அண்மை செய்தி தாயகச் செய்தி 

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் வவுனியாவில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.வவுனியா பழைய பேரூந்து நிலையத்தின் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது இன்று இடம்பெற்றிருந்தது.இதன் போது காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் தமது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களை தாங்கியவாறும், நீதி கோரிய பதாதைகளை தாங்கியவாறும் வேண்டும் வேண்டும் சர்வதேச நீதி வேண்டும், வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம் என்று கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதில் பாதிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் தாய்மார் பலரும் கலந்து கொண்டு கண்ணீர் மல்க இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

இலங்கை வந்தடைந்த இந்திய எரிபொருள் கப்பல்

இந்திய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் (IOC) எரிபொருள் கப்பல் ஒன்று நேற்று (29) காலை கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. அந்தக் கப்பல் 18,000 மெட்ரிக் தொன் டீசலையும், 18,000 மெட்ரிக் தொன் 92 ஒக்டேன் பெற்றோலையும் ஏற்றி வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் (CPC) தலைவர் டி.ஏ. ராஜகருணா உறுதிப்படுத்தினார். ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை டீசல் கையிருப்பு போதுமானதாக உள்ளது என்றும், 92 மற்றும் 95 ஒக்டேன் ரக பெற்றோல் விநியோகம் ஜூன் மாதம் வரை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற இராஜதந்திர தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த எரிபொருள் ஏற்றுமதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது நிலவி வரும் எரிபொருள் விநியோக சவால்களுக்குத் தீர்வு…

மேலும் படிக்க
அண்மை செய்தி புலச் செய்திகள் 

மத்திய கிழக்கு போரில் கொல்ல ப்பட்ட அமெரிக்க தமிழ் இராணுவ வீரர்

மத்திய கிழக்கு போரில் அமெரிக்க இராணுவ வீரரான விசாகன் சத்தியமூர்த்தி என்ற தமிழ் இராணுவ வீரரும் கொல்லப்பட்டுள்ளார். ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி ஆரம்பமான போர் இன்று ஒரு மாதம் கடந்தும் தொடர்ந்து நடைபெறுகின்றது.இந்தப் போரில் முக்கிய தலைவர்கள், இராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 1993 ஆம் ஆண்டு மே மாதம் 10 ஆம் திகதி அமெரிக்க இராணுவத்தில் இணைந்த விசாகன் சத்தியமூர்த்தி கடந்த 21 ஆம் திகதி மத்திய கிழக்கு யுத்தத்தில் உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதி கிரியைகள் ஏப்ரல் 2ஆம் திகதி மதியம் 1.00 மணியளவில் 950 S Sepulveda Blvd, Los Angeles, CA 90049, United States என்ற முகவரியில் அமைந்துள்ள Los Angels National Cemetory யில் நடைபெறவுள்ளதாக…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

பாராளுமன்ற உறுப்பினர் சென்ற கார் மதிலில் மோதி விபத்து

தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசால் பயணித்த கார், சிலாபம் பண்டாரவத்தை வளைவில் வீதியை விட்டு விலகி மதில் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.அந்த நேரத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாத்திரமே காரில் இருந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விபத்தினால் கார் மற்றும் மதிலுக்குப் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும் பாராளுமன்ற உறுப்பினருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வயோதிபப் பெண் ஒருவர் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு.

யாழ்ப்பாணம் – தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியில் வசித்து வந்த வயோதிபப் பெண் ஒருவர் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று மாலை எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகதேவன் சிவஞானம் என்ற 62 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாத நிலையில் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் ஊர் மக்களும் தொடர் தேடுதலில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காட்டிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறிருக்க இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என ஊர் மக்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

இலங்கையில் வெப்ப நிலை 40 பாகை செல் சியஸ் இனை விட அதிகமாக இருக்கும்!

இலங்கையில் 02.04.2026 முதல் 15.04.2026 வரை வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் இனை விட அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் மிக அவதானமாக இருப்பது அவசியம்  என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை அவர் வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில், எதிர்வரும் 02.04.2026 முதல்  15.04.2026 வரை சூரியன் இலங்கைக்கு மேலாக உச்சம் கொடுக்கவுள்ளது. ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தின் முற்பகுதியில் இலங்கையின் பல பகுதிகளுக்கும் சூரியனின் அமைவு கிட்டத்தட்ட 90 பாகையில் அமையும் என்பதனால் இலங்கை முழுவதும் அதிக வெப்பநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எதிர்வரும் 04.04.2026 அன்று சூரியன் பருத்தித்துறைக்கு நேராகவும், 05.04.2026 அன்று சூரியன் எல்பிட்டியவுக்கு நேராகவும், 06.04.2026 அன்று களுத்துறைக்கு நேராகவும், 07.04.2026 அன்று கொழும்புக்கும் களனியாவுக்கும் நேராகவும், 08.04.2026 அன்று மகியங்கனைக்கு நேராகவும் உச்சம் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

