வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை நினைவேந்தல் அனுஷ்டிப்பு
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்கள் மற்றும் போராளிகள் 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனக்கலவரத்தின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டதை நினைவுகூரும் நினைவஞ்சலி நிகழ்வு நேற்று வடக்கு கிழக்கில் இடம்பெற்றது. திருகோணமலை பிரதான கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் நினைவேந்தல் மண்டபத்தில் இவ் நினைவேந்தல் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, உயிர்நீத்தோரின் நினைவாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் இயக்கத்தின் ஸ்தாபகத் தலைவர்களான தங்கத்துரை மற்றும் குட்டிமணி ஆகியோரின் உருவப்படங்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், சுடரேற்றி மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை வன்முறைகளின் போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் தியாகம் நினைவுகூரப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள்…
மேலும் படிக்க