சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணவில்லை.

யாழ்ப்பாணம் – வடமராட்சி கடற்பரப்பில் இரண்டு படகுகள் கவிழ்ந்து தந்தை, மகன் உள்ளிட்ட நான்கு மீனவர்கள் காணாமல் போயுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணி இன்றைய தினமும் (வெள்ளிக்கிழமை)   தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. காணாமல் போனவர்களை மீட்பதற்காகப் பருத்தித்துறை, கற்கோவளம் பகுதியிலிருந்து சுமார் 10 படகுகளும், முனை பகுதியிலிருந்து 10-க்கும் மேற்பட்ட படகுகளும் என 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சக மீனவர்கள் இன்று அதிகாலை முதலே கடலுக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, நேற்று முன்தினம் புதன்கிழமை (27) கடலுக்குச் சென்ற இவர்களைத் தேடி சக மீனவர்கள் சென்றிருந்த போதிலும், பலத்த காற்று மற்றும் கடற்கொந்தளிப்பு காரணமாக ஏமாற்றத்துடன் திரும்பியிருந்தனர். இந்த நிலையில், இன்று வானிலை சற்றே சாதகமாக உள்ளதால் தேடுதல் பணி முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. பருத்தித்துறை – முனை மற்றும் கற்கோவளம்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முச்சக்கரவண்டி சாரதியை மயக்கி காட்டுக்குள் வீசிவிட்டு கொள்ளை – மட்ட க்களப்பில் அதிர்ச்சி

மட்டக்களப்பு நகரில் முச்சக்கரவண்டி ஒன்றைக் கூலிக்கு அமர்த்திச் சென்ற கொள்ளையர்கள், அதன் சாரதிக்கு மயக்க மருந்து தெளித்து, அவரிடமிருந்த தங்க ஆபரணங்கள், பணம் மற்றும் கைபேசி என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற அதிர்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மயங்கிய நிலையில் ரிதிதென்னை காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த  முச்சக்கரவண்டி சாரதி நேற்று வியாழக்கிழமை (28) காலை மீட்கப்பட்டு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு பூநொச்சிமுனைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இச்சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். சம்பவதினமான நேற்றுமுன்தினம் (27) பிற்பகல் 3:00 மணியளவில் வீடு சென்று மதிய உணவை உட்கொண்ட அவர், மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். இரவு 7:00 மணியளவில் இரவு உணவிற்காக இடியாப்பம் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவதாகத் தனது உறவினர்களுக்குக் கைபேசி மூலமாகத் தெரியப்படுத்தியுள்ளார். இதற்கிடையில், மட்டக்களப்பு நகரின் ஆட்டோ…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மட்டு. தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் பல திடுக்கிடும் தகவல்கள்!

மட்டக்களப்பு நகரில் உள்ள விடுதியில் ஏற்பட்ட தீப்பரவலில் இரண்டு பிள்ளைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், அந்த பிள்ளைகளின் தந்தை எனக் கூறப்படும் நபரை பொலிஸார் கைது செய்துள்ள நிலையில், விசாரணைகளில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கைதான சந்தேகநபர் உயிரிழந்த இரு குழந்தைகளின் தாய்க்கு புற்றுநோய் எனக் கூறி, போலி அடையாள அட்டையை பயன்படுத்தி பிள்ளைகளை வைத்து பிச்சை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தற்போதைய விசாரணையில் தெரியவந்துள்ளது. மட்டக்களப்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்காக அனுமதிக்கப்பட்டுள்ள தாயை பார்வையிடுவதற்காக தமது தந்தையுடன் அவரது இரண்டு பிள்ளைகள் பதுளையில் இருந்து மட்டக்களப்பு நகருக்கு சென்றிருந்தனர். இதன்போது அவர்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது, விடுதிக்குள் ஏற்பட்ட தீப்பரவலில் 3 வயதுடைய ஆண் பிள்ளையொன்றும், 5 வயதுடைய பெண் பிள்ளையொன்றும் கடந்த புதன்கிழமை மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர். ​ இந்த நிலையில்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

