இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாய மாக்கப்பட்டு ள்ளது. 

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் இன்று (19) முதல் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட விதிகளின்படியாகும். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிய வேண்டும் என்ற விதிகள் ஒரு வருடத்திற்கு முன்னர் வெளியிடப்பட்ட போதிலும், சில வாகனங்களில் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களுக்கான ஆசனப்பட்டிகள் இல்லாத காரணத்தினால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதற்கமைய, பின் இருக்கைகளிலும் ஆசனப்பட்டிகளை பொறுத்திக் கொள்வதற்காக வழங்கப்பட்ட ஒரு வருட கால அவகாசம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (18) நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்துப் பயணிகளும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அனோஜனின் விடுதலைக்காக சவூதித் தூதுவரைச் சந்தித்து முறையிடத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சி

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் விடுதலை தொடர்பில், இலங்கையில் உள்ள சவூதி அரேபியத் தூதுவரை நேரில் சந்தித்து, அந்த நாட்டுப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவுத்திடம் கோரிக்கை முன்வைக்கத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் பேரவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது குறித்துப் பேரவையின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் ஊடகங்களிடம் தெரிவிக்கையில்:- “சவூதி அரேபியாவில் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜன் விடயத்தில், கருணை மற்றும் மனிதாபிமான அடிப்படையில் பரிசீலித்து அவருக்கு மன்னிப்பு வழங்குமாறு, சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசருக்கு, இலங்கைக் குடியரசுக்கான சவூதி அரேபியத் தூதுவரை நேரடியாகச் சந்தித்து அவர் ஊடாக ஒரு கூட்டு வேண்டுகோளை முன்வைக்க வேண்டும் எனத் தமிழ் பேசும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யோகபுரம் மகாவித்தியா லயத்தில் சிறப்புற இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு;

யோகபுரம் மகாவித்தியாலயத்தில் சிறப்புற இடம்பெற்ற மாணவர் பாராளுமன்ற அமர்வு; பிரதம விருந்தினராக ரவிகரன் எம்.பி பங்கேற்பு முல்லைத்தீவு – மல்லாவி, யோகபுரம் மகாவித்தியாலயத்தில் 16.09.2026நேற்று மாணவர் பாராளுமன்ற அமர்வு மிகச் சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் பாடசாலையின் முதல்வர் க.சசிகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வானது மாணவர் பாராளுமன்ற அணியினர் மற்றும் விருந்தினர் வரவேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாடசாலை முதல்வரின் தலைமையுரை இடம்பெற்றதையடுத்து மாணவர் பாராளுமன்ற அமர்வு சம்பிரதாய பூர்வமாக ஆரம்பமானது. அதற்கமைய மாணவர் பாராளுமன்றத்தின் பிரதமரால் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது. அதனையடுத்து மாணவர் பாராளுமன்துறைசார் அமைச்சர்களால் தமது அமைச்சுசார் நலத்திட்டங்கள் தொடர்பான முன்வைப்புக்களை முன்வைத்தனர். அந்தவகையில் மாணவர் பாராளுமன்றம் காரசாராமான விவதங்களுடன் ஜனநாயக மரபுகள் பின்பற்றப்பட்டு மிகச்சிறப்பாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கிய விவகாரம் – தமிழரசுக் கட்சியின் ஐந்து தரப்பினருக்கு எதிராக வழக்கு

இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரனை கட்சியில் இருந்து நீக்கியமைக்கு எதிராக, கட்சியின் தற்போதைய பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளர் உள்ளிட்ட ஐந்து தரப்பினருக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றில் இன்று (16) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த வருடம் கட்சியின் விதிமுறைகளை மீறி தாம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவித்து, குறித்த நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பதில் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் பொதுச்செயலாளர் சத்தியலிங்கம், நிர்வாக செயலாளர் குணநாயகம் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி ஆகிய ஐந்து தரப்பினருக்கு எதிராக சிரேஷ்ட சட்டத்தரணி பிரேம்நாத் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நீதிமன்றத்தில் சரணடைந்தார் ஞானசார தேரர்

