தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு நேரம் நீடிப்பு!

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர்.பலாலி வீதியில் சுமார் 2.5 கிலோ மீற்றர் நீளமான வீதி உயர் பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்கிறது.குறித்த பகுதியை கடந்த ஆண்டு நேரக்கட்டுப்பாட்டுடன் இராணுவத்தினர் போக்குவரத்திற்கு அனுமதித்தனர். இந்நிலையில் வடமாகாண ஆளூநர் செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற காணி விடுவிப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலின் போது, குறித்த வீதியினை 24 மணி நேர போக்குவரத்திற்கு அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு இராணுவத்தினர், மறுத்துள்ளனர். அழுத்தமான கோரிக்கைகளை தொடர்ந்து மேலும் ஒரு மணி நேரம் வீதியை திறந்து விட சம்மதித்துள்ளனர்அதன் அடிப்படையில் இதுவரை காலமும் காலை 06 மணி முதல் இரவு 7 மணி வரையில் திறந்து விடப்பட்ட வீதியினை ஒரு மணி நேரம்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

இந்தியாவில் சாதனை படைத்த குத்துச் சண்டை வீரர்கள். தாயகம் திரும்பினர்!

இந்தியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் உள்ளிட்ட வெற்றிக் கிண்ணங்களை பெற்ற குத்துச்சண்டை குழுவினர் இன்றையதினம் பலாவி சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். வடக்கு மாகாணத்தில் இருந்து பிரபாகரன் ரதுக்ஸன், நகுலேஸ்வரன் சிறீஹரிஸ், லெனின் சானுராஜ், முஹமட் றிலாஸ், புஸ்பநாதன் அஜந்தா ஆகிய வீர வீராங்கனைகள் இந்தியாவில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டியில் நேற்றுமுன்தினம் பங்குபற்றினர். குத்துச்சண்டையில் எட்டு வகைகள் காணப்படுகின்ற நிலையில், இதுவரை வடக்கு – கிழக்கில் இருந்து எவரும் பங்கெடுக்காத வகையிலான குத்துச்சண்டை போட்டியிலேயே அவர்கள் பங்கெடுத்து சாதனையை நிலைநாட்டி நாடு திரும்பினர். அவர்களது பயிற்றுவிப்பாளரான தியாகராஜா நாகராஜா என்பவரும் அவர்களோடு உடனிருந்து போட்டியின்போது அவர்களை வெளிப்படுத்தினார். குறித்த போட்டியில் பங்குபற்றுவதற்கு செல்வதற்கு எவரும் நிதி உதவி வழங்காத நிலையில் கடன்பட்டும், வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்துமே சில போட்டியாளர்கள்…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் காவல்துறை யினர்.துரத்திச் சென்ற உந்துருளி.கோர விபத்து

யாழ்ப்பாணத்தில்  காவல்துறையினர்.துரத்திச் சென்ற உந்துருளி.ஒன்று, வீதியில் பயணித்த மற்றொரு   உந்துருளியுடன். மோதி விபத்துக்குள்ளானதில் நபர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மாலை யாழ்ப்பாணம் காவல்துறையினர்.  உந்துருளி.சென்ற நபர் ஒருவரைத் துரத்திச் சென்றுள்ளனர்.இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், காவல்துறையினர். துரத்திச் சென்ற  உந்துருளி.கட்டுப்பாட்டை இழந்து, அவ்வழியாகப் பயணித்த வேறொரு உந்துருளி.மீது பலமாக மோதியுள்ளது. தப்பியோட முயன்ற  உந்துருளி.மோதியதில், மற்றைய  உந்துருளி.பயணித்த நபர் படுகாயமடைந்து, தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தை ஏற்படுத்திய பின்னர் தப்பியோட முயன்ற நபரை காவல்துறையினர். சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளனர்.இவ்விபத்துத் தொடர்பில் யாழ்ப்பாணம் காவல்துறையினர்.மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மீகொடையில் நள்ளிரவில் அரங்கேறிய பெரும் சோகம் ஆறு பேர் உயிரிழப்பு.

மீகொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியின், ஹைலெவல் வீதி, மீகொடை சந்திக்கு அருகில் நள்ளிரவில் இடம்பெற்ற கோர விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்றிரவு (31), அவிசாவளையிலிருந்து கொழும்பு நோக்கி அதிவேகமாக வந்த கெப் வண்டியொன்று, வீதியோரம் அமைக்கப்பட்டிருந்த ‘தன்சல்’ (தானசாலை) ஒன்றில் வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் கட்டுப்பாட்டை இழந்து புகுந்ததில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொடூர விபத்தில் படுகாயமடைந்த 13 பேர் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர்களில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை தரப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். உயிரிழந்த ஆண்கள் 35 முதல் 38 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன், அவர்கள் ஹங்வெல்ல, அவிசாவளைப் பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர். உயிரிழந்த பெண்களில் 15 வயது சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதுடன், அவர்கள் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்களென…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிழக்கு மாகாண நன்னீர் மீன்வளத்தை மேன்படுத்த ஜப்பான் 1.33 மில்லியன் டொலர் நிதியுதவி