செங்கடல்: ஈரான்–அமெரிக்க பதற்றம் அதிகரிப்பால் உலக ளாவிய கப்பல் போக்கு வரத்து ஆபத்தில்

விளிம்பில் செங்கடல்: ஈரான்–அமெரிக்க பதற்றம் அதிகரிப்பால் உலகளாவிய கப்பல் போக்குவரத்து ஆபத்தில் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ வர்த்தகம், எரிசக்தி மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள பலமுனை நெருக்கடி மத்திய கிழக்கில் ஒன்றோடொன்று இணைந்த மோதல்கள் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச அமைப்பு மிகவும் ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஆரம்பத்தில் தனித்தனி பிராந்திய மோதல்களாக இருந்தவை, இப்போது செங்கடல் முதல் பாரசீக வளைகுடா வரை பரவியுள்ள ஒரு பரந்த நெருக்கடியாக மாறியுள்ளது. இது உலகளாவிய வர்த்தகம், எரிசக்தி பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. செங்கடலில் பதற்றம்: கப்பல் போக்குவரத்து பாதைகளுக்கு பெரும் அச்சுறுத்தல் யேமனில் செயல்படும் ஹூதி படைகளின் புதிய ஏவுகணைத் தாக்குதல்களைத்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பஸ்களில் புதிய கட்டணப் பட்டியல் கட்டாயம். போக்கு வரத்து அதிகாரசபை!

கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த 12.19% பஸ் கட்டண அதிகரிப்பைத் தொடர்ந்து, புதிய கட்டண விபரங்களை பயணிகள் தெளிவாகப் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்துமாறு போக்குவரத்து அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது. முக்கிய விதிமுறைகள் மற்றும் தண்டனைகள்: பயணிகள் சேவை அனுமதிப்பத்திர நிபந்தனை 16 (A) இன் படி, ஒவ்வொரு பேருந்திலும் திருத்தப்பட்ட கட்டணப் பட்டியல் காட்சிப்படுத்தப்பட வேண்டும். பட்டியலைக் காட்சிப்படுத்தத் தவறும் பஸ்களின் அனுமதிப்பத்திரங்கள் (Permit) தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக இரத்து செய்யப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட ஒரு ரூபாய் கூட மேலதிகமாக அறவிட முடியாது. அவ்வாறு அறவிடுவது சட்டவிரோதமானது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது. புதிய கட்டண விபரங்கள் : குறைந்தபட்ச கட்டணம்: ரூ. 27 இல் இருந்து ரூ. 30 ஆக அதிகரிப்பு. அதிகபட்ச கட்டணம்: ரூ.…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி….

மறைந்த ஊடகச் செம்மல் சலீமிற்கு முதற்தடவையாக காரைதீவு மண்ணில் நினைவஞ்சலி…. கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கத்தின் தலைவரும் அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கங்கத்தின் பிரதி தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான ஏ.எல்.எம் சலீமிற்கு நேற்று சனிக்கிழமை (28) காரைதீவில் அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மூன்று தசாப்த காலமாக சிரேஷ்ட ஆலோசகராகவும், உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்து இன,மத வேறுபாடின்றி வாழ்நாள் முழுவதும் ஊடகத்திற்காக குரல் கொடுத்து மறைந்த ஏ.எல்.எம் சலீமின் தியாகங்களை நினைவு கூர்ந்து இந் நிகழ்வு இடம்பெற்றது. அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க தலைவர் ச.லோகநாதன் தலைமையில் அவரது இல்லத்தில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆரம்பமாக அன்னாருக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொழிற்சங்க வளர்ச்சிக்காக அமரர் ஏ.எல்.எம் சலீம் யுத்த…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய  மூவர் கைது

ஹட்டன் பகுதியிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் வகுப்பறைக்குள் வைத்து மாணவர் ஒருவரைத் தாக்கிய  மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக இரண்டு மாணவர்கள் மற்றும் ஒரு பழைய மாணவர் உட்பட மூவரே கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு உள்ளான மாணவன் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர், குறித்த பாடசாலையில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் இரு தரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாடசாலை மட்டத்தில் இந்தச் சம்பவம் ஆரம்பத்தில் சமரசம் செய்யப்பட்ட போதிலும், தாக்குதல் நடத்தப்படும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவனின் தாயார் நேற்று பிற்பகல் ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார்,…

மேலும் படிக்க