சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

புளியங்கூடலில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவு நாள்

2009 முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழின இனப்படுகொலையை நினைவுகூர்ந்து அனுஸ்டிக்கப்படும் மே 18 – “தமிழின அழிப்பு நாள்” வாரத்தின் 5 ஆம் நாளான இன்று  வேலணை – புளியங்கூடலில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட நினைவிடத்தில் இறந்த உறவுகளை நினைவுகூர்ந்து சுடரேற்றி அஞ்சலிக்கப்பட்டதுடன் முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கபட்டது. தீவக நினைவேந்தல் குழுவின் ஏற்பட்டில் புளியங்கூடல் சந்தியில்  பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அரங்கில் இன்று (16) இரவு 7.00 மணியளவில்   முள்ளிவாய்க்காலின் வலிகளை இறுதிவரை அனுபவித்தவரும் மாவீரரது சகோதரனுமான சண்முகலிங்கம் அகஷ்கரன் அவர்களால் ஈகச்சுடர் ஏற்றபட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டது. 2009 இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைகள் மற்றும் முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் மக்கள் எதிர்கொண்ட பட்டினி மற்றும் மனிதாபிமான அவலங்களும் நினைவுகூரப்பட்டதுடன் திடலில் நாட்டிவைக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான தீபங்கள் கூடி நின்ற மக்களால் ஏற்றப்பட்டதுடன் அழிப்பின் அடையாள…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கட்டுக்கரை திட்ட மேலாண்மை குழுவின் கட்டமைப்பைக் கலைக்க தீர்மானம்!

மன்னார் மாவட்ட செயலகத்தில் கட்டுக்கரை குளத்தின் கீழ் சிறுபோக வேளாண்மை செய்கின்ற, ஈவு  வழங்குகின்ற செயற்பாடுகளில் இருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாக பொது மக்கள் மற்றும் விவசாயிகள் மூலம்  வழங்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைவாக ஆராயும் விசேட கூட்டம்  மன்னார் மாவட்டச் செயலக மண்டபத்தில் இடம்பெற்றது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் , மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும்,  பிரதி அமைச்சருமான உபாலி   சமரசிங்க நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன் போது பிரதேச செயலாளர்கள்,உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், கட்டுக்கரை குள விவசாய அமைப்புகள்,  திட்ட மேலாண்மை குழு போன்ற பிரதேச அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டார்கள். கடந்த பல வருடங்களாக இந்த   ஈவு    வழங்குகின்ற விடயத்திலே சிறுபோக விவசாயிகள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருப்பதாக தொடர்ச்சியான…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

போரதீவில் முள்ளிவாய்க் கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

கடந்த யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் உயிருக்குப் போராடிய மக்கள் உப்புக்கூட இல்லாமல் தங்களிடமிருந்த அரிசியை வைத்துக் கொண்டு கஞ்சி காய்ச்சி அவர்களது பசியைப் போக்கியிருந்தனர். இந்நிலையில் அப்போதைய சூழ்ந்நிலையில் அங்கிருந்த மக்கள் கஞ்சி காய்ச்சி அருந்தியதை நினைவு கூர்ந்து வருடந்தோறும் இக்காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி மக்களுக்கு வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கில் இடம்பெற்று வருகின்றன. இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை(15) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தினர்.

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை சிறப்புச் செய்தி 

முள்ளிவாய்க்கால் 2009: தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும்.

முள்ளிவாய்க்கால் 2009: தியாகத்தின் சாட்சியமும் விடுதலையின் நித்தியக் கனவும் யுத்தத்தின் இறுதிக்கட்டம், மனிதாபிமான பேரழிவு மற்றும் நீதிக்கான தேடல் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ மௌனிக்கப்பட்ட முற்றுகை உலகிலிருந்து மறைக்கப்பட்ட இறுதிப்போர் 2009 ஆம் ஆண்டின் இறுதி மாதங்கள், இலங்கை உள்நாட்டுப் போரின் கடைசி கட்டமாக மட்டுமல்லாமல், உலக அரசியல், மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்ட வரலாற்றில் மிகுந்த சர்ச்சையையும் வேதனையையும் ஏற்படுத்திய காலமாகவும் நினைவுகூரப்படுகின்றன. பல தமிழர்களின் நினைவகத்தில், முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இராணுவ மோதலின் முடிவு அல்ல; அது பாதுகாப்பற்ற பொதுமக்கள் சிக்குண்ட மனிதாபிமான பேரழிவின் அடையாளமாக வாழ்கிறது. போரின் இறுதி கட்டத்திற்கு முன்னர், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பல ஆண்டுகளாக…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை

நாட்டின் தென்மேற்கு திசையில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்தும் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நேற்று முற்பகல் வௌியிடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை அறிவிப்பு இன்று முற்பகல் 08.30 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க அடுத்து வரும் 36 மணித்தியாலங்களுக்குள் மேற்குறிப்பிட்ட பகுதிகளில், 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்துடன் நிலவும் மோசமான வானிலை காரணமாக அவசரகால நிலை ஏற்பட்டால், உடனடியாக செயற்படுவதற்கு ஹெலிகாப்டர்களும் படையினரும் தயாராக இருப்பதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.அதேவேளை, நேற்று பிற்பகலுடன் முடிவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் புத்தளத்தில்…

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டும், எதிரிகளாக அல்ல”; சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்

