செய்திகள் தாயகச் செய்தி 

வவுனியாவில் காவல்துறையினரை மோதி தள்ளிய வாகனம்

வவுனியா ஈரட்டை, களுகுன்னமடுவ பகுதியில் இன்று 24 இடம்பெற்ற சம்பவம் .கட்டளையை மீறி பயணித்த சிறிய லொறி ஒன்றை காவல்துறை அதிகாரிகள் இருவரும் பின்தொடர்ந்து சென்றபோதே, லொறி சாரதி  காவல்துறை அதிகாரிகளை விபத்துக்குள்ளாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாககாவல்துறையினர்  தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளை விபத்துக்குள்ளாக்கிய போது  காவல்துறை அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டு வீதியின் ஒரு ஓரத்தில் விழுந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் லொறியில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட காட்சியும் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியிருந்தது. விபத்தில் காயமடைந்த இரண்டு  காவல்துறையினரை தற்போது வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பூஓய பாலத்திற்கு அருகிலுள்ள இராணுவ முகாம் திசையில் சந்தேகநபர் தப்பிச் சென்றுகொண்டிருந்த போது, இராணுவத்தினர் அவரைக் கைது செய்து  காவல்துறையினரிடம்.  ஒப்படைத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் லொறியும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவத்தைப்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

போரின் சிவப்புக் கோடுகள்-ரஷ்யா, டொன்பாஸ் மற்றும் இராஜதந்திர மாயைகளின் சரிவு

போரின் சிவப்புக் கோடுகள் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ ரஷ்யா, டொன்பாஸ் மற்றும் இராஜதந்திர மாயைகளின் சரிவு ✦ சமரசமற்ற கோடுகளால் வரையறுக்கப்பட்ட ஒரு போர் ✦ உக்ரைன் போரில் ரஷ்யா தனது கடுமையான புவிசார் அரசியல் கோட்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஒரு நிபந்தனையை அது மிகத் தெளிவாக முன்வைத்துள்ளது: கிழக்கு டொன்பாஸ் (Donbas) பிராந்தியத்திலிருந்து உக்ரைன் படைகள் முழுமையாக விலகாதவரை, அமைதி சாத்தியமற்றது. இந்த அறிவிப்பு வெறும் வாய்மொழி மிரட்டல் அல்ல — இது ஒரு மூலோபாய ரீதியான “சிவப்புக் கோடு” (Red Line). டொன்பாஸை ஒரு பேரம் பேசும் பொருளாக ரஷ்யா பார்க்கவில்லை. மாறாக, தனது தேசிய பாதுகாப்பு, இராணுவ வியூகம் மற்றும் அரசியல் நம்பகத்தன்மையோடு பின்னிப்பிணைந்த நிரந்தர பிராந்திய இலக்காகவே மாஸ்கோ அதனை கருதுகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள்.

கிளிநொச்சியில் இரண்டு வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பரந்தன் உமையாள்புரம் கிராம சேவையாளர் பிரிவின் விளாவோடை பகுதியில் உள்ள நெல் வயல் சாலையின் அருகே நேற்று (23-01-2026) இக்குண்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறித்த பகுதியில், 60 மிமீ வெடிக்காத இரண்டு குண்டுகள் இருப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர். இதையடுத்து, அவர்கள் இச்சம்பவம் தொடர்பாகக் கிளிநொச்சி காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி காவல்துறையினர், குறித்த இடத்தின் பாதுகாப்பைப் பலப்படுத்தியதுடன் வெடிக்காத இரு குண்டுகளையும் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பாக மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உயிரிழப்பு

மட்டு கல்லடிப் பாலத்திலிருந்து குதித்த தாழங்குடா பகுதியைச் சேர்ந்த யுவதி உ+யிரிழப்பு மட்டக்களப்பு தலைமையக  காவல்துறை.பிரிவிற்குட்பட்ட கல்லடி பழைய பாலத்தில் இருந்து இன்றிரவு (23) 7 மணியளவில் குதித்த யுவதி ஒருவரை பிரதேச இளைஞர்கள் மற்றும் . காவல்துறையினர் மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய இளங்கோ விதுசாயினி எனும் யுவதி என அடையாளங்காணப்பட்டுள்ளது இவர் கடந்த வருடம் உயர் தர பரீட்சை எழுதியவர் எனவும் தெரிய வருகின்றது. மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறை. மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்து

கிளிநொச்சி நோக்கி பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து குடமுருட்டி பாலத்தில் மோதி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. வேகக் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து இன்று காலை 9.30 மணியளவில் பரந்தன் பூநகரி வீதியில் இடம்பெற்றுள்ளது. விபத்திற்குள்ளான குறித்த வாகனத்தில் பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்றில் கலந்துரையாடல்;எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் வெள்ளியன்று பாராளுமன்றில் கலந்துரையாடல்; எதிர்ப்பேன் என்கிறார் – ரவிகரன் எம்.பி தமிழர்கள்மீதான கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் வடிவமான கிவுல்ஓயா திட்டத்தினைச் செயற்படுத்துவதுதொடர்பிலான கலந்துரையாடலொன்று எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளநிலையில், குறித்த கலந்துரையாடலில் தம்மால் கடுமையான எதிர்ப்பு வெளியிடப்படுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் 21.01.2026இன்று இடம்பெற்ற கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டத்தில் கிவுல்ஓயா நீர்ப்பாசனக் கட்டுமானத் திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் எதிர்வரும் 23ஆம்திகதி கிவுல் ஓயாத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாகவும் அக்கலந்துரையாடலில் குறித்தவிடயம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்குமாறு அமைச்சர் கே.டீ.லால்காந்த இதன்போது தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கமத்தொழில், கால்நடை வளங்கள் காணி…

