விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடிய மர்த்த நடவடிக்கை மேற்கொள்க; கிராம மக்கள்
விண்ணாங்கம்பிட்டி கிராமத்தை மீள்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்க; கிராம மக்கள் ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை வவுனியாவடக்கு பிரதேசசெயலாளர் பிரிவில், பட்டிக்குடியிருப்பு கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட தமிழ்மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களில் ஒன்றான விண்ணாங்கம்பிட்டிக் கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் உருக்கமாக வேண்டுகோள் ஒன்றினை முன்வைத்துள்ளனர். அப்பகுதி மக்களின் முறையீட்டிற்கு அமைவாக கடந்த 11.10.2026அன்று நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விண்ணாங்கம்பிட்டி பகுதிக்கு நேரில்சென்று நிலைமைகளை ஆராய்ந்தார். இதன்போதே அப்குதிமக்கள் தமது கிராமத்தை மீளக்குடியமர்த்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அத்தோடு தமது மீள்குடியேற்றத்திற்குத் தடையாக வனவளத்திணைக்களம் செயற்பட்டுவருவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனிடம் அப்பகுதி மக்களால் சுட்டிக்காட்டப்பட்டது. இந்நிலையில் குறித்த விண்ணாங்கம்பிட்டி கிராமத்தினை மீள்குடியேற்றுவதுதொடர்பில் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமென நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இதன்போது தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
மேலும் படிக்க