உலகமே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை, சீனாவின் ‘கிரேட் ஹால் ஆஃப் தி பீப்பிள்’ மாளிகையில் இன்று (14) ஆரம்பமானது. இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் இந்தத் தீர்மானமிக்க பேச்சுவார்த்தைக்காக பெருமளவிலான ஊடகவியலாளர்களும் பாதுகாப்புப் பிரிவினரும் தயார் நிலையில் உள்ளனர். ஜனாதிபதி ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்கத் தூதுக்குழுவினர் தற்போது பிரதான மாநாட்டு மண்டபத்தில் அமர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. செய்தியாளர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், இரு நாட்டுத் தலைவர்களும் இருதரப்பு உறவுகள் குறித்து நேர்மறையான கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். “ஒரு நிலையான இருதரப்பு உறவு உலகிற்கு நல்லது,” என்று குறிப்பிட்ட அவர், “நாம் கூட்டாளிகளாக இருக்க வேண்டுமே தவிர, எதிரிகளாக அல்ல,” என்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். “நாம் இணைந்து ஒரு…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை.

யாழில் இருந்து வவுனியா சென்ற வவுனியாவைச் சேர்ந்த யுவதி ஒருவரை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர். வவுனியா கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய சுவந்தன் திவ்யா என்ற யுவதியே இவ்வாறு காணாமல் போனவர் ஆவார்.  குறித்த யுவதி கடந்த 27 ஆம் திகதி யாழ்பபணத்தில் இருந்து வவுனியா செல்வதாக சென்ற நிலையிலேயே காணாமல் போயுள்ளதாக காங்கேசன்துறை காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக தகவல் தெரிந்தோர் 0773828845 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் காங்கேசன்துறை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக் கூடாது – ரவிகரன் எம்.பி

கல்விளான் மக்களின் குடியிருப்புக் காணிகள், வீடுகள் பறிக்கப்படக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விஜயரத்தினம் சரவணன் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, கல்விளான் கிராமமக்கள் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் வெள்ள அனர்த்தப் பாதிப்புக்குள்ளாகிவருகின்ற நிலையில் அவர்களை மாற்று இடங்களில் குடியேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு கல்விளான் மக்கள் மாற்று இடங்களில் குடியேற்றப்பட்டாலும், அவர்களால் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகின்ற வீடுகளைகளை அழித்துவிட்டு, காணிகளை அவர்களிடமிருந்து மீளப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படக்கூடாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் வலியுறுத்தலையடுத்து, கல்விளான் மக்கள் தற்போது பயன்படுத்தும் வீடுகள் அழிக்கப்படாதெனவும், காணிகள் அலர்களிடம் மீளப் பெற்றுக்கொள்ளப்படாதெனவும் துணுக்காய் பிரதேச செயலாளரால் இதன்போது பதிலளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 13.05.2026நேற்று இடம்பெற்றபோதே இவ்விடயம்தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

அணு நிழல்களின் மீள்வரம் ரஷ்யாவின் சர்மாத் ஏவுகணை, நேட்டோவின் பாதுகாப்பு அச்சம்,

அணு நிழல்களின் மீள்வரம் ரஷ்யாவின் சர்மாத் ஏவுகணை, நேட்டோவின் பாதுகாப்பு அச்சம், மற்றும் புதிய பனிப்போரின் எழுச்சி ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱═════════════════⊰❉⊱ புதிய மூலோபாய யுகத்தின் தோற்றம் உலக பாதுகாப்பு அமைப்பு இன்று பனிப்போருக்குப் பிந்தைய காலத்தின் மிக ஆபத்தான கட்டத்தை நோக்கி நகர்கிறது. ரஷ்யாவின் RS-28 “சர்மாத்” கண்டம் தாண்டும் அணு ஏவுகணையின் வெற்றிகரமான சோதனையும் அதனை விரைவாக போர்பணிக்குள் கொண்டுவரும் நடவடிக்கையும் உலக அரசியல் சமநிலையை ஆழமாக மாற்றியமைத்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சர்மாத் ஏவுகணையை சாதாரண அணு ஆயுதமாக அல்லாமல், மேற்கத்திய உலகின் முழு பாதுகாப்பு அமைப்புகளையும் முறியடிக்க வடிவமைக்கப்பட்ட புதிய தலைமுறை “அடக்க முடியாத” ஆயுதமாக வர்ணித்துள்ளார். இது…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பில். முள்ளிவாய்க் கால் இனப்படு கொலை யின் 17வது ஆண்டு நினைவேந்தல்

தமிழினத்தின் வலி நிறைந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17வது ஆண்டு நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்றைய தினம் 12.05.2026 செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு உணர்வுப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. ​​இந் நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இ.சிறிநாத் கலந்துகொண்டு நினைவுத் தூபியில் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினார். இந்த நினைவேந்தல்​நிகழ்வின் தொடக்கத்தில், உயிரிழந்த எம் உறவுகளை நினைவு கூறும் முகமாக மலரஞ்சலி செலுத்தப்பட்டு, ஈகைச் சுடர்களும் ஏற்றப்பட்டன.தொடர்ந்து இறுதிப் போரின் போது மக்கள் பட்டினிச் சாவிலிருந்து தப்பிக்கவும், உயிர் வாழவும் ஆதாரமாக விளங்கிய வரலாற்றுச் சுவடுமிக்க ‘உப்பில்லா கஞ்சி’ பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற…

மேலும் படிக்க