தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

பருத்தித்துறை  காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப்பொருளுக்கு எதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் அடிப்படையில் பருத்தித்துறை  காவல் துறை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, பருத்தித்துறை  காவல் துறையினரால்.பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது “விற்கின்ற -அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்”- அகன்று செல்” எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’ ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. மேலும் அரச அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. போதைப்பொருள் இல்லாத, ஆரோக்கியமான இளம் சமூகத்தை உருவாக்குவதே நமது இலக்கு. இந்த வாரம்…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ஈரான் கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 208 பேரும் வெலிசறையிலுள்ள கடற்படை முகாமில்!

இந்தியக் கடற்படையால், பெப்ரவரி 15 – 25 ஆம் திகதி வரை விசாகப்பட்டினத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச கடற்படை கண்காட்சியில் பங்குபற்றிய ஈரான் கடற்படை கப்பல்களில் ஒன்றான ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் திருகோணமலை துறைமுகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்தக் கண்காட்சியில் பங்கேற்று மீண்டும் நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் டெனா என்ற போர்க்கப்பல் இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் கடந்த 4ஆம் திகதி அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பலின் ஏவுகணைத் தாக்குதலுக்குள்ளாகி மூழ்கியது. இந்நிலையிலேயே பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு ஐ.ஆர்.ஐ.எஸ். புஷேஹர் போர்க்கப்பல் கொழும்புத் துறைமுகத்துக்கு வருவதற்கு வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் அனுமதி கோரியிருந்தது. எவ்வாறிருப்பினும் இலங்கையின் கடல் சார் வர்த்தக பாதிப்புக்களைக் கருத்தில்கொண்டு அக்கப்பலுள்ளவர்கள் மீட்டு, பின்னர் அதனை திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு அரசு அனுமதியளித்தது. அதற்கமைய அந்தக் கப்பலிலிருந்த 208…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

படகு விபத்து: அவசர விசாரணை முன்னெடுக்குமாறு பணிப்புரை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் நடந்த படகு விபத்தின் முழுமையான காரணங்களைத் துல்லியமாகக் கண்டறிவதற்காக கடற்படையினரும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினர்களுக்கும் பணிப்புரை விடப்பட்டுள்ளது. கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதற்கான அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அவர் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளதோடு, துயரத்தில் உள்ள குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி செய்துள்ளார். மேலும், விபத்துக்குள்ளான படகு பயணத்திற்கு பாதுகாப்பான நிலையில் இருந்ததா, பயணிகளின் எண்ணிக்கை விதிமுறைகளுக்கு உட்பட்டதா, கடல் பயணத்திற்கான பாதுகாப்பு நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பன குறித்து விரிவாக ஆராய்ந்து  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாழ். மாவட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடமும், பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் அமைச்சர் அவசர கலந்துரையாடலையும் மேற்கொண்டுள்ளார். கடலில் சிக்கியிருக்கக்கூடியவர்களை தேடும் மற்றும் மீட்கும் பணிகளை தீவிரப்படுத்துமாறு அவர்…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி

அவசர கால நிலை வட,கிழக்கு தமிழர்களின் உரிமைகளையும், அன்றாட வாழ்வையும் நசுக்குவதாக அமையக்கூடாது – ரவிகரன் எம்.பி வலியுறுத்து விடுதலைப்போராட்ட காலத்தில் அவசர கால விதிமுறைக்குள்ளாக வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டது. அத்தகைய அவசரகாலநிலை தற்போது மீண்டும் இந்தநாட்டில் அறிமுகப்படுத்தப்படும்போது, தமது உரிமைகளை நசுக்கும் மற்றொரு வல்லாதிக்க கருவியாக தமிழ் மக்கள் இந்த அவசரகால நிலையையும் நோக்குவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் இந்த அவசரகாலநிலை தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கியுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார். எனவே சட்ட ஏற்பாட்டுடனான மக்கள் மயப்பட்ட நடவடிக்கைகள், வடக்கு கிழக்குத் தமிழ் மக்களின் உரிமைசார்ந்த போராட்டங்கள் மற்றும் அவர்களின் இயல்பு வாழ்வைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்த அவசரகால நிலை ஒழுங்குவிதிகள் பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்திய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன்,…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ஈரான்–இஸ்ரேல் போர் உலகளாவிய நெருக்கடியாக வெடிக்கிறது

