அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிரடி முடிவு – முழுக் கை, முழுக் கால் ஆடைக்கு அனுமதி

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயத்தைக் குறைக்கும் நடவடிக்கையாக, பள்ளி மாணவர்கள் கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் பொருத்தமான ஆடைகளை அணிய கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை டெங்கு கொசுக்கடியிலிருந்து பாதுகாப்பதே இந்த புதிய நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். இதற்கென, தற்போதுள்ள பள்ளிச் சீருடையுடன் கூடுதலாக, மாணவர்களின் கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கக்கூடிய பொருத்தமான ஆடைகளை அணிய அனுமதிக்குமாறு அனைத்து பள்ளி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெங்கு பரவலைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் கொசு விரட்டிகளை (Mosquito Repellents) மாணவர்கள் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து அவர்களுக்குப் போதிய விழிப்புணர்வையும், கல்வியையும் வழங்குமாறு பள்ளி முதல்வர்களுக்கு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் ஆரோக்கியத்தையும்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவனைக்காக கையளிப்பு!

யாழ்ப்பாணத்தில் கிராமிய பாதைகளுக்கான அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட உரும்பிராய் கற்பகப்பிள்ளையார் கோவில் வீதி மக்கள் பவணைக்காக இன்றைய தினம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களாக ஜெயசந்திரமூர்த்தி ரஜீவன் மற்றும் க. இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கற்பக பிள்ளையார் கோவில் வீதியானது 1.5 நீளமான வீதியாகும். இதன் புனரமைப்பு பணி 74.5 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தமிழ்நாடு இந்தியா செய்திகள் 

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்.

பழம்பெரும் மற்றும் புகழ்பெற்ற பின்னணிப் பாடகி எஸ். ஜானகி (வயது 88) இன்று காலமானார். தனது மந்திர குரலால் கோடிக்கணக்கான மனங்களை வசப்படுத்தியிருந்த அவர், இன்று காலமானார். ஜானகி தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 48,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். 1938ம் ஆண்டு ஆந்திராவின் பல்லேபட்லா கிராமத்தில் ஏப்ரல் 23 அன்று பிறந்தார். 19 வயதிலேயே இவர் சினிமா துறைக்குள் நுழைந்துவிட்டார். 1957ல் வெளியான ‘விதியின் விளையாட்டு’ என்கிற தமிழ் திரைப்படத்தின் மூலம் இவர் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் இளையராஜா, எம்எஸ் விஸ்வநாதன் என முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து மறக்க முடியாத பாடல்களை கொடுத்திருக்கிறார். இவர் 4 முறை சிறந்த பின்னணி பாடகி என்று தேசிய விருதுகளை…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கிளி கண்டாவளை பாலத்தில் நடந்த விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மீன்களை ஏற்றிக் கொண்டு பயணித்த கப் ரக வாகனம், பரந்தன் வீதி ஊடாக முல்லைதீவு நோக்கி சென்று கொண்டிருந்த போது, வெளிகண்டல் பகுதியில் வேகட்டுப்பாட்டை இழந்து பாலத்துடன் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது விபத்தில் வாகன ஓட்டுனரின் உதவியாளர் சிறுகாயங்களுக்கு உள்ளான நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பளையில் மின்சாரம் தாக்கி இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பனிக்கையடி – இயக்கச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 31 வயதுடைய சிவகுமார் சிவதாஸ் எனத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் மின்சார இணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென மின்சாரம் தாக்கியுள்ளது. இதனையடுத்து உடனடியாக பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

நாட்டில் மிதமான மழை பெய்யக்கூடும்.! இன்றைய வானிலை அறிவிப்பு

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களுடன் காலி, மாத்தறை மாவட்டங்களில் இன்று (11) மிதமான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதேவேளை, ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடமத்திய மாகாணம் மற்றும் மொனராகலை, புத்தளம், ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, மன்னார் மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் மின்னல் தாக்கம் மற்றும் பலத்த காற்றால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி 

