தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (07) காலை கோர விபத்து.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று (07) காலை கோர விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. ஆண்டான்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனங்களே ஒன்றன்பின் ஒன்றாக மோதியுள்ளன. இதில் சுகாதார சேவைகள் திணைக்களத்துக்குச் சொந்தமான பேருந்து, வேன் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவை விபத்தில் சிக்கியுள்ளன. ஆனால், அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை – உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் 4 புதிய மதுபான சாலை 4 இடங்களில் பணம் செலுத்தப்பட்டதா?

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மேலும் 4 புதிய மதுபானசாலைகளை ஆரம்பிப்பதற்கான அனுமதிப் பணம் உரிய பிரதேச செயலகங்களில் செலுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2024 ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் பல அரசியல்வாதிகளின் சிபாரிசின் பேரில் நூற்றுக்கும் மேற்பட்ட புதிய மதுபானசாலைகளுக்கான அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தன. அவ்வாறு வழங்கப்பட்ட அனுமதிகள் ஏற்கனவே மதுபான விற்பனை அனுபவம் கொண்டவர்களிடம் கோடிக்கணக்கான பெறுமதிகளுக்குக் கைமாறியதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கைமாறிய அனுமதிப் பத்திரங்களைப் பெற்றவர்கள் புதிய மதுபானசாலைகளை ஆரம்பிக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 4 இடங்களில் மக்களின் கடுமையான எதிர்ப்புத் காரணமாகச் சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்கள் அனுமதி வழங்க மறுத்துவிட்டன. இதனையடுத்து, பாதிக்கப்பட்ட மதுபானசாலை உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் மதுபானசாலை உரிமையாளர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிட்டியதைத் தொடர்ந்து, அந்த அனுமதிகளை வழங்குமாறு கோரி அதற்கான…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

உழவு இயந்திரந்தில் மோதிய ஸ்கூட்டி மோட்டார்சைக்கிள்! யாழில் 36 வயது பெண் மரணம்

: உழவு இயந்திரந்தில் மோதிய ஸ்கூட்டி மோட்டார்சைக்கிள்! யாழில் 36 வயது பெண் மரணம் யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் வடக்கு மாகாண சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தரான சோபிதா வரதன் (36) என்பவர் உயிரிழந்துள்ளார். மீசாலை புத்தூர் சந்தி பகுதியில் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை உழவு இயந்திரமும் ஸ்கூட்டி வகை மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளை செலுத்திய குறித்த பெண் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். மூன்று பிள்ளைகளின் தாயும், தென்மராட்சியின் சிறந்த ஓவியக் கலைஞராகவும், தனது கைவண்ணத்தால் பல அழகிய ஓவியங்களைப் படைத்தவராகவும் அறியப்பட்ட சோபிதாவின் இழப்பு, கலைத்துறைக்கும் சமூகத்திற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என அவரை அறிந்தவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பிலான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி புலச் செய்திகள் 

சுவிற்சர்லாந்து – யாழ்ப்பாணத்தில் “70 ஆண்டுகள் 70 முகங்கள்»சிறப்புக் கண்காட்சியும் நிகழ்வுகளும்

சுவிற்சர்லாந்து – யாழ்ப்பாணத்தில் “70 ஆண்டுகள் 70 முகங்கள்»சிறப்புக் கண்காட்சியும் நிகழ்வுகளும் சுவிற்சர்லாந்து மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையிலான 70 ஆண்டுகால தூதரக உறவுகளைக் குறிக்கும் வகையில், இலங்கையிலுள்ள சுவிற்சர்லாந்து தூதரகம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் வள்ளுவர் மண்டபம்” 03. 10. 2025 மற்றும் 04. 10. 2025 ஆகிய திகதிகளில் இரண்டு நாள் சிறப்பு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வு இரு நாடுகளுக்கும் இடையிலான தொலை அளவீடுகளை உட்பொருளாக நினைவுகூரும் வகையில் அமைந்தது. . . 70 ஆண்டுகால சுவிற்சர்லாந்து இலங்கை நட்புப் பயணம் 25 ஆண்டுகால அமைதி மற்றும் மனித உரிமைகளுக்கான பங்களிப்பு 20 ஆண்டுகால சுவிஸ் வளர்ச்சி ஒத்துழைப்பின் (SDC) செயற்பாடுகள் பகராளிகள் (பிரதிநிதிகள்) பங்கேற்பு இரு நாட்டு அரசுப் பேராளர்கள், சமூகப் பெரியோர்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் பங்குதாரர்கள்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ.3.65 கோடி பெறுமதி; தங்க நகைகளுடன் விமான நிலையத்தில் பயணி கைது

3 கோடியே 65 இலட்சத்து 19 ஆயிரத்து 192 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைச் சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அவற்றை வெளியே கொண்டு செல்ல முற்பட்ட இலங்கைப் பயணியொருவர் நேற்றுமுன்தினம் (03) காலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி, பல்லேகல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதுடைய வர்த்தகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்றுமுன்தினம் (03) காலை 9.30 மணியளவில் டுபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான EK-650 விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது, தனது உடலில் நான்கு பொதிகளாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 996 கிராம் எடையுடைய தங்க நகைகளை அவர் கொண்டு வந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து, மேலதிக விசாரணைகளுக்காகக் குறித்த பயணியையும் அவர் கொண்டு வந்த…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அனோஜனை விடுவிக்க இலங்கை தூதுக்குழு சவூதி பயணம்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை அரச மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வதற்கான அனைத்து ஆவணத் தயாரிப்புப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் நான்கு பேர் கொண்ட அரச குழு இன்று திங்கட்கிழமை சவூதி அரேபியா செல்லவுள்ளது. அதன்பிரகாரம் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை குறைப்பது, அவரை விடுவித்துக்கொள்வது குறித்துப் பேச்சு நடத்துவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணிகள் உட்பட நான்கு பேர் கொண்ட தூதுக்குழு இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கருணை மனுவுடன் சவூதி அரேபியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது. மூத்த சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் பைசர் முஸ்தபா ஆகியோரும் இந்தத் தூதுக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.இந்தக் குழு, எதிர்வரும் புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை சவூதி அரேபியாவில் உள்ள இரண்டு சட்டவாளர் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தவுள்ளது.அனோஜனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி, பௌத்த, முஸ்லிம்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மரபுரிமைக்கு உயிரோட்டம் நிகழ்வில் முதல்வர் மதிவதனி பங்கேற்பு

