தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழ்- மருதனார்மடம் பகுதியில் கிணறு ஒன்றில் நபர் ஒருவரது சடலம்

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் இனந்தெரியாத நபர் ஒருவரது சடலம் இன்று அவதானிக்கப்பட்டது. மருதனார்மடம் பகுதியில் உள்ள தனியார் பண்ணை வளாகத்தில் உள்ள கிணற்றிலேயே இவ்வாறு சடலம் இனங்கானப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபரின் மோட்டார் சைக்கிளும் கிணற்றுக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சடலத்தை அடையாளம் காட்ட உதவுமாறு பொலிஸார் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம்

மீன்பிடி படகுகளுக்கு எரிபொருள் மானியம் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன்படி, சிறிய ரக படகுகளுக்கு ஒரு லீற்றர் எரிபொருளுக்கு 50 ரூபாயும், நெடுநாள் மீன்பிடி படகுகளுக்கு ஒரு பயணத்திற்காக 150,000 ரூபாயும் மானியமாக வழங்கப்படவுள்ளது. இந்த மானியத் திட்டம் ஏப்ரல் 20ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

ரஷ்யாவின் தொழில் நுட்ப மறுமலர்ச்சி: IL-96-400M, செயற்கைக் கோள்கள் மற்றும் உள்நாட்டு மைக்ரோ சிப்கள்

ரஷ்யாவின் தொழில்நுட்ப மறுமலர்ச்சி: IL-96-400M, செயற்கைக்கோள்கள் மற்றும் உள்நாட்டு மைக்ரோசிப்கள் ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ IL-96-400M இன் மீள்வருகை: ரஷ்யாவின் அகல-உடல் விமான அபிலாஷை ரஷ்யா தனது நீண்ட தூர அகல-உடல் (Wide-body) விமானமான Il-96-400M இன் விமானப் பரிசோதனைகளை உத்தியோகபூர்வமாக மீண்டும் தொடங்கியுள்ளது. இது விமானப் போக்குவரத்துத் துறையில் ரஷ்யாவின் தற்சார்பு நோக்கிய பயணத்தில் முக்கிய மைல்கல்லாகும். ஆறு மாத இடைவேளைக்குப் பிறகு, இந்த விமானம் ஜுகோவ்ஸ்கியிலிருந்து நோவோசிபிர்ஸ்க் வரை சென்று மீண்டும் திரும்பி, 9 மணிநேர இடைவிடாத பயணத்தை வெற்றிகரமாக முடித்தது, இதன் மூலம் சகிப்புத்தன்மை மற்றும் அமைப்புகளின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்பட்டுள்ளது. சோதனை ஓட்டத்தின் முக்கிய அம்சங்கள் * பணி: 96115 என்ற…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

ரஷ்யாவிடமிருந்து இலங்கைக்கு மிக விரைவில் எரிபொருள்.

ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து இலங்கைக்கு எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிப்பதற்கு ரஷ்யாவுடன் அரசியல் ரீதியான உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேர்காணலில் ஒன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.எரிபொருள் விநியோகம் தொடர்பாக அரசியல் ரீதியான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறைவடைந்துள்ளதுடன் இரண்டு நாடுகளுக்கும் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதியிலிருந்து ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு எண்ணெய் விநியோகம் ஆரம்பிக்கப்படும்.

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

150 அடி பள்ளத்தில் விழுந்து டிப்பர் ரக பாரஊர்தி விபத்து!

மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக சென்ற டிப்பர் ரக பாரஊர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.சாமி மலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரஊர்தி, வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.எனினும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இந்த வீதி கடந்த முப்பது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் படிக்க
உலக செய்திகள் பொதுவான செய்திகள் 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் உலகளாவிய பண வீக்கம் தோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும்

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகளாவிய பணவீக்கம் அதிகரிப்பதோடு, பொருளாதார வளர்ச்சியும் மந்தமடையும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா (Kristalina Georgieva) தெரிவித்துள்ளார். அடுத்த வாரம் சர்வதேச நிதி நிறுவனத்தினால் வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கணிப்பிற்கு முன்னதாக அவர் இந்தத் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். உலகின் எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டு செல்லும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மறித்துள்ளதால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கு இதுவரை இல்லாத மிக மோசமான இடையூறு ஏற்பட்டுள்ளது. ஏப்ரல் 14ஆம் திகதி வெளியிடப்படவுள்ள உலகப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்  ஊடாக, சர்வதேச நாணய நிதியம் பல்வேறு பொருளாதார நிலைமைகள் குறித்த கணிப்புகளை முன்வைக்கவுள்ளது. போரினால் ஏற்பட்ட தாக்கம் மற்றும் கடுமையான நிதி நிபந்தனைகள் காரணமாக, பொருளாதார வளர்ச்சி வேகம் வீழ்ச்சியடையக்கூடும் என்று…

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

யாழில் வாள்களுடன் இளைஞன் கைது!

