தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் அதிரடி அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக மனு கையளிப்பு

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனம் பற்றி நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்த கருத்துக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, அதன் உண்மை தன்மையை வெளிப்படுத்த சந்தர்ப்பம் தருமாறு வலியுறுத்தியும் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனாவின் சந்தேகங்களை தெளிவுப்படுத்தியும் மாவட்ட அரச அதிபரிடம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன பிரதிநிதிகள் மனுவொன்றை கையளித்துள்ளனர். இதுதொடர்பில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் குறித்த மனுவில் தெரிவிக்கப்படுவதாவது, கடந்த 25.2.2026 நடைபெற்ற மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இ. அர்ச்சுனா எமது சம்மேளனத்தின் மீது மிகவும் பாரதூரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அன்றைய கூட்டத்திற்கு எம்மை அழைக்காமையால் நாம் அங்கு சமூகமாகவில்லை. அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நிகழ்ச்சி நிரலில் இல்லாத ஒரு விடயத்தை அதிகாரிகள் கையில் உரிய ஆவணங்கள் இல்லாத நிலையில், மிக மோசமான வார்த்தைகளால் எமது சம்மேளனம்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் ‘போர் அதிகாரத்தை’ கட்டுப்படுத்த தவறிய அமெரிக்க செனட்

ஈரானுக்கு எதிரான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இராணுவ அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை முறியடித்துள்ளது இந்த நடைமுறைத் தீர்மானத்திற்கு எதிராக 53 வாக்குகளும், ஆதரவாக 47 வாக்குகளும் அளிக்கப்பட்டன.லெபனான் மீது இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை முன்னெடுத்து வரும் சூழலிலேயே இத்தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அமெரிக்க செனட் சபையானது குடியரசுக் கட்சியினரின் (Republicans) கட்டுப்பாட்டில் இருப்பதாலும், பெரும்பாலான குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் ஈரானுக்கு எதிரான போரை ஆதரிப்பதாலும், இந்த முயற்சி முறியடிக்கப்படுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே அமைந்தது.எவ்வாறாயினும், செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை ஆகிய இரண்டிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டாலும், அது நடைமுறைக்கு வர ஜனாதிபதியின் கையொப்பம் அவசியமாகும். தனது போர்க் கொள்கைக்கு எதிராக அமையும் இத்தீர்மானத்தை ஜனாதிபதி ட்ரம்ப் தனது வீட்டோ (Veto) அதிகாரத்தைப் பயன்படுத்தி நிராகரிப்பார் என்பது உறுதியாக நம்பப்படுகிறது.ஜனாதிபதியின் வீட்டோ அதிகாரத்தை மீறி இச்சட்டத்தை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதி வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழல், இலங்கையின் எரிபொருள் இறக்குமதியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருண தெரிவித்துள்ளார்.இதேவேளை 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயை ஏற்றிய கப்பல் ஒன்று, எதிர்வரும் மார்ச் 11ஆம் திகதி நாட்டை வந்தடையவுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜைரா துறைமுகத்திலிருந்து நேற்று (4) இரவு புறப்பட்ட இந்தக் கப்பல், தற்போது இலங்கையை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.மத்திய கிழக்கில் சவால்கள் நிலவினாலும், இலங்கைக்கு மசகு எண்ணெயைத் தடையின்றி கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் காலங்களில் எவ்வித இடையூறுமின்றி எரிபொருளை விநியோகிப்பதற்கான முழுமையான கொள்ளளவு மற்றும் வசதிகள் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாக தலைவர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் இசை நிகழ்ச்சி,

யாழ் மாவட்டத்தின் 12 இசைக் குழுக்கள் இணைந்து மாபெரும் இசை நிகழ்ச்சியை காங்கேசன்துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வலிகாமம் வடக்கு பிரதேச சபை மைதானத்தில் மார்ச் 6,7,8ம் திகதிகளில் மதியம் ஒரு மணி முதல் நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடக சந்திப்பு நிகழ்வு ஏற்பாட்டாளர்களான யாழ் மாவட்ட இசைக் குழு கலைஞர்கள் சங்க பிரதிநிதிகளால் யாழ் ஊடக அமையத்தில் நடத்தப்பட்டது.தாயக இசைக் கலைஞர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் நிதி திரட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள குறித்த நிகழ்விற்கு பலரும் தமது நிதி அனுசரணையை வழங்கியுள்ளனர்.இசை நிகழ்ச்சி, உணவுத் திருவிழா, களியாட்ட நிகழ்ச்சி என பல விடயங்கள் இதன்போது நடைபெற ஏற்பாடாகியுள்ளது.அனுமதி கட்டணமாக சிறுவர்களுக்கு நூறு ரூபாவும் பெரியவர்களுக்கு இருநூறு ரூபாவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்பு இலங்கை பாதுகா ப்புச் செயலாளர்

இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானிய போர் கப்பலிலிருந்து, சுமார் 80 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தாக்குதலின் தீவிரத்தை விளக்கும் வகையில் இலங்கையிலுள்ள ஐக்கிய அமெரிக்க தூதரகத்தினால் கடலில் இருந்து பெறப்பட்ட வீடியோக் காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.இலங்கையின் தெற்கு கடற்பரப்பிற்கு அப்பால் சர்வதேசக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஈரானியக் கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Dena’ என்ற போர்க்கப்பலை அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஏவுகணைத் தாக்குதல் மூலம் மூழ்கடித்திருப்பதை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். வாஷிங்டனில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், சர்வதேசக் கடற்பரப்பில் தாம் பாதுகாப்பாக இருப்பதாக ஈரான் கருதிய போதிலும், அமெரிக்காவின் விரைவுத் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றினால் ஏவப்பட்ட ஒரேயொரு ‘மார்க் 48’ ரக ஏவுகணை (Torpedo) மூலம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை மீட்பு