மேலும் படிக்க
பொதுவான செய்திகள் 

அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு.திறந்த கலந்துரையாடல்

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான முன்மொழியப்பட்ட சட்ட வரைபு தொடர்பான திறந்த கலந்துரையாடல் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கான யாழ்ப்பாணக் கற்கை நிலையத்தின் ஒருங்கிணைப்பில், இன்று 20.01.2026 அன்று தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் அரசியற் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள், இளையோர் மற்றும் மகளீர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என ஏறத்தாழ 100 பேரளவில் பங்குபற்றியிருந்தனர். தொடக்க உரையாற்றிய அந் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி கலாநிதி.க. குருபரன் (யாழ் பல்கலை சட்டத்துறை முன்னாள் தலைவர்) பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியளித்திருந்ததைத் சுட்டிக்காட்டி, மேலும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகின்ற விடயமானது என்.பி.பியின் சிங்கள மொழி மூல தேர்தல் விஞ்ஞானபத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை என்னும் விடயத்தினை ஜே.வி.பியின் ஆரம்பகால உறுப்பினர் லயனல் போபகேயின் அண்மைய கட்டுரையில் உள்ள விடயத்தினையும் மேற்கோள்காட்டி, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. செய்திகள் 

கதிரியக்க தொழில்நுட்ப வியலாளர்கள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

நேற்றையதினம் அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கதினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு போராட்டமானது இன்று (22) காலை 8 மணி முதல் 7 நாட்களுக்கு தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளரின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிராக சுகாதார அமைச்சு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த பிரச்சினை தொடர்பில் நேற்றையதினம் இரவு சுகாதார பிரதி அமைச்சருடன் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது. இதன்போது, மாளிகாவத்தை சிறுநீரக வைத்தியசாலையின் பதில் பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றும் நபரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோத மற்றும் ஒழுக்கமற்ற செயல் தொடர்பில் ஏற்கனவே உடனடி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஒரு வார காலத்திற்குள் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக பக்கச்சார்பற்ற விசாரணைக்குத் தேவையான சூழலை ஏற்படுத்தித் தருவதாகவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குறித்த வைத்தியசாலையின்…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை உடைகிறதா?

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமை உடைகிறதா? ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ கிரீன்லாந்து, வரி விதிப்புகள் மற்றும் தசாப்தங்களில் காணாத மிகப்பெரிய அட்லாண்டிக் கடந்த நெருக்கடி ✦ அறிமுகம்: நட்பு நாடுகளிலிருந்து எதிரிகளாகவா? ஆர்க்டிக் பிராந்தியத்தைச் சார்ந்த ஒரு மூலோபாயக் கருத்து வேறுபாடாக ஆரம்பித்த விடயம், இன்று முழுமையான அட்லாண்டிக் கடந்த (Transatlantic) அரசியல்-பொருளாதார நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக விடுத்துள்ள வரி விதிப்பு (Tariff) மிரட்டல்களும், கட்டாய அழுத்தங்களும் ஐரோப்பாவை ஆழ்ந்த கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன. இந்த நிலைமை, ➽ ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றுமையை மட்டுமல்ல, ➽ நேட்டோ (NATO) கூட்டணியின் அடித்தளத்தையே சோதிக்கும் அளவிற்கு தீவிரமடைந்துள்ளது. நீண்ட காலமாக அமைதியான மூலோபாயப் பகுதியாகக் கருதப்பட்ட கிரீன்லாந்து, இப்போது ➽ வர்த்தகப் போர், ➽ கூட்டணி அரசியல், ➽ ஆர்க்டிக் இராணுவமயமாக்கல், ➽…

மேலும் படிக்க
செய்திகள் தாயகச் செய்தி 

அரசு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம ஒழிப்புத் திட்டம் ; ரவிகரன் குற்றச்சாட்டு

அரசு மக்களுக்கு வறுமையையும் ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற வறுமைஒழிப்புத் திட்டத்தையும் செயற்படுத்துகின்றது; ரவிகரன் எம்.பி குற்றச்சாட்டு படையினர் மற்றும் அரசதிணைக்களங்கள் மக்களின் வாழ்வாதாரக் காணிகளை அபகரித்திருத்தல், சட்டவிரோத கடற்றொழில் மற்றும் இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த தவறுதல், இறுதிப்போரில் ஒப்படைக்கப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கத்தவறுதல் உள்ளிட்ட செயற்பாடுகளின்மூலம் அரசானது மக்களுக்கு வறுமையை ஏற்படுத்திவிட்டு மறுபுறம் அஸ்வெஸ்ம என்ற நலன்புரி நன்மைகள் என்னும் வறுமை ஒழிப்புத் திட்டத்தை திட்டத்தை செயற்படுத்துவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். எனவே உண்ண உணவுக்கு மாற்றாக உணவைப் பயிரிட்ட மக்களின் வாழ்வாதார நிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் விடுவிக்குமாறும், தரையிலும் கடலிலும் மக்களை தொழில் புரியக்கூடியவகையில் வழிவகைகளை ஏற்படுத்துமாறும், காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் சிறையில் வாடும் உறவுகளை விடுவித்து அவர்கள் குடும்பங்களை ஆற்றுப்படுத்துமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்…

மேலும் படிக்க