யாழ்ப்பாண அரசு கால தொல்லியல் மரபுரிமை சின்னமாகிய யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பெருமையையும் தமிழர் ஆட்சிப் பாரம்பரியத்தையும் பறைசாற்றும் சங்கிலியன் அரண்மனைப் பகுதிகளைப் புனரமைத்துப் பாதுகாப்பதற்கான பணிகள் தொல்லியல் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கடந்த (01) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந் நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் வி.மதிவதனி அவர்களும் கலந்து கொண்டிருந்தார். தொல்பொருள் திணைக்களத்தின் “மரபுரிமைக்கு உயிரூட்டுவோம்” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் சங்கிலியன் அரண்மனைப் பகுதியை புனரமைத்துப் பாதுகாப்பதற்காக 0.6 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்படி சங்கிலியன் அரண்மனைப் பகுதியை அபிவிருத்தி செய்யும் ஆரம்பநாள் நிகழ்வில் புனரமைப்பு பணிகள் பூஜை வழிபாடுகளுடன் அடிக்கல் நாட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கௌரவ கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகரன், நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர பிரதி முதல்வர், மாவட்ட செயலக அதிகாரிகள், மாநகரசபை…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

திலீபனை நினை வேந்தும் உரிமை; ஐ.நா. அலுவலகத்தில் 19 பொது அமைப்புகள் மகஜர் கையளிப்பு

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்தும், அந்தச் சிலையை மீள அவ்விடத்தில் வைக்குமாறு வலியுறுத்தியும் இடம்பெற்றுவந்த மூன்று நாள் தொடர் ‘அணையா விளக்கு – அமைதி வழிப் போராட்டம்’ நேற்று  ஐக்கிய நாடுகளின் வதிவிடப் பிரதிநிதி அலுவலகத்தில் மகஜர் கையளிப்போடு தற்காலிகமாக நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. கடந்த மாதம் 27ஆம் திகதி அதிகாலை நல்லூர் பின்வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிலை பொலிஸாரால் அகற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு தரப்பினராலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதன் தொடர்ச்சியாக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5 மணி முதல் ‘அணையா விளக்கு – அமைதி வழிப் போராட்டம்’ ஆரம்பமானது. நினைவுத்தூபிக்கு முன்னால் சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அணையாமல் பாதுகாக்கப்பட்ட நிலையில், 3ஆம் நாள் போராட்டம்  நேற்று…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளை குறைப்பது தொடர்பான முன்னோடித் திட்டம்

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சாரதிகளின் புள்ளிகளை குறைப்பது தொடர்பான முன்னோடித் திட்டம் நேற்று (01) வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு மற்றும் பொலிஸார் இணைந்து இந்த முன்னோடித் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். எதிர்வரும் 2027ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, இத்திட்டம் நடைமுறையிலிருக்கும்.முன்னோடித் திட்ட காலப்பகுதியில் சாரதிகளின் புள்ளிகள் உண்மையில் கழிக்கப்படமாட்டாது எனவும், முறைமை எவ்வாறு செயற்படும் என்பது தொடர்பில் சாரதிகளுக்கு விழிப்புணர்வு மற்றும் விளக்கங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறைமை முழுமையாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டப் பின்னர், போக்குவரத்து விதிமீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மைக்கு ஏற்ப சாரதிகளின் புள்ளிகள் கழிக்கப்படுமென போக்குவரத்து அமைச்சு கூறியுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து விதிமீறல்களை குறைத்து வீதி பாதுகாப்பை மேம்படுத்த முடியம் எனவும் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய – ரவிகரன் எம்.பி

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பள விவகாரம்; மகாவலி அதிகாரசபைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கக் கோரிய – ரவிகரன் எம்.பி முல்லைத்தீவு – கொகுத்தொடுவாய் மத்தி கிராமஅலுவலர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்கால்வெளி பகுதியில் தமிழ் மக்களின் தனியார்காணிகளிலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அரசகாணிகளிலும் அத்துமீறி சட்டவிரோதமாக உப்பளம் அமைக்கப்படுகின்ற விவகாரத்தில், மகாவலி அதிகாரசபைக்கு எதிராக உரிய சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திடமும், கரைதுறைப்பற்று பிரதேசசெயலகத்திடமும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் கரைதுறைப்பற்று பிரதேசசேயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேசசபையினையும் அழைத்துக் கலந்துரையாடி குறித்த சட்டவிரோத உப்பளச் செயற்பாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படுமென முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தின் காணிக்குரிய மேலதிக மாவட்டசெயலாளர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் 01.10.2026நேற்று இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்த்தொடுவாய் மத்தி…

மேலும் படிக்க