இஸ்லாத்தை அவமதிக்கும் வகையிலான கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலாகொட அத்தே ஞானசார தேரர் இன்று (16) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார். கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கை எதிர்வரும் செப்டெம்பர் 30ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதிபதி உத்தரவிட்டார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்பை உயர் நீதிமன்றம் செல்லாது என அறிவித்த சில நாட்களுக்குப் பின்னர் அவர் இவ்வாறு நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார். நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்களை அனுபவித்திருந்த நிலையில், 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்ட…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிதுவ கிராமத்தில் பாம்பு தீண்டியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (15) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சிறிதுவ கிராமத்தைச் சேர்ந்த மொலக்கொட கெதர சாந்தினி பிரேமலதா என்ற  49 வயதுடைய குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் தேங்காய் உரித்துக் கொண்டிருந்தபோது, தேங்காய் குவியலுக்குள் மறைந்திருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த பெண்ணின் சடலம் கந்தளாய் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.  

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சட்டவிரோத மீன்பிடியை கட்டுப்படுத்துங்கள் – மீனவ அமைப்புகள் வேண்டுகோள்

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் சட்ட விரோத மீன்பிடித் தொழிலை கட்டுப்படுத்துவதற்கு கடற்கரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர். நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர்கள் இவ்வாறு கோரிக்கை முன்வைத்தனர். அங்கு அவர்கள் மேலும் தெரிவிக்கையில், நீண்ட காலமாக குறித்த பகுதிகளில் உள்ள உள்ளூர் மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்தி கடல் வளத்தை அழித்து விரும் நிலையில் ஏனைய சிறு தொழில் மீனவர்கள் இதனால் பாரிய பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். சட்டவிரோத தொழிலில் ஈடுபடும் மீனம்பா படகுகளை கடற் படையினர் தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறான நிலையில் தொடர்ச்சியாக சட்டவிரோத தொழில இடம் பெறுவதாக அப்போது…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டின் பல பகுதிகளில் 100 மி.மீ. இற்கும் அதிக மழை

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் நிலவும் கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, இன்றையதினம் (15) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மேகமூட்டமான வானம் காணப்படுவதுடன் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இப்பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். நீர்கொழும்பிலிருந்து கொழும்பு, காலி ஊடாக அம்பாந்தோட்டை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விமான நிலையத்தில் ரூ. 32 கோடி குஷ் பொதிகளை கைவிட்டு தப்பிய பயணி!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 06 ஆம் இலக்க பயணப்பொதி பெல்ட் அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரு பயணப் பெட்டிகளிலிருந்து சுமார் ரூ. 320 மில்லியன் பெறுமதியான குஷ் போதைப்பொருள் இன்று (15) அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளால் குறித்த போதைப்பொருள் தொகுதி கைப்பற்றப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட போதைப்பொருளானது காற்று புகாதவாறு பிரத்தியேகமாக அடைக்கப்பட்ட 60 பொதிகளாக இரண்டு பயணப் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து நேற்றைய தினம் (14) கொழும்பு வந்தடைந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL 405 எனும் விமானத்தில் பயணித்த பயணி ஒருவராலேயே இந்தப் பயணப்பொதிகள் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர். விமான நிலையத்தில் வைத்து, தான் கைது செய்யப்படக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, குறித்த…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

எங்களை அழித்தவர்களுடன் ஒரே மேடையில் கூத்தடிக்கும் சிலர்’ – சிறீதரன் எம்.பி. குற்றச்சாட்டு

எங்களை அழித்தவர்கள், இன அழிப்பை மேற்கொண்டவர்கள், எங்கள் வீடுகளில் இன்றும் நெருப்பின் நினைவுகளை விட்டுச் சென்றவர்கள், எங்கள் பிள்ளைகளைக் காணாமல் ஆக்கியவர்கள் என நாம் குற்றஞ்சாட்டுகின்ற தரப்பினருடன் இன்று சிலர் ஒரே மேடையில் ஏறி நிற்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றம்சாட்டினார். கிளிநொச்சி, கோணாவில் வட்டாரத்திற்கான மக்கள் சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று (14) பிற்பகல் கோணாவில் கிழக்கு பொதுநோக்கு மண்டபத்தில் நடைபெற்றது.குறித்த கலந்துரையாடலில் வட்டார பிரதேச சபை உறுப்பினர் ச. சிவயோகலக்சுமி உள்ளிட்ட பிரதேச மக்கள் கலந்து கொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மேன்முறையீட்டு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வு வயதை 62 இலிருந்து 67 ஆக அதிகரிப்பதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும், வழக்கறிஞர்கள் சங்கமும்…

மேலும் படிக்க