அண்மை செய்தி தாயகச் செய்தி 

தமிழர்கள் கொல்லப் பட்டது பெரும் பான்மை யினருக்கு வெற்றியாகும் போது, தமிழர்களால் எவ் வாறு இலங்கையராக உணரமுடியும்

இத்தீவில் தமிழர்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மையினருக்கு வெற்றியாகும்போது, தமிழர்களால் எவ்வாறு இலங்கையராக உணரமுடியும் – கேள்வி எழுப்பிய ரவிகரன் எம்.பி 1950 களில் கல்லோயா குடியேற்றத் திட்டங்கள் தொடக்கம் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் வரையில் தமிழ்மக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையின ஆட்சியாளர்களால் கொல்லப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இந்தநாட்டில் தமிழ்மக்கள் கொல்லப்பட்டது பெரும்பான்மை இனத்தவர்களான உங்களுக்கு வெற்றியாகும்போது, இத்தீவிலுள்ள தமிழர்கள் எவ்வாறு தம்மை இலங்கையர்களாக உணரமுடியுமெனவும் கேள்வி எழுப்பியுள்ளார். எனவே இந்த நாட்டிலுள்ள தமிழ் மக்களை இலங்கையர்களாக உணரவைக்கும் நல்லிணக்கத்தை இத்தீவிலுள்ள பெரும்பான்மை இன ஆட்சியாளர்கள் இனியேனும் ஏற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் 09.10.2026இன்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் முன்மொழியப்பட்ட பிரேரணையில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பேரவையை தலைமை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழ் தேசம் ஜோதிலிங்கம் ஐயாவை இழந்துவிட்டது: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆழ்ந்த இரங்கல்

ஆசிரியர், வழக்கறிஞர், அரசியல் ஆய்வாளர் என்ற எல்லைகளைத் தாண்டித் தமிழ் தேசத்தின் எதிர்காலம் குறித்து ஆழமாகச் சிந்தித்த மிக முக்கிய சிந்தனையாளரான ஜோதிலிங்கம் ஐயாவின் இழப்பு தமிழ் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்றாகும் எனத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் காலமான சிரேஷ்ட அரசியல் ஆய்வாளரும் சிந்தனையாளருமான ஜோதிலிங்கம் அவர்களின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள விசேட இரங்கல் செய்தியிலேயே கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஜோதிலிங்கம் ஐயா வெறும் ஆசிரியர் அல்லது வழக்கறிஞர் மட்டுமல்ல; என் பார்வையில் அவர் எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு சிறந்த சிந்தனையாளர். அன்றாட வாழ்வின் கடமைகளுக்கு அப்பாற்பட்டு, சமுதாயத்தைப் பற்றியும், தமிழ் மக்களையும் தமிழ் தேசத்தையும் பற்றியும் ஓயாது சிந்திப்பவராக அவர் செயற்பட்டார். இந்தத்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரையை மீட்டுத்தருமாறு பண்ணையாளர்கள் கோரிக்கை

மட்டக்களப்பு மாவட்டம் மயிலத்தமடு – மாதவனை பகுதியில் தாம் கால்நடைகளை மேய்ச்சலுக்கு பயன்படுத்தி வந்த காணிகளிலிருந்து வெளியேற்றப்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள கால்நடைப் பண்ணையாளர்கள், தமது மேய்ச்சல் தரைகளை மீண்டும் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி உள்ளிட்ட அரசியல் தரப்பினர் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரும் மகாவலி அதிகாரிகளும் தம்மை வெளியேற்றும் வகையில் செயற்படுவதாகவும், அத்துமீறி விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு இடமளிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மட்டக்களப்பு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த மயிலத்தமடு கால்நடை வளர்ப்பு மற்றும் பண்ணையாளர் சங்கத் தலைவர் நிமலன், தாம் நீண்டகாலமாகப் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரைகளில் கடந்த ஜூன் மாதம் முதல் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்தார். இது தொடர்பில் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டபோதிலும் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படாது எனக்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

தாக்குதல் அச்சத்தால் விமானங்களை ரத்து செய்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தைக் குறிவைத்து ஹூதி கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதல்களால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமானப் பயணங்களைத் நாளை (10) வரை ரத்து செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து ரியாத் நோக்கிப் பயணிக்கவிருந்த UL 265 விமானமும், இன்று அதிகாலை ரியாத்திலிருந்து கொழும்பு திரும்பவிருந்த UL 266 விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் வாடிக்கையாளர் மையத்தைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, ஹூதி அமைப்பினரின் தாக்குதல்கள் காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து ரியாத் நகரை நோக்கிச் செல்லும் 300 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

உணவகம் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

களுத்துறை, நாகொட வீதியிலுள்ள உணவகம் ஒன்றில்  இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில், அதன் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று (09) காலை இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவரது மனைவி சிகிச்சைகளுக்காக நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.. ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இந்தத் தாக்குதலுக்குத் T-56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப்பிரிவு, பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு, தடயவியல் பொலிஸார் மற்றும் களுத்துறை தெற்கு பொலிஸார் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.எனினும், இந்தத் தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மேலும் படிக்க