2026 GCE O/L விண்ணப்பம் ஒன்லைனில் கோரப்பட்டுள்ளது!
இவ்வருடம் (2026) நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (2026 GCE O/L) பரீட்சைக்கான விண்ணப்பங்களைக் கோரும் நடவடிக்கையை இலங்கை பரீட்சைத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது. பாடசாலை மற்றும் தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் இருவரும் நேற்று (03) முதல் எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி வரை இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகேவினால் இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் அனைத்தும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே சமர்ப்பிக்கப்பட வேண்டும். விண்ணப்பதாரிகளுக்கான அறிவுறுத்தல்:பாடசாலை விண்ணப்பதாரிகள்: தத்தமது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இதற்கான பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் ஏற்கனவே அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனிப்பட்ட விண்ணப்பதாரிகள்: தமது தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அடையாள அட்டை…
மேலும் படிக்க