க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் சாதனை
இலங்கை பரீட்சைத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், பல்கலைக்கழகப் பிரவேசத்துக்கான தகுதியைப் பெற்ற மாணவர்களின் வீதத்தில் வடக்கு மாகாணம் தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட இம்முறை வடக்கு மாகாணத்தின் கல்விச் சாதனைகள் மிகச் சிறந்த நிலையை எட்டியுள்ளன. இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு வடக்கு மாகாணத்திலிருந்து தோற்றிய மொத்தப் பரீட்சார்த்திகளில் (பாடசாலை மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள்) 9,191 மாணவர்கள் பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத் தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர்களின் அடிப்படையில் 65.19 சதவீதமாகும். இதன் மூலம் மாகாணங்களுக்கிடையிலான தரவரிசையில் வடக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் பெருமையுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், உயிரியல் பிரிவு மற்றும் கலைப் பிரிவுகளிலிருந்து பல்கலைக்கழகப் பிரவேசத்துக்குத்…
மேலும் படிக்க