தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மரபுரிமைக்கு உயிரோட்டம் நிகழ்வில் முதல்வர் மதிவதனி பங்கேற்பு

யாழ்ப்பாண அரசு கால தொல்லியல் மரபுரிமை சின்னமாகிய யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமையையும் தமிழர் ஆட்சிப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சங்கிலியன் அரண்மனைப் பகுதிகளைப் புனரமைத்துப் பாதுகாப்பதற்கான பணிகள் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்களும் கலந்து கொண்டிருந்தார். தொல்பொருள் திணைக்களத்தின் “மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சங்கிலியன் அரண்மனைப் பகுதியை புனரமைத்துப் பாதுகாப்பதற்காக 0.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படி சங்கிலியன் அரண்மனைப் பகுதியை அபிவிருத்தி செய்யும் ஆரம்பநாள் நிகழ்வில் புனரமைப்பு பணிகள் பூஜை வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர், மாவட்ட செயலக அதிகாரிகள், மாநகரசபை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

திலீபனை நினை வேந்தும் உரிமை; ஐ.நா. அலுவலகத்தில் 19 பொது அமைப்புகள் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் இடம்பெற்றுவந்த மூன்று நாள் தொடர் ‘அணையா விளக்கு – அமைதி வழிப் போராட்டம்’ நேற்று  ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் மகஜர் கையளிப்போடு தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5 மணி முதல் ‘அணையா விளக்கு – அமைதி வழிப் போராட்டம்’ ஆரம்பமானது. நினைவுத்தூபிக்கு முன்னால் சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அணையாமல் பாதுகாக்கப்பட்ட நிலையில், 3ஆம் நாள் போராட்டம்  நேற்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளை குறைப்பது தொடர்பான முன்னோடித் திட்டம்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளை குறைப்பது தொடர்பான முன்னோடித் திட்டம் நேற்று (01) வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொலிஸார் இணைந்து இந்த முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இத்திட்டம் நடைமுறையிலிருக்கும்.முன்னோடித் திட்ட காலப்பகுதியில் சாரதிகளின் புள்ளிகள் உண்மையில் கழிக்கப்படமாட்டாது எனவும், முறைமை எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விளக்கங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறைமை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டப் பின்னர், போக்குவரத்து விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மைக்கு ஏற்ப சாரதிகளின் புள்ளிகள் கழிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை குறைத்து வீதி பாதுகாப்பை மேம்படுத்த முடியம் எனவும் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய – ரவிகரன் எம்.பி

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பள விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொகுத்தொடுவாய் மத்தி கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார்காணிகளிலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசகாணிகளிலும் அத்துமீறி சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கப்படுகின்ற விவகாரத்தில், மகாவலி அதிகாரசபைக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திடமும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திடமும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசேயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையினையும் அழைத்துக் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பளச் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்டசெயலாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 01.10.2026நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்த்தொடுவாய் மத்தி…

மேலும் படிக்க