ஆபத்தான வாள்களை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பாசையூர் பகுதியைச் சேர்ந்த 28வயதான இளைஞன் ஒருவர் நேற்றைய தினம். திங்கட்கிழமை காலை யாழ்ப்பாணப் காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே வாள்வெட்டுக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேக நபரே இவ்வாறு  காவல்துறையால்.கைது செய்யப்பட்டுள்ளார். கைதான இளைஞனை    இன்று. செவ்வாய்க்கிழமை நீதிமன்றில் முற்படுத்தவிருப்பதாக  காவல்துறை.தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண  காவல்துறை.நிலைய தலைமைப் காவல்துறை. பொறுப்பதிகாரி பாலித செனவிரட்னவின் வழிகாட்டுதலின் கீழ் பொறுப்பதிகாரி மஞ்சுள தலைமையிலான  காவல்துறை குழுவினரே மேற்படி கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

சுழற்றியடித்த காற்றால் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்த மீனவர்கள்

புத்தளம் – உடப்பு கிராமத்தில் இன்று அதிகாலை தென்மேல் பருவக்காற்று திடீரென்று வீசியதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதைத் தவிர்த்துள்ளனர். அதிகாலை வழமை போல மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராகிய நிலையில் காற்றின் வேகம் காணப்படவே அவர்கள் மீண்டும் கடலுக்குச் செல்லாது வீடுகளுக்கு திரும்பிச் செல்வதைக் காணக்கூடியதாக இருந்தது. இதனால் இயந்திரப் படகுகள், தெப்பங்கள், கரைவலைத் தொழிலாளர்களின் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் காங்கேசன்துறை தொடக்கம் மன்னார், புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

தேசிய QR கொடுப் பனவு ஊக்குவிப்புத் திட்டம்”உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப் படவுள்ளது.

இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில், “தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டம்” ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் இன்று (06) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. இலங்கையை நாணயங்கள் மற்றும் நாணயத் தாள்களின் பயன்பாடு குறைந்த (cash-lite) பொருளாதாரத்தை நோக்கி நகர்த்துவதே இதன் முதன்மை நோக்கமாகும். இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ரூ. 5,000 வரையிலான அனைத்து LankaQR கொடுக்கல் வாங்கல்களுக்காகவும் வர்த்தகர்களிடமிருந்து அறவிடப்படும் சேவைக்கட்டணத்தை (Merchant Discount Rate) முழுமையாக நீக்குவதற்கு நிதி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளன. இதன் மூலம் சிறு வர்த்தகர்கள் எவ்வித கூடுதல் செலவுமின்றி டிஜிட்டல் கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது. தற்போது இலங்கையில் மிகவும் வலுவான டிஜிட்டல் நிதி உட்கட்டமைப்பு காணப்படுவதுடன், நாட்டின் வயதுவந்த மக்களில் 89% பேருக்கு வங்கி வசதிகள் உள்ளன.…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

ரூ. 11 கோடி பெறுமதி யான சட்டவிரோத போதைப் பொரு ளுடன் நபரொருவர் கைது

சுமார் ரூ. 11 கோடி பெறுமதியான குஷ் போதைப்பொருளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டு வந்த இலங்கை பிரஜை ஒருவரை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய கூலித் தொழிலாளி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.குறித்த நபர் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து ஏ.ஐ.- 277 (AI-277) ரக ஏர் இந்தியா விமானம் மூலம் இன்று (06) காலை 6.50 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் கொண்டு வந்த பயணப் பொதியிலிருந்து 11 கி.கி 340 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி சுமார் ரூ. 11 கோடியே 34 இலட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. சொக்லேட் பக்கெட்டுகளுக்குள் இருந்த சொக்லேட்டுகளை அகற்றிவிட்டு,…

மேலும் படிக்க