தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிர்மாய்த்துள்ளார்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த கைதி யாழ்ப்பாண சிறைச்சாலையில் உயிர்மாய்த்துக்கொண்ட சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்துள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த குற்றவாளியான பூபாலசிங்கம் ஜெயகுமார் (வயது 46) யாழ். சிறைச்சாலையில் குளியல் பகுதியில் உயிர்மாய்த்துக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. புங்குடுதீவைச் சேர்ந்த பாடசாலை மாணவி கடந்த 2015ஆம் ஆண்டு மே மாதம் பாடசாலைக்கு செல்லும் வேளையில் கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2017-ஆம் ஆண்டு யாழ்ப்பாண மேல் நீதிமன்றம் 7 பேருக்கு மரண தண்டனை விதித்தது. அதன்பின்னர் இந்த தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றமும் மேல் நீதிமன்றமும் உறுதி செய்திருந்தது. அதன்படி  அந்த தீர்ப்பை வாசிப்பிற்காக அவர்களை யாழ்ப்பாணம் உயர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இந்தியாவின் அன்பளிப்பு; வடக்கு காவல் நிலையங் களுக்கு 134 வாகனங்கள்!

இந்தியா அரசாங்கம், இந்தியா–இலங்கை நட்பு திட்டத்தின் கீழ் இலங்கை  காவல்துறையினரின் பயன்பாட்டிற்காக 134 ஒற்றை கெப் (Single-Cab) வாகனங்களை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவிடம் இன்று (25) உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளது. இந்த நிகழ்வு இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான இந்த வாகனங்கள் வட மாகாணத்திலுள்ள காவல் நிலையங்களில் சேவைக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, எதிர்காலத்திலும் இலங்கைக்கு இதுபோன்ற உதவிகளை வழங்க இந்தியா தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படும் என தெரிவித்தார்.அதேவேளை, இந்த அன்பளிப்பை பாராட்டும் வகையில் காவல்துறை.மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்திய உயர்ஸ்தானிகருக்கு நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார். இந்த நிகழ்வில் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அமைச்சின் செயலாளர் ரவி சேனவிரத்ன, டிமோ நிறுவனத்தின் பொது முகாமையாளர்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அடுத்த 24 மணித்தியாலங்களில் வெள்ள அபாயம்! பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் களு கங்கையை அண்மித்த சில தாழ்நிலப் பகுதிகளில் சிறியளவிலான வெள்ள நிலைமை ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, களுத்துறை, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பகுதிகளில் இந்த நிலைமை உருவாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆற்றங்கரையோர மற்றும் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அத்துடன் சீரற்ற வானிலைக்கு மத்தியில், மண்சரிவு அபாய எச்சரிக்கைகளைப் புதுப்பிப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அவ்வமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், இன்று (24) முற்பகல் 6.00 மணி முதல் நாளை முற்பகல் 6.00 மணி வரை அமுலில் இருக்கும் வகையில் இந்த எச்சரிக்கைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்ட, தெரணியகல,…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

சீரற்ற வானிலை காரணமாக இதுவரை யில் 28,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

சீரற்ற வானிலை காரணமாக இதுவரையில் 28,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அந்நிலையம் விடுத்துள்ள புதிய அறிக்கையின்படி, அனர்த்தங்களினால் 7,482 குடும்பங்களைச் சேர்ந்த 28,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். அங்கு 3,950 குடும்பங்களைச் சேர்ந்த 15,313 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மரணமும் பதிவாகியுள்ளது. இதற்கு மேலதிகமாக, புத்தளம் மாவட்டத்தில் 1,219 குடும்பங்களைச் சேர்ந்த 4,265 பேரும், கொழும்பு மாவட்டத்தில் 1,051 குடும்பங்களைச் சேர்ந்த 4,566 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் 1,204 குடும்பங்களைச் சேர்ந்த 4,558 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 141 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும், காலி மாவட்டத்தில் 09 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரும் மற்றும் வவுனியா மாவட்டத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

