர் எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.இதற்கிடையில், 2027-2028 ஆம் ஆண்டுக்கான தனியார் பாதுகாப்பு முகவர் நிலையப் பதிவுப் புதுப்பித்தலும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.அதன் பின்னர் மேற்கொள்ளப்படும் புதுப்பித்தல்களுக்குத் தாமதக் கட்டணம் அறவிடப்படுவதுடன் கடுமையான சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் பாதுகாப்பு…

மேலும் படிக்க