நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துக ;ரவிகரன் எம்.பி
நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துக; வீதியில் உலரவிடும் நெல்லினை உணவுப் பாதுகாப்பு ஆய்விற்குட்படுத்துக – ரவிகரன் எம்.பி வலியுறுத்து வீதியோரங்களில் நெல் பரவி உலர்த்துவதால் விபத்துகள் ஏற்படுவதுடன், உணவுப்பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாக்கப்படுவதாகத் தெரிவித்த வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், நெல் உலர்த்துவது தொடர்பில் விவசாயிகளுக்கு மாற்று வழிகளை அறிமுகப்படுத்துமாறும் கோரிக்கைவிடுத்துள்ளார். அதேவேளை வீதியில் உலரவிடும் நெல்லினை உணவாக உட்கொள்வோர்க்கு நீண்டகாலச் சூழமைவில் உடலியல் பாதிப்புக்கள் ஏற்படுமா? என்பது தொடர்பிலும் முறையான உணவுப் பாதுகாப்பு ஆய்வுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமெனவும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 07.10.2026இன்று உரையாற்றும்போதே அவர் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.அந்தவகையில் இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,நெல் உலர்த்துவதில் விவசாயிகள் சவால்களை எதிர்கொள்கின்றனர். வீதியோரங்களிலும் வீதியின் ஒருபாதியிலும் நெல் உலர்த்தும் நடைமுறைக்கு விரைவாக…
மேலும் படிக்க