சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜி ற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி

சமர்க்களநாயகன் பிரிகேடியர் பால்ராஜிற்கு சபையில் அஞ்சலி செலுத்தினார் – ரவிகரன் எம்.பி விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நாடாளுமன்றில் அஞ்சலி செலுத்தியுள்ளார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களால் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன. கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர். உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன் – என்றார்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ். பல்கலை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கொலை; நீதிமன்றில் வெளிவந்த தகவல்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். சாட்சியமளித்த பொலிஸார், விரிவுரையாளரின் மரணத்திற்கான காரணம் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமையே என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவர் மீதும் சந்தேகம் நிலவுவதாகவும் நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இருவரின் மரண விசாரணைகளையும் தொடர்ந்து வழக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், கைது செய்யப்பட்டுள்ள சிரேஷ்ட விரிவுரையாளரின் மருமகன் மற்றும் மகளின் விளக்கமறியலை அன்றைய தினம் வரை நீடித்து…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சடுதியாக விலை அதிகரிப்பு.

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கடந்த 10 நாட்களுக்குள் சடுதியாக அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. டொலரின் மதிப்பு உயர்வால் ஏனைய அத்தியாவசியப் பொருட்களின் மொத்த விலைகளும் கடந்த 10 நாட்களுக்குள் கணிசமாக உயர்ந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது: அந்தவகையில், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 225 ரூபாயிலிருந்து 245 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கின் மொத்த விலை 145 ரூபாயிலிருந்து 160 ரூபாயாகப் பதிவாகியுள்ளது.10 நாட்களுக்கு முன்னர் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் பெரிய வெங்காயம், இன்று 200 ரூபாவை நெருங்கியுள்ளது. அதேநேரம், ஒரு கிலோகிராம் காய்ந்த மிளகாயின் விலை 900 ரூபாவிலிருந்து 1,000 ரூபாவாகவும், வெள்ளைப்பூண்டு ஒரு கிலோகிராம் 350 ரூபாவாகவும் உயர்ந்துள்ளது.மேலும், இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகளின்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் போராட்டம்!

வேதன முரண்பாடு உள்ளிட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கம் இன்று (21) முதல் காலவரையறையற்ற தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளது. தங்களது கோரிக்கைகள் தொடர்பாக அதிகாரிகளுடன் இதற்கு முன்னர் பலசுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அதில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்பதாலேயே இந்த தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டத்தின் முதற்கட்டமாக மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கள் போன்ற வெளிப்புறக் குழுக்களில் பங்கேற்பதில் இருந்து பொறியியலாளர்கள் விலகியிருப்பார்கள் என வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் உமேஷ் அலுத்பால ஊடகவியலாளர்களிடம் குறிப்பிட்டார். மேலும், தேசிய தேவைகளைக் கருத்திற் கொண்டு இதுவரை முன்னெடுக்கப்பட்டு வந்த, வீதி அபிவிருத்தி அதிகாரசபைச் சட்டத்தின் கீழ் உத்தியோகபூர்வமாக ஒதுக்கப்படாத ஏனைய பணிகளில் இருந்தும் விலகியிருக்க பொறியியலாளர்கள் தீர்மானித்துள்ளதாக…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மோட்டார் சைக்கிள் விபத்தில் 19 வயது பாடசாலை மாணவன் பலி

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள 64 ஆம் கட்டைப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.திருகோணமலை -மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்றிரவு (19) இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் மூதூர் -ஆணைச்சேனை பகுதியை சேர்ந்த 19 வயது றிஸ்வான் சிப்கி எனும் பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றுமொருவர் இளைஞரும் காயமடைந்துள்ளார்.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது – மோட்டார் சைக்கிளில் 2 இளைஞர்களும் தோப்பூரிலுள்ள உணவகம் ஒன்றுக்கு சென்று , மீண்டும் மூதூருக்கு வரும் வழியில் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விளகி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகிறது. விபத்தில் உயிரிழந்த இளைஞனின் ஜனாஸா மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்த இளைஞனும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

அர்ச்சுனாவின் உரைக்கு எதிராக விரிவுரையாளர் இளம்பிறையன் எச்சரிக்கை

அரசியற் செயற்பாடுகளை வெளியில் வைத்துக்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதனுக்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பல்கலைக்கழக மாணவர்கள் மதுபானத்துக்காகவும், கொத்து ரொட்டிக்காகவுமே போராட்டங்களில் ஈடுபடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து குறித்து,வினவிய போதே,விரிவுரையாளர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது; பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இந்த பல்கலைக்கழகத்திலேயே கல்வி கற்றவர். ஆகவே மாணவர்கள் அவ்வாறு செய்வார்களா என அர்ச்சுனா யோசிக்க வேண்டும். தமது தேவைகளுக்காக இவ்வாறு சொல்லக் கூடாது. நான் இந்த பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று, இங்கேயே நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றுகிறேன். எமது மாணவர்கள் இவ்வாறெல்லாம் செய்பவர்கள் அல்ல. எமது மக்கள் பிரதிநிதிகளே எமது பல்கலைக்கழகத்தை இழிவுபடுத்துவதை தவிர்க்க வேண்டும். போட்டி அரசியலை பல்கலைக்கழகத்துடன் செய்யக் கூடாது. அதனை வெளியே செய்யுங்கள். பல்கலைக்கழக மாணவர்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