தேசிய மக்கள் சக்தியின் யாழ் ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப் பட்டுள்ளது

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த அலுவலகமானது இன்று(23.5.2026) யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் , அரியாலை பகுதியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் திறந்து வைத்தனர்.நிகழ்வில், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான , க.இளங்குமரன் மற்றும் ஜெ.ரஜீவன் , மாநகர சபை உறுப்பினர்களான, சு.கபிலன் , ச.பிரதீபன் உள்ளிட்ட யாழ். மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி உறுப்பினர் , கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

ஒரே நேரத்தில் பல பகுதிகளில் இடம்பெற்ற சுத்திகரிப்பு நடவடிக்கை

’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், நாட்டின் பல மாவட்டங்களில் கரையோரப் பகுதிகளை சுத்தப்படுத்தும் விசேட வேலைத்திட்டங்கள் இன்று (23) ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்ற பிரதான நிகழ்வை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். “அழகான கரையோரம் – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில், யாழ்ப்பாண பண்ணை கடற்கரை உள்ளிட்ட பல பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டன. இலங்கை இராணுவத்தின் வழிகாட்டலின் கீழ் நாடு முழுவதும் 256 கரையோர சுத்திகரிப்பு வேலைத்திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அதற்கிணங்க யாழ்ப்பாணக் குடாநாட்டில் மட்டும் 30 இடங்களில் சுத்திகரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புகளுடன், அரச அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள், மருத்துவமனை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

கிழக்கு காணிகளை பாதுகாக்க விசேட குழு – ஜனாதிபதி அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் காணி உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளை கட்டுப்படுத்தும் வகையில் புதிய விசேட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி காணிகள் கையகப்படுத்தப்படுவதால் மாகாணத்தில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.இதனைத் தடுக்கும் நோக்கில் பிரதி பொலிஸ் மா அதிபர் தலைமையில் விசேட குழு ஒன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். நேற்று (22) அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.மேலும், அம்பாறை மாவட்டத்தில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் உள்ளிட்ட கல்வி நிர்வாக பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாக அமைப்புகள் அரசியல் சார்ந்தவை அல்ல, அவை முழுமையாக நிர்வாக பணிகளாகவே செயல்பட வேண்டும் எனவும்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்து தொலைத்தொடர்பு கம்பம் உடைந்து சேதம்

கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்ற லொறி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், தொலைத்தொடர்பு கம்பம் இரண்டு முழுமையாக உடைந்து சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் தொலைத்தொடர்பு சேவைகள் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்விபத்து இன்று (22) அதிகாலை 12.00 மணியளவில் கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட92 ம் கட்டை  பகுதியில் இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி சீமந்து (சிமெண்ட்) ஏற்றுவதற்காகச் சென்ற லொறி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்து நடந்த வேளையில் லொறியில் சாரதி மட்டுமே இருந்துள்ளார். அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் தூக்கக் கலக்கம் (நித்திரைச் சிறுக்கம்) காரணமாகவே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த லொறி, வீதியை விட்டு விலகி தொலைதொடர்பு காமத்தை உடைத்துக்குண்டு மரத்தில் மோதி  அருகில் இருந்த மற்றுமோர் தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

இலங்கையின் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது

இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின்படி, கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை கணிசமாக அதிகரித்துள்ளது என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்த நாட்டின் முதன்மைப் பணவீக்க மதிப்பு, ஏப்ரல் மாதத்தில் 4.7 சதவீதம் வரை உயர்வடைந்துள்ளது. இது மார்ச் மாதப் பணவீக்கத்தை விட அதிகமான உயர்வாகும். மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை சற்று அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் 3.8 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவற்ற பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் வரை மிகக் கடுமையான உயர்வைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் தேசிய பணவீக்கம் இந்த அளவுக்குத் திடீரென உயர்வடைவதற்கு, உணவற்ற பிரிவில்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை; நீதிமன்றில் வெளிவந்த தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து…

மேலும் படிக்க