இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பயங்கர வாதத் தடைச்சட்டம் விரைவில் நீக்கப்படும்! ஹர்ஷன நாணயக்கார

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், பல தசாப்த கால பழமையான சட்டத்தை ஒழிப்பதற்கான தீர்க்கமான நடவடிக்கையாக புதிய சட்டமூலம் ஏற்கனவே அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டவுடன், பயங்கரவாதத் தடைச் சட்டம் ஒழிக்கப்படும் என அமைச்சர் உறுதிப்படுத்தினார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இன்றி நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்கள் சம்பந்தப்பட்ட மேல் நீதிமன்றத்தின் ஊடாகப் பிணை கோரி விண்ணப்பிக்கலாம் என்றும் விளக்கமளித்தார். பிணை வழங்குவது அரசாங்கத்தின் கொள்கை முடிவு அல்ல என்றும், இதுபோன்ற விவகாரங்களில் நீதித்துறை சுதந்திரமாகச் செயற்படுகிறது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளது.

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 76,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கிணங்க இந்த ஆண்டின் நேற்று வரையான காலப்பகுதியில் 76,044 டெங்கு நோயாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளதுடன் 53 டெங்கு மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்த பிரிவு விடுத்துள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த  ஜூலை மாதத்தின் முதல் 19 நாட்களில் மாத்திரம் 20,666 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த  பிரிவு குறிப்பிட்டுள்ளது. அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தில் இனங் காணப்பட்டுள்ள  னர்.கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம்   15,910 நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் அதற்கு அடுத்ததாக கொழும்பு மாவட்டத்தில் 15,110 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.  ஏனைய மாவட்டங்களான மாத்தறையில் 5330 பேரும், கண்டியில் 5111 பேரும், களுத்துறையில் 5010 பேரும் இரத்தினபுரியில் 4295 பேரும், காலியில் 4260 பேரும் பதிவாகியுள்ளதாக அந்தப்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரசாங்கத்தை வீழ்த்து வதற்கான செயற் பாடுகளில் ஈடுபடப் போவதில்லை மனோகணேசன்

ஜனநாயக ரீதியில் தேர்தலொன்று நடத்தப்படும் வரைக்கும் இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான செயற்பாடுகளில் ஈடுபடப்போவதில்லை என்றும் தடையின்றி அரசாங்கத்தின் இப்பயணம் தொடர்வதற்கு வழிவிடுவதாகவும்  தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலே,அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்ததாவது; தற்போதைய அரசாங்கத்தின் ஆயுட்காலம் மற்றும் பாரளுமன்ற நடவடிக்கைகள் தொடரட்டும்.  எதிர்க்கட்சிகள் என்ற ரீதியில், இந்த அரசாங்கத்தை வீழ்த்தவோ அல்லது  எதிராகவோ செயற்படப் போவதில்லை. அரசாங்கம் தடையின்றி அதன் பயணத்தைத் தொடரட்டும்.  தேர்தலொன்று நடத்தப்படும் வரை   எவ்வித முட்டுக் கட்டைகளும் போடப்படமாட்டாது. அரசாங்கங்கள் வருவதும் போவதும் இயல்பான ஒன்று. இந்நிலையில்,நாடு தற்போதைய நிலையில் சுமுகமாக முன்னோக்கிச் செல்வதற்கே விரும்புகிறோம்.உரிய காலத்தில் தேர்தல் நடத்தப்பட்டு மக்கள் தீர்ப்பின் மூலம் மட்டுமே அரசியல் மாற்றங்கள் நிகழ…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

பாதிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்க விசேட அமைச் சரவைப் பத்திரம்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் பாதிக்கப்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் பிற நிவாரணங்களை ஆராய்வதற்கு விசேட  குழு நியமிக்கப்படவுள்ளது.இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.இவ்வாறான சம்பவங்களின்போது பாதிக்கப்படும் அரசாங்க அதிகாரிகளுக்கு இழப்பீடு வழங்கப்படுவது வழமையானது.எனினும் நீர்கொழும்பு  சம்பவத்துக்காக மேலதிக இழப்பீடு மற்றும்  நிவாரணங்கள்  வழங்கும் நோக்கிலேயே,   விசேட குழு  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர்  குறிப்பிட்டார்.இக்குழு முன்வைக்கும் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு  சிறைச்சாலையில் அண்மையில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் 10 சிறைச்சாலை அதிகாரிகள் உயிரிழந்தனர். உயிரிழந்த அதிகாரிகளுக்கு   பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவர்களின் இறுதிச்சடங்கு செலவுகளுக்காக ஏற்கனவே தலா 05 இலட்சம் ரூபா  வழங்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் காலத்தில் கூடுதலாக ஒவ்வொரு அதிகாரிக்கும் தலா 05 இலட்சம் ரூபா  வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி கண்டாவளை பாலத்தில் நடந்த விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிக் கொண்டு பயணித்த கப் ரக வாகனம், பரந்தன் வீதி ஊடாக முல்லைதீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வெளிகண்டல் பகுதியில் வேகட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பளையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும்.! இன்றைய வானிலை அறிவிப்பு

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (11) மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மாகாணம் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கதிர்காம பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்று, அவர்களை இறக்கிவிட்டு திருகோணமலை நோக்கி திரும்பி வந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மோதியதில் வீடு மற்றும் அதிலிருந்த பல்வேறு உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியாவில் இன்று முதல் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டிகள்

வவுனியாவில் இன்று முதல் வடமாகாண குத்துச்சண்டைப் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளன. வவுனியா பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ஆரம்பமான இப்போட்டிகள், எதிர்வரும் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டிலும், மாவட்ட குத்துச்சண்டைச் சங்கத்தின் தலைவரும் குத்துச்சண்டை பயிற்சியாளருமான நிக்ஸன்  ரூபராஜ் அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நடைபெறும் இப்போட்டித் தொடரில், வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 90 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இப்போட்டிக்கான வெற்றிக் கேடயங்களின் அனுசரணையை வவுனியா ஒமேகா ஆடைத்தொழிற்சாலை வழங்கியுள்ளது. போட்டியின் ஆரம்ப நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ம. சபர்ஜா கலந்துகொண்டார். அத்துடன், ஒமேகா ஆடைத்தொழிற்சாலையின் மனிதவள முகாமையாளர் அன்ரன் மதன் ராஜ், மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர், வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பலர் நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். குத்துச்சண்டை விளையாட்டு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

அராலி கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது.

அராலி மேற்கு கடலில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரது சடலமானது மீட்கப்பட்டுள்ளது. அராலி மத்தி, வட்டுக்கோட்டையை சேர்ந்த செல்லையா சிவகுமார் (வயது 49) என்பவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் இன்றையதினம் கடற்றொழிலுக்கு சென்றுள்ளார். அதன்பின்னர் இன்று மதியம் 12.40 மணியளவில் அவர் கடலில் சடலமாக மிதப்பதை வேறு மீனவர்கள் அவதானித்தனர். பின்னர் இது குறித்து உறவினர்களுக்கும், வட்டுக்கோட்டை பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவுள்ளனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்

மேலும் படிக்க