பாலியல் குற்றவாளி களை காப்பாற்றாதே” – நீதி கேட்டு கொந்த ளித்த வடகிழக்கு பெண்கள்

அனுராதபுரத்தில் பௌத்த பிக்கு ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமிக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, ‘வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு’ அமைப்பினால் இன்று மட்டக்கப்பு மற்றும் யாழ்ப்பாணத்தில் கண்டன போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி, மட்டக்களப்பு காந்திபூங்காவில் ஒன்றுகூடிய பெண்கள் ஊர்வலமாக சென்று படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் “பிக்குவினால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான அனுராதபுரம் சிறுமிக்கு நீதி வழங்குக…” பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதியை நிலைநாட்டுங்கள்”மதத்தின் பெயரால் பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்க வேண்டாம், சட்டத்தினால் மறுக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு பிணை கிடையாது போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட  பதாதைகளை ஏந்தியவாறு தங்களது பலத்த எதிர்ப்பை வெளியிட்டனர். இச்சம்பவம் தொடர்பில்  ஜனாதிபதி மற்றும் நீதியமைச்சர், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவர்கள் உரிய அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத் திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம்

யாழ். பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கள விஜயம் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு இன்று (26.05.2026) விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்பு பிரதி அமைச்சர் கெளரவ அருண ஜெயசேகர அவர்கள், பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட இதுவரை விடுவிக்கப்படாத பகுதிகளில் விசேட கள ஆய்வொன்றை மேற்கொண்டார். இந்த கள ஆய்வில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கெளரவ ராமலிங்கம் சந்திரசேகர் , பாராளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் உள்ளிட்ட உயரதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட காணிகளில் இதுவரை 21,280 ஏக்கர் நிலப்பரப்புகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

முள்ளிக்குளம் மக்களின் 753ஏக்கர் காணிகளை நிபந்தனை களுடன் விடுவிக்க இணக்கம்

முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்திய ரவிகரன் எம்.பி; 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க இணக்கம் தெரிவித்தார் – பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர விஜயரத்தினம் சரவணன் மன்னார் – சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவில், கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதிப் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் கடற்படையின் கட்டுப்பாட்டிலுள்ள 1012ஏக்கர் காணியில் 753ஏக்கர் காணிகளை நிபந்தனைகளுடன் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதிப்பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகர பதிலளித்துள்ளார். மன்னார் மாவட்டத்தில் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார் மாவட்ட செயலகத்தில் 25.05.2026இன்று இடம்பெற்றபோதே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலேசனைக்குழுக் கூட்டங்களில் முள்ளிக்குளத்தில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் விபத்தில் இளம் தாய் ஒருவர் பலி

கிளிநொச்சி கரடிபோக்கு உருத்திரபுரம் வீதியில் இன்று (25) பகல்இடம்பெற்ற வீதி விபத்தில் இளம் தாய் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணித்துள்ளார். உருத்திரபுரத்தில் இருந்து கரடிபோக்கு நோக்கி மோட்டார் சைக்கிளில் தனது மகளை பாடசாலையிலிருந்து வீட்டுக்கு ஏற்றிச் செல்ல பயணித்த போது கரடி போக்கிலிருந்து உருத்திரபுரம் நோக்கி வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் மோதியதில் குறித்து விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த இளைஞர்கள் தங்களது பெரியளவிலான மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் வேகமாக ஓடிதிரிந்ததாக சம்பவத்தை அவதானித்த பொது மக்கள்குறிப்பிட்டனர். சம்பவத்தில் குறித்த இளம் தாய் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஒருவனும் காயமடைந்துள்ளான். சம்பவம்தொடர்பில் கிளிநொச்சி பொலீஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

களுவாஞ்சிகுடி கடலில் மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன்பிடிக்க சென்ற 19 வயது இளைஞனான மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். கடந்த சனிக்கிழமை (23) கடலுக்கு இரவு சென்றவரே காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) முறைப்பாடு செய்துள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர். களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய விஜயகுமார் விஜயகாந்த் சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் கடலில் மீன்பிடிப்பதற்காக சிறிய படகில் தனியாக சென்ற நிலையில் ஞாயிற்றுக்கிழமை (24) காலை ஆகியும் வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து இந்த கடற்பகுதிக்கு படகில்  மீனவர்கள் சென்று தேடிய போது மீனவரான விஜயகாந்த் சென்ற படகை கண்டுபிடித்த போதும், அதில் அவர் இல்லாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 46) யாழ். சிறைச்சாலையில் குளியல் பகுதியில் உயிர்மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. அதன்படி  அந்த தீர்ப்பை வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தேசிய மக்கள் சக்தியின் யாழ் ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப் பட்டுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகமானது இன்று(23.5.2026) யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் , மாநகர சபை உறுப்பினர்களான, சு.கபிலன் , ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் , கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க