தியாகி திலீபனின் சிலை அகற்றப் பட்டமைக்கு யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை தனது வன்மையான கண்டனம்
யாழ். நல்லூரில் உள்ள தியாக தீபத்தின் நினைவாலயத்திலிருந்து தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்டமைக்கு யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அத்துடன் ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலைத் தடுப்பதும் குழப்புவதும் உயிரிகளின் மாண்புக்கு எதிரானது என்றும் யாழ். மாவட்ட சர்வமதப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- “பேராசை, சர்வாதிகாரம், இனவாதம் மற்றும் மதவாதம் போன்றவை களையப்பட்டு, அஹிம்சை ரீதியான முன்னெடுப்புகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற வேண்டும் என்பதே எமது விருப்பமாகும். வன்முறையைக் கடந்து வாழ்வை உறுதி செய்வதற்காகத் தனது உயிரைக் காணிக்கையாக்கிய திலீபனை மதிக்கின்றோம். அஹிம்சைக்காக ஆகுதியான அவரை அவமதிப்புக்கு உள்ளாக்கும் அனைத்து சக்திகளையும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சமய நோக்கைக் கடந்து நினைவேந்தல் என்பது ஓர் அடிப்படை மனித உரிமை ஆகும். கலாசார வாழ்வில் பங்கேற்பதற்கான…
மேலும் படிக்க