புனரமைக்கப் பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு

புனரமைக்கப்பட்ட மட்டக்களப்பு புதிய பாலம் மக்களின் பாவனைக்காக கையளிப்பு – சுமார் ரூ. 3.5 மில்லியன் செலவில் தற்காலிக பாலம் மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள இரண்டாவது பிரதான பாலமான புதுப் பாலம் அண்மையில் (28) உடைந்து விழுந்த பாலத்திற்கு பதிலாக தற்காலிக பாலம் அமைக்கும் பணிகள் நேற்று (09) மாலை முடிவடைந்தன. அதனைத் தொடர்ந்து இன்று (10) காலை 9.00 மணி அளவில் மீண்டும் மக்களின் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சுமார் ரூ. 3.5 மில்லியன் செலவில் இந்த தற்காலிக பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வீதியினை பயன்படுத்தும் பொதுமக்கள் பாலத்திற்கு முன்பு வழங்கப்பட்டுள்ள வீதி அறிவுறுத்தல்களை பின்பற்றி இப் பாலத்தின் ஊடாக மிகவும் அவதானமாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை நிரந்தரமாக புதிய பாலம் ஒன்று அமைக்கும் வரை கனரக வாகனங்கள்…

மேலும் படிக்க
சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

தமிழ் மக்களி டமிருந்து ராஜபக்சக் கள் கொள்ளையடித்த நகைகளை மக்களு க்கு வழங்க வேண்டும்

தமிழ் மக்களிடமிருந்து ராஜபக்சக்களால் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மீண்டும் அவர்களிடம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,தமிழரசுக்கட்சி எம். பி எஸ். சிறீதரன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அவற்றில் ஊழல் நடந்துள்ளதால் இது தொடர்பில் விசாரணை செய்யாமல் விட முடியாது என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்த நகைகளை மீள வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இது தொடர்பில் தேர்தல் காலங்களில் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மாவட்ட அரசாங்க அதிபர்கள் ஊடாக பட்டியலைக் கோரி அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியும் என குறிப்பிட்ட அவர்,எத்தனை ஆயிரம் பேர் நகைகளை அடகு வைத்துள்ளனர். அவ்வாறென்றால் எவ்வளவு கோடி ரூபா பெறுமதியான நகைகளை ராஜபக்‌ஷ அரசாங்கம் கொள்ளையடித்துள்ளது என்பதனை வெளிக்கொண்டு வாருங்கள் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற பணம் தூயதாக்கல் தடை (திருத்தச்) சட்டமூலம்,…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

கதிர்காம பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து விபத்து.

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜபல் நகர் பகுதியில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில், சாரதி உட்பட நால்வர் காயமடைந்து மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்து, பாதையை விட்டு விலகி வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்துக்குள்ளான பேருந்து கதிர்காமத்திற்கு யாத்திரிகர்களை அழைத்துச் சென்று, அவர்களை இறக்கிவிட்டு திருகோணமலை நோக்கி திரும்பி வந்தபோது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சாரதிக்கு ஏற்பட்ட தூக்கக் கலக்கமே விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் பேருந்தின் சாரதி உட்பட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மூதூர் தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து மோதியதில் வீடு மற்றும் அதிலிருந்த பல்வேறு உபகரணங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

கதிர்காமத்துக்கான காட்டுவழிப்பாதை திறக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம கந்தன் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல் உற்சவத்தை முன்னிட்டு, பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களின் நலன் கருதி உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை இன்று (10) வெள்ளிக்கிழமை காலை 5.30 மணியளவில் ‘அரோகரா’ கோஷத்துடன் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வை முன்னிட்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து, வழிபாடுகளில் கலந்துகொண்ட முக்கிய அதிதிகளால் உகந்தை மலை குமண தேசிய பூங்காவினூடான காட்டுப்பாதை பக்தர்களின் பயன்பாட்டிற்காக உத்தியோகபூர்வமாகத் இன்று திறந்து வைக்கப்பட்டது. வருகின்ற 24 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு காட்டுப்பாதை மூடப்படவுள்ளது எனவும் தெரிவித்தார். இம்முறை பாதயாத்திரையில் முதியவர்கள், சிறியவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் எனப் பலரும் அடங்கிய…

மேலும் படிக்க