திறப்பனை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாக, நேற்று (03) செவ்வாய்க்கிழமை மாலை முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோதமான முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது. கலென்பிந்துனுவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோமரன்கல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள கால்நடைப் பண்ணை ஒன்றிலேயே இந்தச் சட்டவிரோத டீசல் சேமிப்பு கண்டுபிடிக்கப்பட்டது.இதன்போது 10 பீப்பாய்களில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1,900 லீற்றர் டீசலை பொலிஸார் மீட்டதுடன், இது தொடர்பாக சந்தேகநபர் ஒருவரை கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காகக் கலென்பிந்துனுவெவ பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கோமரன்கல்ல, கலென்பிந்துனுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று (04) கஹடகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலென்பிந்துனுவெவ பொலிஸார் தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கட்டி முடிக்கப்படாம லுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப் படுத்த நடவடிக்கை மேற்கொள்க;ரவிகரன்

கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை விரைந்து முழுமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்க; பிரதமர் ஹரிணியிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து. கட்டிமுடிக்கப்படாமலுள்ள பாடசாலைக்கட்டடங்கள் தொடர்பில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வி எழுப்பிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், இவ்வாறு கட்டி முடிக்கப்படாமலுள்ள பாடசாலைக் கட்டடங்களை முழுமைப்படுத்துவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடுமுழுவதும் 468கட்டிமுடிக்கப்படாத பாடசாலைக்கட்டடங்கள் காணப்படுவதாகவும், அவற்றில் 356பாடசாலைக்கட்டடங்களைக் முழுமைப்படுத்துவதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதும் சில கட்டடங்களை முழுமைப்படுத்துவதில் சில நடைமுறைச்சிக்கல்கள் காணப்படுவதாகவும் இதன்போது பதிலளித்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய, அந்தச் சிக்கல்களுக்கு தீர்வுகாணப்பட்ட பிற்பாடு குறித்த நிர்மாணப்பணிகளைப் பூர்த்திசெய்வதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமெனவுந்தெரிவித்துள்ளார். அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தின் கலைமகள் வித்தியாலயத்தில் கற்றல் செயற்பாடுகளுக்கான வேறு வகுப்பறைகள் இல்லாதநிலையில், முழுமையாகக் கட்டி முடிக்கப்படாத ஆபத்தான…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. அமைச்சர் குமார ஜயகொடி

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற சூழலால் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ அல்லது  தாமதமோ ஏற்படாது. எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் அச்சமூட்டி மக்களை தவறாக வழிநடத்த வேண்டாம் என்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அவர்  மேலும் உரையாற்றியதாவது,மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் அமைதியற்ற நிலைமையை அரசாங்கம்  என்ற ரீதியில் எம்மால் கட்டுப்படுத்த முடியாது. இருப்பினும் அதனால் ஏற்படும் பாதிப்புக்குள் மற்றும் நெருக்கடி நிலைமையை அரசாங்கம் என்ற ரீதியில்  முகாமைத்துவ செய்ய முடியும். எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்போ  அல்லது தாமதமோ ஏற்படாது. நாட்டில் தற்போது எரிபொருள் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது.எரிபொருள் விநியோக கட்டமைப்பு  தொடர்பில்  அச்சமூட்டி மக்களை தவறாக  வழிநடத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். இறக்குமதி செய்யப்படும் மசகு  எண்ணெய் தொகையை சுத்திகரித்து அவற்றை களஞ்சியப்படுத்தி…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி பொதுவான செய்திகள் 

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை

இலங்கையில் நீண்டகாலமாக சர்ச்சைக்குரியதாக இருந்து வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் அல்லது அதன் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கிய குழு மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகள் அடங்கிய இந்த முக்கிய குழுவின் சார்பில், பிரித்தானியாவின் மனித உரிமைகள் தூதுவர் எலினோர் சாண்டர்ஸ் இந்த விசேட அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளார். தற்போது முன்மொழியப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்புச் சட்டம்’, முந்தைய சட்டத்தை விடவும் பாரிய மனித உரிமை மீறல் கவலைகளைத் தோற்றுவிப்பதாகக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும் இலங்கையின் சர்வதேச மனித உரிமைப் பொறுப்புகளுக்கு இணங்க அமைவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தின் வசமுள்ள காணிகள் சில விடுவிக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொண்டாலும், அந்தச் செயல்முறை…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

உச்சக்கட்டத்தை எட்டிய மத்திய கிழக்கு: பொய்முகமூடி குற்றச்சாட்டுகள், பிராந்தியப் போர் அபாயம்

உச்சக்கட்டத்தை எட்டிய மத்திய கிழக்கு: பொய்முகமூடி குற்றச்சாட்டுகள், ஏவுகணை தேய்வு மற்றும்பிராந்தியப் போர் அபாயம் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் 03/02/2026 ⊰❉⊱══════════════════⊰❉⊱ ராஸ் தனூரா தாக்குதல்: பொய்முகமூடிச் சதியா? அல்லது நிழற்போரின் ஒரு கட்டமா? சவூதி அரேபியாவின் ராஸ் தனூரா எண்ணெய் வசதிகள் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல், மத்திய கிழக்கில் புதிய புவிசார் அரசியல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இவ்வசதி, சவூதி அரசின் எண்ணெய் நிறுவனமான சவுதி அராம்கோ (Saudi Aramco) மூலம் இயக்கப்படுகிறது. ஈரானுக்குள் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்களிலிருந்து பிராந்திய கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில், இது இஸ்ரேல் மேற்கொண்ட “பொய்முகமூடி” (False Flag) நடவடிக்கை என ஈரான் இராணுவ அதிகாரி ஒருவர்…

மேலும் படிக்க