ஈரான்–இஸ்ரேல் போர் உலகளாவிய நெருக்கடியாக வெடிக்கிறது கிளஸ்டர் ஏவுகணைகள், ட்ரோன் தாக்குதல்கள் மற்றும் வல்லரசு மோதல்கள் மத்திய கிழக்கின் அரசியல் அமைப்பை மாற்றுகின்றன ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ் தேசிய வரலாற்றாய்வாளர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ ◆ போரின் புதிய கட்டம்: டெல் அவிவ் மீது ஈரானின் பாரிய ஏவுகணைத் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியம் நவீன வரலாற்றில் மிக ஆபத்தான மற்றும் நிலையற்ற தருணங்களில் ஒன்றுக்குள் நுழைந்துள்ளது. 2026 மார்ச் 6 அன்று, ஈரான் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை இலக்காகக் கொண்டு புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டது. இது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடனான தற்போதைய மோதலில் ஒரு தீவிரமான புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலிய ஊடகமான சேனல் 12 வெளியிட்ட…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு

மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு தமிழ்த் தேச விடுதலைக்காக தன்னை அற்பணித்துச் சேவையாற்றிய மாமனிதர் கிட்டினன் சிவநேசன் அவர்களது 18 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு 06.03.2026 இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம்பெறது. இந்நிகழ்வில்தலைமை அலுவலகம் த.தே.ம.முன்னணி சபாபதி வீதி கொக்குவில் கிழக்கு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

மேலும் படிக்க
அண்மை செய்தி உலக செய்திகள் 

கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா!

 கப்பல்களை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை பரிசோதித்த வடகொரியா! அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் “முக்கிய” அங்கமாக…

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்!

கல்முனையில் “முழு நாடும் ஒன்றாக” போதையொழிப்பு தேசிய செயற்றிட்டம்! ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் நாடளாவிய ரீதியில் போதைப் பொருளுக்கெதிரான செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. அதன் ஓரங்கமாக கல்முனை பிரதேச செயலாளர் பிரிவில் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்றிட்ட நிகழ்வுகள் பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி. எம்.பளீல் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை (2026.03.01 முதல் 2026.03.07 வரை) முன்னிட்டு, நேற்று தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் றாசிக் நபாயிஸ் ஒருங்கிணைப்பில் பொதுமக்களிடையே வலுவான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் போது ‘விற்கின்ற-அடிமையான அனைவருக்குமான அறிவித்தல்’-‘அகன்று செல்’ எனும் வாசகத்தினை மையமாகக்கொண்டு துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், முச்சக்கர வண்டிகளில் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டன. பொதுமக்களுக்கு போதைப்பொருள் ஆபத்துக்கள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டதுடன் வாகனங்களில் ‘போதை ஒழிப்பு’…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது!

யாழ் கடலில் காணாமல் போன மீனவர்கள்; தமிழக கடற்பரப்பில் கைது! யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதி. கடந்த வெள்ளிக்கிழமை கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் படகு பழுதடைந்த நிலையில் மாயமானார்கள்.மீன்பிடிக்கச் சென்றபோது இவர்களது படகு இயந்திரக் கோளாறு காரணமாகப் பழுதடைந்து, நீரோட்டத்தினால் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றது.அங்கு இருந்த இந்திய மீனவர்கள் இவர்களைக் கவனித்து, அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கி, அவர்களது படகை இழுத்துச் சென்று இலங்கை கடல் எல்லையில் விட்டுச் சென்றனர். மீண்டும் எல்லை தாண்டிய படகு: எனினும், கடல் அலையினால் படகு மீண்டும் இழுத்துச் செல்லப்பட்டு இந்தியக் கரைக்குச் சென்றுள்ளது.காணாமல் போன ஏழாவது நாளில், நேற்று வியாழக்கிழமை தமிழகத்தின் வடக்குக் கரையில் உள்ள அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழக கடலோரக் காவல் படையினரால் இவர்கள் மீட்கப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர்.  

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண் களுக்கு எங்கே பாதுகாப்பு?

உயிரற்ற உடலுக்குக் கூட பாதுகாப்பில்லை என்றால் பெண்களுக்கு எங்கே பாதுகாப்பு? நுவரெலியாவில் போராட்டம்! உயிரிழந்த இளம் பெண்ணின் உடலை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி நேற்று நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் இளைஞர்கள் மற்றும் பெண்கள் அமைதியான கண்டன ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர். இச்சம்பவம் கடந்த 24 ஆம் திகதி டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கடந்த மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவருடைய உடல் டிக்கோயா – கிளங்கன் மாவட்ட ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டிருந்தது. ஆரம்பத்தில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகள் இருபாலாரும் இச்சம்பவம் பற்றி முழுமையாக விசாரணை வேண்டும் என்றும், அவர்கள் மூவரும் கைது…

மேலும் படிக்க