இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

புனித வெசாக் தின த்தை முன்னிட்டு,61 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு, அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, சிறைச்சாலையில் உள்ள 61 கைதிகளுக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 33 கைதிகள் வெசாக் தினமான இன்ற சிறைகளில் இருந்து உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்கள ஊடகப்பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை வெசாக் தினத்தை முன்னிட்டு மற்றும்  இன்று மற்றும் நாளை ஆகிய  இரு தினங்களிலும் நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவானது  நேற்று மாலை முதல் அமுலுக்கு வருவதுடன், எதிர்வரும் ஜூன் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பெமரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த உத்தரவை மீறும் மதுபான விற்பனை நிலையங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இது தொடர்பான விதிமீறல்களை அவதானித்தால், 1913 என்ற விசேட இலக்கத்திற்கோ அல்லது oicoptroom@excise.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ புகார் அளிக்கலாம் என திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

அன்மைச் செய்தி

Leave a Comment