கிழக்கு மாகாணத்தில் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதையும், நன்னீர் மீன்பிடித் துறையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 1.33 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் 436 மில்லியன் ரூபாய்) மதிப்பிலான திட்டம், கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரகத்தில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதன் மூலம் தொடங்கப்பட்டது. ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) தொழில்நுட்ப ஆதரவுடன் ஜப்பானிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் இத்திட்டம், தித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவ சமூகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட 30 நீர்த்தேக்கங்களில் 200 மீன் கூண்டுகளை நிறுவுதல், தடுப்பணை வலை அமைப்புகளை வழங்குதல், இங்கினியகல மீன் இனப்பெருக்க மையத்தை மேம்படுத்துதல், மீன்பிடி சங்கங்களுக்கான தொழில்நுட்பப் பயிற்சித் திட்டங்கள், மற்றும் முதல் வளர்ப்புச் சுழற்சிக்கான மீன் குஞ்சுகள் மற்றும் தீவனத்தை இலவசமாக விநியோகித்தல் ஆகியவை இதன் முக்கிய முன்னெடுப்புகளில் அடங்கும். இந்நிகழ்ச்சியில் பேசிய…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நள்ளிரவு முதல் அதிர்ச்சி; மீண்டும் எரிபொருள் விலை!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் புதிய எரிபொருள் விலை திருத்தத்தை அறிவித்துள்ளது. இதற்கமைய, அனைத்து வகையான எரிபொருள்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 92 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 24 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 434 ரூபா ஆகும். 95 ரக பெற்றோல் ஒரு லீற்றரின் விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 495 ரூபா ஆகும். ஒட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 407 ரூபா ஆகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 478 ரூபா ஆகும். மண்ணெண்ணெய் ஒரு லீற்றரின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 285 ரூபா ஆகும்.…

மேலும் படிக்க
கட்டுரை மருத்துவ குறிப்பு 

மனித உடலை அச்சுறுத்தும் போசாக்குக் குறைபாட்டு நோய்கள்

மனித உடலை அச்சுறுத்தும் போசாக்குக் குறைபாட்டு நோய்கள் சமச்சீர் உணவின்மையால் உருவாகும் அமைதியான மருத்துவப் பேராபத்து ⊰❉⊱══════════════════⊰❉⊱ எழுதியவர்: ஈழத்து நிலவன் மருத்துவமனை மருந்தியல் நிபுணர் | அரச மருத்துவ ஆராய்ச்சியாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ அறிமுகம் — உணவே உயிரின் முதன்மை மருந்து மனித உடல் என்பது எண்ணற்ற உயிரியல் செயல்பாடுகளின் ஒருங்கிணைந்த அதிசய அமைப்பாகும். இதயத் துடிப்பு முதல் மூளையின் சிந்தனை வரையிலும், தசைகளின் இயக்கம் முதல் நோய் எதிர்ப்புச் சக்தி வரை அனைத்திற்கும் அடிப்படை ஆதாரமாக இருப்பது நாம் தினமும் உட்கொள்ளும் உணவாகும். உணவு என்பது வெறும் பசியைத் தீர்க்கும் பொருள் மட்டுமல்ல; அது உடலின் வளர்ச்சி, சக்தி, நோய் எதிர்ப்பு, ஹார்மோன் சுரப்பு மற்றும் மனநிலையைப் பாதுகாக்கும் உயிரியல் எரிபொருளாகும். ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள்,…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மன்னார் திருக் கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா

பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று சனிக்கிழமை காலை வசந்த மண்டபத்தில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து கொடி தம்பத்திற்கு எழுந்தருளப் பட்டு,கொடி தம்பத்தில் பூஜை வழிபாடுகள் இடம் பெற்றது.அதனை தொடர்ந்து உள் வீதி உலா இடம் பெற்றது. அதனை தொடர்ந்து திருக்கேதீஸ்வரம் பாலாவி தீர்த்த கரைக்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி அதைத் தொடர்ந்து தீர்த்த உற்சவம் வெகு விமரிசையாக இடம்பெற்றது. அதனை தொடர்ந்து பக்த அடியார்கள் தமது நேர்த்திக்கடன்கள் செலுத்துவதற்காக பாலாவி தீர்த்தத்தில் இருந்து தீர்த்த செம்புகளில் தீர்த்தங்களை எடுத்து மகாலிங்க பெருமானுக்கு அபிஷேகம் செய்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

மட்டக்களப்பு பெரியகல்லாறு பகுதியில் விபத்து நால்வர் காயம்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கம்பம் ஒன்றில் மோதியதன் விளைவாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த நால்வரும் உடனடியாக கல்லாறு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

மரண தண்டனை விதிக்கப் பட்டதையடுத்து நஞ்சருந்தி உயிரை மாய்க்க முயற்சி

நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கைதி ஒருவர் உயிரை மாய்க்க முற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடப்புசல்லாவ பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரை மாய்க்க முற்பட்டுள்ளார். கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதையடுத்து, நுவரெலியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரிய அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, கூண்டிலிருந்து சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, கைதி தன்வசம் வைத்திருந்த நஞ்சை அருந்தி உயிரை மாய்க்க முயன்றுள்ளார். இதைக் கண்ட சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, உடனடியாக அவரை மீட்டு நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.சம்பவம்…

மேலும் படிக்க