அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

இன்றையதினம் (17) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை, முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி மேல், சப்ரகமுவ, தென், மத்திய, வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மாகாணத்திலும் காலி, புத்தளமம், மன்னார், யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும்…

மேலும் படிக்க