அண்மை செய்தி தாயகச் செய்தி 

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு

இராணுவ உணவகம் உட்பட 4 உணவகங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு தமிழ் பிரதேச சபை தவிசாளர் பா.பாலேந்திரன் தெரிவித்தார். வவுனியா தெற்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள உணவகங்கள் சுகாதார முறைப்படி இயங்குகின்றதா என்பதை பரிசீலிக்க நேற்றும் இன்று அதிகாலையும் தவிசாளர் தலைமையிலான சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர் உட்பட பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால்  பூவரசங்குளம் பகுதியிலுள்ள உணவகங்களுக்கு அதிரடியாக விஜயம் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதன்போது சுகாதாரமற்ற முறையி்ல் இயங்கிவந்த உணவகங்கள் மீது சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தாரால் நடாத்தப்படும் உணவகம் உட்பட 4 உணவகங்கள் மற்றும் வெதுப்பக உணவுகளை விற்பனை செய்யும் முச்சக்கர வண்டிக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வீதி சமிக்ஞைகளை விழிப்புணர்வு நிகழ்வு

வீதி சமிக்ஞைகளை கடைப்பிடிப்பதற்கு யாழ்ப்பாணத்தில் இன்று (10)விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை தடுப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துமுகமாக யாழ்ப்பாணத்தில் இன்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டது.யாழ்பாணம் பொலிசாரும் தன்னார்வ இளைஞர் அமைப்புக்களும் இணைந்து இன்று ஆரிய குளம் சந்தியிலுள்ள வீதிச் சமிக்ஞையில் இந்த விழிப்புணர்வு நிகழ்வை முன்னெடுத்தனர். இதன்போது சந்தியிலுள்ள சமிக்ஞையில் பாதசாரிகள் கடக்கும் கடவையில் அவர்களுக்கு இடையூறாக நிறுத்தியுள்ள வாகனங்களை அகற்றியும் அவர்களை எச்சரித்தும் விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.இதேவேளை, குறித்த நிகழ்வில் வித்தியாசமான முறையில் இவர்கள் வேடமிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க
அண்மை செய்தி தாயகச் செய்தி 

யாழ் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெற்றது. 2024 ம் ஆண்டு கிராம அபிவிருத்தி சங்க நிர்வாக தெரிவின் போது சந்தாப்பணம் கட்டுதல் தொடர்பாக ஏற்பட்ட முரண்பாடு காரணமாக 2026 ம் ஆண்டு நிர்வாக தெரிவு மிகவும் சிறப்பாக இடம் பெற வேண்டும் என்பதற்காக 2026/1/15 தொடக்கம் 2026/2/15 வரை புதிய அங்கத்தவர்கள் இணைவதற்கான காலம் அறிவித்தல் நோட்டீஸ் மூலம் ஒட்டப்பட்டது. அதன் அடிப்படையில் 93 உறுப்பினர்கள் சந்தாப்பணம் கட்டி வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களாக இணைந்தார்கள். அதன் பின்னர் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களுக்கு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மூலம் 2026/3/6 அன்று வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க புதிய நிர்வாக தெரிவு இடம்பெரும் என…

மேலும் படிக்க
அண்மை செய்தி இலங்கை செய்தி. 

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவிப்பு

அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல் செயற்பாடுகள் இன்றுடன் (10) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய பாடசாலைகளுக்கு நாளை முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. அவ்வாறு ஆரம்பிக்கப்படும் இரண்டாம் தவணைக்கான கற்றல் செயற்பாடுகள் 2026.07.24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது

மேலும் படிக்க
தாயகச் செய்தி பொதுவான செய்திகள் 

வவுனியா, விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதா பமாக உயிரிழப்பு.

வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த நபர் மீது, அவ்வழியாகச் சென்ற கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த துவிச்சக்கர வண்டிப் பயணி, உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்  64 வயதுடைய  பாலகுகன்   என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் ஒரு ஓய்வு பெற்ற ஆசிரியர் ஆவார்.இந்தச் சம்பவம் குறித்து வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க
இலங்கை செய்தி. சிறப்புச் செய்தி 

உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை

நாடு முழுவதும் பல பகுதிகளில் நிலவும் உயர் வெப்பநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் மொனராகலை மாவட்டத்தில் வெப்பமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதிவரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த எச்சரிக்கையின்படி 21 மாவட்டங்களில் உள்ள சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நீண்டநேரம் வெயிலில் இருப்பதால் மக்கள் சோர்வை உணரக்கூடும், அதே சமயம் தொடர்ந்து சுறுசுறுப்பாக இருப்பதால் வெப்பத் தசைப்பிடிப்புகள் ஏற்படக்கூடும். எனவே நிலவும் உயர் வெப்பநிலை…

மேலும் படிக்க
இலங்கை செய்தி. பொதுவான செய்திகள் 

அரசாங்க மருத்துவ சங்கத்தினருடன் பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது! நளிந்த ஜயதிஸ்ஸ

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நியாயமற்ற பணிப் புறக்கணிப்பில் ஈடுபடும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினருடன் இனி எந்தவித பேச்சுவார்த்தைக்கும் இடம் கிடையாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் தெரிவித்தார். தேவையானால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நீதிமன்றம் செல்லலாம் என சபையில் குறிப்பிட்ட அவர், புதிய நியமனம் பெற்றுக்கொண்டுள்ள மருத்துவர்களுக்கு போதிய பொலிஸ் பாதுகாப்பும் அத்துடன் மக்கள் பாதுகாப்பும் பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நியாயமற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார் . அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இந்த மாதத்தில் மாத்திரம் 5 தடவைகள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளில் மோதல்கள் தீவிரமடைந்துள்ளதால் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு நெருக்கடிக்குள்ளாகியுள்ள…

மேலும் படிக்க
உலக அரசியல். கட்டுரை 

இலங்கை உள்நாட்டுப் போரை இரகசியமாகத் தூண்டிய இஸ்ரேல்

இலங்கை உள்நாட்டுப் போரை இரகசியமாகத் தூண்டிய இஸ்ரேல் மறைமுகக் கூட்டணிகள், இராணுவ உத்தி மற்றும் உலகளாவிய அரசியல் ஒரு நாட்டை எவ்வாறு மாற்றியமைத்தன ⧉▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬⧉ எழுதியவர்: ✒️ ஈழத்து நிலவன் தமிழ்த் தேசிய வரலாற்றாசிரியர் | உலக அரசியல், பொருளாதாரம், உளவுத்துறை மற்றும் இராணுவ விவகார ஆய்வாளர் ⊰❉⊱══════════════════⊰❉⊱ வெளிப்படுத்தப்பட்ட ஒரு மறைந்திருந்த கூட்டணி ஈட்டாய் மேக் (Eitay Mack) என்பவரால் பகிரங்கப்படுத்தப்பட்ட அண்மைய வகைப்படுத்தப்படாத ஆவணங்கள், இலங்கை உள்நாட்டுப் போரின் ஆரம்ப ஆண்டுகளில் இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும் இடையே நிலவிய ஆழமான சர்ச்சைக்குரிய மற்றும் மறைக்கப்பட்ட உறவை அம்பலப்படுத்தியுள்ளன. ​அதிகாரப்பூர்வமாக, அரசியல் காரணங்களால் இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் குறைந்திருந்தன. இருப்பினும், திரைக்குப் பின்னால், தமிழ் போராளி குழுக்களுக்கு எதிராக தனது இராணுவ வலிமையை வலுப்படுத்த இஸ்ரேலின் உதவியை இலங்கை தீவிரமாக நாடியது. ​இது ஒரு…

மேலும் படிக்க