தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வினாசிகுளம் பால த்தை நிர்மானிக்க நடவடிக்கை ரவிகரன் எம்.பியிடம் கோரிக்கை

வவுனியா வடக்கு வினாசிகுளம் பாலத்தை நிர்மானிக்க நடவடிக்கை மேற்கொள்க; ரவிகரன் எம்.பியிடம் பொதுமக்கள் கோரிக்கை வவுனியா வடக்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட, மாமடு கிராம அலுவலர் பிரிவிலுள்ள சாண்டான்குளம் வீதியைச் சீரமைப்பதுடன், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலத்தையும் நிர்மாணிக்குமாறு அப்பகுதிமக்களால் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அண்மையில் குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று நிலமைகளைப் பார்வையிட்டிருந்தார். இதன்போதே மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் மேற்கண்டவாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட சாண்டான்குளம் வீதி சீரின்றிக் காணப்படுவதாலும், அவ்வீதியோடு இணைந்துள்ள வினாசிகுளம் பாலம் இதுவரை அமைக்கப்படாமல் காணப்படுவதால் வினாசிகுளம் கிராமமக்கள் பாரிய போக்குவரத்து இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். அந்தவகையில் குறித்த சாண்டான்குளம் வீதியும், அதனோடிணைந்த வினாசிகுளம் பாலமும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கனகராயன் குளத்தில் இன்று காலை நடந்த விபத்தில் இரு வல்வெட்டித்துறை இளைஞர்கள் பலி!

கனகராயன்குளத்தில் இன்று காலை நடந்த விபத்தில் இரு வல்வெட்டித்துறை இளைஞர்கள் பலி! தம்புள்ளையில் இருந்து மரக்கறி ஏற்றி வந்த வாகனம் இன்று காலை கனகராயன்குளம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த இளைஞர்களான குமாரசிங்கம் சுகிர்தன் (வயது21), ஜெயராசன் மனோகரன்(வயது 22) ஆகிய இருவருமே உயிரிழந்தவர்களாவர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பு நகரில் டெங்கு அபாயம்; அடைபட்ட வடிகான்கள் சுத்தம்

மட்டக்களப்பு நகரில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அடைபட்டு, டெங்கு நுளம்புப் பெருக்கம் அதிகமாகக் காணப்பட்ட வடிகான்களைச் சுத்தப்படுத்தும் விசேட சிரமதானப் பணி இன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தின் ஏற்பாட்டில், ‘கிளீன் ஸ்ரீலங்கா’ வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து இப்பணியை மேற்கொண்டன. மட்டக்களப்பு கல்லடிப் பாலத்தில் இருந்து ஆரம்பமான இச்சிரமதானப் பணியில், பிரதான வீதியை ஒட்டியுள்ள கழிவுநீர் வடிகான்களில் தேங்கியிருந்த பிளாஸ்டிக், பொலித்தீன் கழிவுகள் அகற்றப்பட்டுச் சுத்தப்படுத்தப்பட்டன. கடந்த காலங்களில் வீதி அபிவிருத்திக்காக அதிக நிதி ஒதுக்கப்பட்ட போதிலும், வடிகான்கள் சரியாகச் சீரமைக்கப்படாததால் வெள்ளப் பெருக்குக் காலங்களில் மக்கள் சிரமப்பட்டதுடன் டெங்கு பரவும் அபாயமும் நிலவியது. இதனையடுத்து, பொதுமக்களின் கோரிக்கைக்கு அமைவாக, பிரஜா சக்தி உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மரக்கறிகளை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து இருவர் உயிரிழப்பு.

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக வவுனியா, கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து ஏ-9 பிரதான வீதியில் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு உடனடியாக மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் படகுப் பேரணி!

தமிழக இழுவைப் படகுகளின் அத்துமீறலுக்கு எதிராகக் கடலில் பிரமாண்ட படகுப் பேரணி! ​இலங்கை கடல் எல்லைக்குள் புகுந்து வடபகுதி மீனவர்களின் வலைகளையும் வாழ்வாதாரத்தையும் நாசம் செய்யும் தமிழக இழுவைப் படகுகளின் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்டித்து, குறிகாட்டுவான் – நயினாதீவு கடல் பகுதியில் பிரமாண்ட படகுப் பேரணிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையில் இனி மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை

மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவையொன்றை ஆரம்பிக்க 1990 சுவசெரிய அறக்கட்டளை தீர்மானித்துள்ளது. அதிக வாகன நெரிசல் உள்ள நகர்ப்புறங்களிலும் மற்றும் வீதித் தடங்கல்கள் உள்ள பகுதிகளிலும் இந்த மோட்டார் சைக்கிள் அவசர சிகிச்சை சேவை முன்னெடுக்கப்படவுள்ளது. அம்புலன்ஸ் வண்டி சென்றடைவதற்கு முன்னர் நோயாளிக்கு விரைவாக முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ வசதிகளை வழங்குவதே இந்த புதிய வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும் என சுவசெரிய அறக்கட்டளை குறிப்பிட்டுள்ளது. இதற்காக விசேட பயிற்சி பெற்ற வைத்திய அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், அடிப்படை மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களைக் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளன. இந்த வேலைத்திட்டத்தை ஒரு முன்னோடிச் செயற்றிட்டமாக கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புறங்களை இலக்கு வைத்து இந்த வருடம் முடிவடைவதற்குள் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கந்தளாய்: பாறைக்குன்றில் கைக்குண்டு மீட்பு!

கந்தளாய் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு அருகில் உள்ள கழ்மலை பன்சலைக்கு அருகாமையிலுள்ள பாறைக்குன்றுப் பகுதியில், காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தது எனச் சந்தேகிக்கப்படும் கைக்குண்டு ஒன்றை கந்தளாய் பொலிஸார்  மீட்டுள்ளனர். இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், குறித்த கைக்குண்டைப் பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்ததுடன் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பையும் பலப்படுத்தியுள்ளனர். மேலும், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் அப்பகுதிக்குச் செல்வதற்கும் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட கைக்குண்டை விசேட அதிரடிப்படையினரின் (STF) வெடிகுண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவின் உதவியுடன் பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்வதற்கு, கந்தளாய் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெறுவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கைக்குண்டு மீட்கப்பட்ட பாறைக்குன்றுப் பகுதியில் காலனித்துவ ஆட்சிக் காலத்தைச் சேர்ந்த பழமையான கட்டிட இடிபாடுகள் காணப்படுகின்றன. அத்துடன், கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி புலச் செய்திகள் பொதுவான செய்திகள் 

மூத்த ஊடகவி யலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன். காலமானார்

யாழ். ஊடக அமையத்தின் (Jaffna Press Club) முன்னாள் தலைவரும், யாழ். தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியருமான மூத்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்கள் நேற்றிரவு கனடாவில் காலமானார் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் அளிக்கிறது. தமிழ் ஊடகத்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய அவர், ஊடகவியலாளர்களின் குரலாகவும், அவர்களின் உரிமைப் போராட்டங்களில் முன்னின்று உழைத்த ஒரு சிறந்த ஆளுமையுமாவார்.அவரது அர்ப்பணிப்புள்ள பணிகள் தமிழ் ஊடக வரலாற்றில் என்றும் அழியாத தடம் பதித்தவை.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

ஜப்பானில் நிலநடுக்கம்: 13 பேர் உயிரிழந்துள்ளனர்

தென்மேற்கு ஜப்பானின் கியூஷு (Kyushu) தீவில் உள்ள குமாமோட்டோ (Kumamoto) பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ள நிலையில், இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தின் அளவு: ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவானது. இதைத் தொடர்ந்து 6.1 ரிக்டர் அளவில் பின்னதிர்வும் ஏற்பட்டது. உயிரிழப்பு மற்றும் காயம்: ஜப்பான் பிரதமர் சானே தகாய்ச்சி (Sanae Takaichi) அளித்த தகவலின்படி, இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்ட பகுதிகள்: குமாமோட்டோ, நாகசாகி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டிடங்கள் சேதம்: காஷிமா (Kashima) பகுதியில் உள்ள பிரபல ‘இயான் மால்’ (Aeon Mall) வணிக வளாகத்தின் இரண்டாவது தளம் இடிந்து விழுந்தது. யட்சுஷிரோ நகரில் உள்ள காகித ஆலையின்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கீரிமலை – மாவிட்டபுரம் பகுதிகள் குப்பைக் கிடங்காகும் அபாயம்;

யாழ்ப்பாணத்தின் வரலாற்று மற்றும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த கீரிமலை மற்றும் மாவிட்டபுரம் பகுதிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால், அப்பகுதிகள் எதிர்காலத்தில் பாரிய குப்பைக் கிடங்காக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில், கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயம் உள்ளிட்ட முக்கியமான ஆலயங்களை அண்மித்த பகுதிகளில், குறிப்பாக மாவிட்டபுரத்தில் இருந்து கீரிமலை செல்லும் வீதியை அண்மித்துள்ள பாரிய குழிகளில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இயங்கிய காலத்தில் குறித்த பகுதிகளில் சுண்ணக்கற்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டதன் காரணமாக பாரிய குழிகள் உருவாகியுள்ளன. 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்ததைத் தொடர்ந்து, அந்தப் பகுதிகள் உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தன. யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டம் கட்டமாக அப்பகுதிகள்…

மேலும் படிக்க