முள்ளிவாய்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு

முள்ளிவாய்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வெழுச்சியுடன் முன்னெடுப்பு விஜயரத்தினம் சரவணன் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் 18.05.2026இன்று முள்ளிவாய்கால் நினைவுமுற்றத்தில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. அந்தவகையில் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையில் 17ஆம் ஆண்டு பிரகடன உரை நிகழ்த்தப்பட்டதுடன், தொடர்ந்து உயிர்நீத்த உறவுகளுக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து சரியாக காலை 10.30மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அந்தவகையில் இறுதிப்போரின்போது உறவுகளை இழந்த முல்லைத்தீவு – வற்றாப்பளையைச் சேர்ந்த சிறீரஞ்சன் ரினோசா என்பவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அத்தோடு ஏனையவர்களாலும் சமநேரத்தில் சுடரேற்றப்பட்டது. அதனையடுத்து முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், உறவுகளை இழந்த உறவுகள் கதறி அழுது, கண்ணீர்சொரிந்து தமது அஞ்சலிகளைச் செலுத்தினர். மேலும் இந்த முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்புநாளின் 17ஆம் ஆண்டு நினைவேந்தலில் நாடாளுமன்றஉறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா…

மேலும் படிக்க
ஈழ அரசியல் ஆய்வு கட்டுரை 

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 2009 இரத்தம் பேசும் இறுதி நிலம்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை 2009 இரத்தம் பேசும் இறுதி நிலம் •⊰✾⊱•════════════•⊰✾⊱• எழுதியவர் — ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், புலனாய்வு மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் •⊰✾⊱•════════════•⊰✾⊱• முள்ளிவாய்க்கால் அது ஒரு கிராமத்தின் பெயரல்ல, மனித இனத்தின் மனச்சாட்சியில் எரிந்து கொண்டிருக்கும் ஒரு இரத்தச் சாட்சியம். அங்கே மரங்கள் கூட நிழல் தர அஞ்சின; வானம் கூட புகை மூட்டத்தால் கருப்புக் கவசம் போர்த்தியது; கடலும் சிவந்தது — ஈழத் தமிழரின் ரத்தம் அலைகளாய் அதில் கலந்ததால். சிங்கள பேரினவாத அரசின் இரும்புக் கைகளில் மனிதாபிமானம் தூக்கிலிடப்பட்டது; படுகொலைகள் மட்டும் தேசியக் கொள்கையாய் மாறின. பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் மரண வலயம் கட்டப்பட்டது; உயிர் காக்க ஓடிய மக்களின் மேல் வானத்திலிருந்து நெருப்பு பொழிந்தது. அம்மாவின் மார்பில்…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ஒரே நாளில் நீருக்கு பலியான 6 உயிர்கள்;

நேற்றையதினம்  தெல்தெனிய – பம்பரகல விகாரைக்கு அருகில் உள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடுவதற்கு நான்கு இளைஞர்கள் சென்றுள்ளனர். அவர்கள் நீராடிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் குறித்த இளைஞர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து பிரதேச மக்களுடன் பொலிஸார் இணைந்து தேடுதல் நடத்திய நிலையில் ஒருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதுடன், ஏனைய மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் 18 – 21 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.   இதேவேளை, யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் உள்ள நீர்த்தடாகத்தில் ழூழ்கி சிறுவன் ஒருவர்  நேற்றையதினம் பரிதாபமாக உரியிழந்துள்ளார். சிறு வயதில் தந்தையை இழந்த குறித்த சிறுவன் தாயாரின் அரவணைப்பில் வளர்ந்து வந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை புலோலி மேற்கு பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய திலீபன் சந்தோஷ் என்ற சிறுவனே…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

நந்தக்கடலில் முள்ளி வாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்காக, ரவிகரன் நந்தக்கடலில் அஞ்சலி முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் அந்தவகையில்முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்கள் 18.05.2026இன்று நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறிப்பாக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திவேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகள் மற்றும் ஆத்மசாந்திப் பிரார்த்தனைகளில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, இரத்தினம்…

மேலும் படிக்க